கரச்சர் நோயன்

கரச்சர் நோயன்[note 1] (அண்.1166 – 1243/44 அல்லது 1255/56) என்பவர் செங்கிஸ் கானின் கீழ் பணியாற்றிய ஒரு மங்கோலிய இராணுவத் தலைவர் ஆவார். தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்த தைமூரின் தந்தை வழி மூதாதையர் இந்தக் கரச்சர் நோயன்.

ஆரம்பகால ஆதாரங்களில் இவரைப் பற்றி மிகக் குறைந்த அளவே குறிப்புகள் உள்ளன. அக்குறிப்புகளில் இவர் ஒரு இராணுவ அதிகாரி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. தைமூரிய அரசமரபின் உருவாக்க வரலாற்றில் கரச்சர் நோயன் பற்றிய குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவ்வாறாக கரச்சர் நோயனின் பங்கு மற்றும் உறவு முறைகள், இறுதியாக விரிவாக்கம் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட புராண நிலைக்கு அவை தைமூரிய அவை வரலாற்றாளர்களால் எழுதப்பட்டன. அவர்கள் இவரை ஒரு பரம்பரை உச்ச தலைவர் மற்றும் நிர்வாகியாக சித்தரித்துள்ளனர். ஆளும் குலத்துடன் ஒரு தனித்துவமான நெருக்கம் கொண்டவராகச் சித்தரித்துள்ளனர். அத்தகவல்களில் உள்ள இத்தகைய வேறுபாடுகள் காரணமாக இவரது வாழ்க்கையைப் பற்றிய உண்மையான தகவல்கள் மற்றும் நிலையானது நவீன கல்வியாளர்களிடையே பிரிவை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புகள் தொகு

  1. நோயன் (பட்டம்), roughly translated as "lord", acted as both a military and civil title and was somewhat equivalent to the இசுலாம்ic title emir.[1]

நூற்பட்டியல் தொகு

  • Sneath, David (2007), The Headless State: Aristocratic Orders, Kinship Society, & Misrepresentations of Nomadic Inner Asia, Columbia University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-14054-6

உசாத்துணை தொகு

  1. Sneath (2007), ப. 114.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரச்சர்_நோயன்&oldid=3777522" இலிருந்து மீள்விக்கப்பட்டது