கல்திருப்பி உள்ளான்

பறவை பேரினம்

கல்திருப்பி உள்ளான் (Turnstone) என்பது இரண்டு பறவை சிற்றினங்களைக் கொண்ட பேரினமாகும். இவை இசுகோலோபாசிடே குடும்பத்தில் அரேனரியா பேரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை கேலிட்ரிட் உள்ளான்களுடன் நெருங்கிய தொடர்புடையன. மேலும் கலிட்ரினி இனக்குழு உறுப்பினர்களாகவும் கருதப்படலாம்.[1]

கல்திருப்பி உள்ளான்
செங்கால் கல்திருப்பி உள்ளான், இனப்பெருக்கமில்லா காலத்தில்
கருப்பு கல்திருப்பி உள்ளான், குளிர்காலத்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
துணைக்குடும்பம்:
அரேனாரினே
பேரினம்:
அரேனரியா

பிரிசன், 1760
மாதிரி இனம்
அரேனரியா இன்டர்பிரெசு
லின்னேயஸ், 1758
சிற்றினங்கள்

அரேனரியா இன்டர்பிரெசு
அரேனரியா மெலனோசெபலா

வேறு பெயர்கள்
  • அரினாரியசு துமாண்ட், 1805
  • மோரினெல்லா மேயர் & வூல்ப், 1810
  • இசுட்ரெப்சில்சு கே, 1841
  • இசுட்ரெப்சில்சு லைகர், 1811
  • இசுட்ரெப்சில்சு நட்டல், 1834
  • இசுட்ரெப்சில்சு ஷாவில் இசுடீபன், 1819
  • இசுட்ரெப்சில்சு ஷாவில் இசுடீபன், 1819

விளக்கம் தொகு

1760ஆம் ஆண்டில் பிரான்சு விலங்கியல் நிபுணர் மாதுரின் ஜாக் பிரிசன் என்பவரால் அரேனரியா பேரினமானது செங்கால் கல்திருப்பி உள்ளான் (அரேனரியா இன்டர்பிரெசு) மாதிரி இனத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] அரேனாரியா என்ற பேரினத்தின் பெயர் இலத்தீன் சொல்லான அரேனேரியசு, "மணலில் வசிக்கும்", அரினா "மணல்" என்பதிலிருந்து வந்தது.[4]

அரேனரியா பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன: செங்கால் கல்திருப்பி உள்ளான் (அரேனரியா இன்டர்பிரெசு) மற்றும் கருப்பு கல்திருப்பி உள்ளான் ( அரேனரியா மெலனோசெபலா).[5] இரண்டு சிற்றினங்களும் அலைந்து திரிபவை. இவற்றின் நீளம் பொதுவாக 20 முதல் 25 வரை செ.மீ. வரை இருக்கும். இறக்கை நீட்டம் 50 முதல் 60 செ.மீ. வரை இருக்கும். உடல் எடையானது 110 முதல் 130 கிராம் வரையும், குட்டையான, சற்று மேல்நோக்கி, குடைமிளகாய் வடிவ அலகுகளுடன் கூடியதாக இருக்கும். இவற்றின் பின்புறம், இறக்கைகள் மற்றும் வால் ஆகியவற்றில் வெள்ளை நிற திட்டுகள் உள்ளன. இவை ஆர்க்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்து வலசை செல்லக்கூடியன. இவற்றின் வலுவான கழுத்து மற்றும் சக்திவாய்ந்த, தலைகீழான அலகு இவற்றின் உணவு நுட்பத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த சிற்றினங்கள் முதுகெலும்பில்லாத இரையைத் தேடி கற்கள், கடற்பாசி மற்றும் ஒத்த பொருட்களைக் கவிழ்த்துவிடும் தன்மையுடையன.[6] இவை கடற்கரையோரமாகக் காணப்படுபவை. மணலை விடக் கற்கள் நிறைந்த கடற்கரைகளை விரும்புகின்றன. பெரும்பாலும் ஊதா நிற உள்ளான்களுடன் போன்ற பிற வகை கரைப் பறவைகளுடன் கடற்கரை வாழிடத்தை பகிர்ந்து கொள்கின்றன.

சிற்றினங்கள் தொகு

இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை:

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
  அரேனரியா இன்டர்பிரெசு செங்கால் கல்திருப்பி உள்ளான் உயர் ஆர்க்டிக் பனிச்சமவெளியில் இனப்பெருக்கம் செய்கிறது; கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ள கடற்கரையோரங்களில் குளிர்காலம் காணப்படும்.[7]
  அரேனரியா மெலனோசெபலா கருப்பு கல்திருப்பி உள்ளான் வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அலாஸ்காவில் புல் டன்ட்ராவில் இனப்பெருக்கமும் தெற்கு பாஜா கலிபோர்னியாவில் குளிர்காலத்தில் வலசை போதல்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Thomas, Gavin H.; Wills, Matthew A.; Székely, Tamás (2004). "A supertree approach to shorebird phylogeny". BMC Evolutionary Biology 4: 28. doi:10.1186/1471-2148-4-28. பப்மெட்:15329156.  Supplementary Material பரணிடப்பட்டது 2013-08-02 at Archive.today
  2. Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode Contenant la Division des Oiseaux en Ordres, Sections, Genres, Especes & leurs Variétés (in French and Latin). Paris: Jean-Baptiste Bauche. Vol. 1, p. 48, Vol. 5, p. 132.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Peters, James Lee, ed. (1934). Check-list of Birds of the World. Vol. 2. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 271.
  4. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  5. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Buttonquail, plovers, seedsnipe, sandpipers". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  6. Svensson, Lars et al. Collins Bird Guide 2nd ed. Publisher: Collins 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0007268146
  7. "Ruddy Turnstone - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.
  8. "Black Turnstone - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்திருப்பி_உள்ளான்&oldid=3928682" இலிருந்து மீள்விக்கப்பட்டது