கயல் (திரைப்படம்)

பிரபு சாலமன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கயல் (ஒலிப்பு) என்பது 2014 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கிய இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களான சந்திரன், ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2014 திசம்பர் 24 அன்று வெளியான இத்திரைப்படம் 2004 ஆவது ஆண்டில் நடந்த ஆழிப்பேரலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2]

கயல்
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புமதன்
ஜேம்ஸ்
இசைடி. இமான்
நடிப்புசந்திரன்
ஆனந்தி
வின்சென்ட்
பிரபு
ஒளிப்பதிவுவெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்புசாமுவேல்
கலையகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
காட் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 25, 2014 (2014-12-25)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

இத்திரைப்படம் 24, திசம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது.

ஒலிப்பதிவு தொகு

கயல்
ஒலிப்பதிவு
வெளியீடுநவம்பர் 13, 2014 (2014-11-13)
ஒலிப்பதிவு2014
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்டி. இமான்
டி. இமான் காலவரிசை
'ஜீவா
(2014)
கயல் 'வெள்ளக்கார துரை
(2014)

டி. இமான் இசையமைத்த இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. பிரபு சாலமனின் முந்தைய வெற்றித் திரைப்படங்களான மைனா, கும்கி திரைப்படங்களுக்கும் இவரே இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் 2014 நவம்பர் 13 அன்று சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், ஆர்யா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் பங்கேற்றனர்.[3] பிரபு சாலமன் - டி. இமான் கூட்டணி மீண்டும் ஒருமுறை தமது வெற்றியை நிரூபித்து உள்ளது என பிகைன்ட்வுட்ஸ் பாராட்டியது.[4]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் யுகபாரதி

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பறவையாய் பறக்கிறோம்"  ஹரிசரண் 3:49
2. "எங்கிருந்து வந்தாயோ"  ஷ்ரேயா கோசல் 4:08
3. "கூடவே வரமாதிரி"  அல்போன்ஸ் ஜோசப் 2:07
4. "என் ஆளைப் பாக்கப்போறேன்"  ரஞ்சித், ஷ்ரேயா கோசல் 4:21
5. "உன்ன இப்ப பாக்கணும்"  ஹரிசரண், வந்தனா சீனிவாசன் 4:23
6. "உன்மேல ஆசைவச்சேன்"  ஒரத்தநாடு கோபு 3:32
7. "எங்க புள்ள இருக்க"  பல்ராம் 4:38
மொத்த நீளம்:
26:55

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-22.
  2. "Prabhu Solomon's next titled 'Kayal' - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-09-14. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. http://www.indiaglitz.com/kayal-movie-audio-launch-gallery-images-tamil-3-2182800
  4. http://www.behindwoods.com/tamil-movies/kayal/kayal-songs-review.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயல்_(திரைப்படம்)&oldid=3659730" இலிருந்து மீள்விக்கப்பட்டது