காற்று மாசுபாட்டின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

காற்று மாசுபாட்டின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by air pollution) உலக நாடுகளை அவற்றின் சராசரி அளவிடப்பட்ட துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு எவ்வளவு மைக்ரோகிராம்கள் உள்ளது என்ற அளவின் அடிப்படையில் (µg/m³) வரிசைப்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பு ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் ஆகும். இருப்பினும் பல்வேறு தேசிய வழிகாட்டுதல் மதிப்புகள் நடைமுறையில் உள்ளன. அவை பெரும்பாலும் இதைவிட அதிகமாகவே இருக்கும். காற்று மாசுபாடு என்பது நவீன தொழில்துறை சமூகத்தின் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இது உலகளவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாகிறது. 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் அகால மரணங்கள் காற்று மாசுபாட்டால் நிகழ்ந்துள்ளன. காற்று மாசுபாடு உடலின் ஒவ்வொரு உறுப்பு மற்றும் அமைப்புகளையும் பாதிக்கலாம் என்றும் அது இயற்கையையும் மனிதர்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் தி லான்செட்டு என்ற மருத்துவ செய்தி இதழ் தெரிவிக்கிறது. குறிப்பாக வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளில் காற்று மாசுபாடு ஒரு பெரிய பிரச்சனையாகும். அங்கு உலகளாவிய சுற்றுச்சூழல் தரநிலைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதேயில்லை. இந்த பட்டியலில் உள்ள தரவுகள் வெளிப்புற காற்றின் தரத்தை மட்டுமே குறிக்கின்றன. உட்புற காற்றின் தரம் இங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை. உட்புற காற்றின் தரத்தையும் கணக்கில் கொண்டால் 2019 ஆம் ஆண்டில் கூடுதலாக இரண்டு மில்லியன் அகால மரணங்களை நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.[1]

2019 ஆம் ஆண்டில் 100,000 மக்களில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகள்

பட்டியல் தொகு

அனைத்து தரவுகளும் 2020 ஆம் ஆண்டிற்கு உரியவை ஆகும். சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்று தர வாழ்க்கை குறியீட்டிலிருந்து இவை எடுக்கப்பட்டன. துகள் மாசுபாட்டுடன் கூடுதலாக, துகள் மாசுபாட்டின் காரணமாக மக்கள்தொகையின் ஆயுட்காலத்தில் ஏற்பட்ட இழப்பும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.[2]

தரம் நாடு துகள் அளவு

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள்
வாழ்நாள் இழப்பு
(ஆண்டுகள்)
1   வங்காளதேசம் 75.76 −6.93
2   இந்தியா 55.80 −4.98
3   நேபாளம் 47.13 −4.13
4   பாக்கிஸ்தான் 44.17 −3.84
5   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 34.20 −2.86
6   ருவாண்டா 32.95 −2.74
7   புரூண்டி 31.76 −2.62
8   சீனா 31.63 −2.61
9   மங்கோலியா 31.47 −2.59
10   கமரூன் 31.42 −2.59
11   கட்டார் 29.19 −2.37
12   பூட்டான் 28.71 −2.32
13   எக்குவடோரியல் கினி 28.61 −2.31
14   குவாத்தமாலா 28.45 −2.30
15   லாவோஸ் 28.00 −2.25
16   பொலீவியா 27.92 −2.25
17   Honduras 27.25 −2.18
18   மத்திய ஆபிரிக்கக் குடியரசு 26.91 −2.15
18   உகண்டா 26.91 −2.15
20   El Salvador 25.60 −2.02
21   வியட்நாம் 24.37 −1.90
22   பெரு 23.88 −1.85
23   காபோன் 23.82 −1.84
23   தாய்லாந்து 23.82 −1.84
25   பொசுனியாவும் எர்செகோவினாவும் 23.78 −1.84
26   நைஜீரியா 23.67 −1.83
27   ஈராக் 23.66 −1.83
28   சவூதி அரேபியா 22.97 −1.76
29   லெசோத்தோ 22.94 −1.76
30   துருக்கி 21.58 −1.62
30   கொசோவோ 21.58 −1.56
32   கம்போடியா 20.81 −1.55
33   வட கொரியா 20.64 −1.53
34   மாக்கடோனியக் குடியரசு 20.34 −1.50
35   தென்னாபிரிக்கா 20.33 −1.53
36   தென் கொரியா 20.27 −1.50
37   சிரியா 19.61 −1.43
38   செர்பியா 19.37 −1.41
39   ஆர்மீனியா 19.12 −1.38
40   தஜிகிஸ்தான் 18.63 −1.34
41   இலங்கை 18.60 −1.33
42   பல்கேரியா 17.99 −1.27
43   எகிப்து 17.90 −1.26
44   பாகாரேயின் 17.79 −1.25
45   ஜோர்தான் 17.71 −1.25
46   சாம்பியா 17.68 −1.24
47   கென்யா 17.66 −1.24
48   அங்கோலா 17.37 −1.21
49   குவைத் 17.34 −1.21
50   ஈரான் 17.17 −1.19
51   இந்தோனேசியா 16.99 −1.17
52   பெனின் 16.83 −1.16
53   எதியோப்பியா 16.71 −1.15
54   ஜிபுட்டி 16.65 −1.14
55   தன்சானியா 16.61 −1.14
56   லெபனான் 16.38 −1.12
57   பிலிப்பைன்ஸ் 16.36 −1.11
58   பராகுவே 16.33 −1.11
59   ஆப்கானித்தான் 16.23 −1.10
60   மெக்சிகோ 16.16 −1.10
61   மொண்டெனேகுரோ 15.93 −1.07
62   எக்குவடோர் 15.75 −1.05
63   ஐக்கிய அரபு அமீரகம் 15.44 −1.02
64   டோகோ 15.00 −0.98
65   தெற்கு சூடான் 14.98 −0.98
66   போலந்து 14.97 −0.98
67   கொலம்பியா 14.96 −0.98
68   கிர்கிஸ்தான் 14.92 −0.97
69   மலாவி 14.80 −0.96
70   தாய்வான் 14.53 −0.93
71   ஜார்ஜியா 14.29 −0.91
72   சிலி 14.24 −0.91
73   கசகிசுதான் 14.14 −0.90
74   ருமேனியா 13.80 −0.86
75   குரோசியா 13.75 −0.86
76   உக்ரைன் 13.74 −0.86
77   நிக்கராகுவா 13.32 −0.82
78   கானா 13.10 −0.79
79   சிலவாக்கியா 12.88 −0.77
80   சுவாசிலாந்து 12.83 −0.77
81   அங்கேரி 12.81 −0.77
82   சுலோவீனியா 12.80 −0.76
83   மோல்டோவா 12.76 −0.76
84   இத்தாலி 12.69 −0.75
85   அல்பேனியா 12.68 −0.75
86   மலேசியா 12.65 −0.75
87   இசுரேல் 12.43 −0.73
88   பாலஸ்தீன நாடு 12.39 −0.72
89   சைப்ரஸ் 12.33 −0.72
90 வடக்கு சைப்பிரசு 12.29 −0.71
91   யமேக்கா 12.08 −0.69
92   மாலைதீவுகள் 12.00 −0.69
93   செக் குடியரசு 11.87 −0.67
94   பெலீசு 11.78 −0.66
95   சியெரா லியொன் 11.73 −0.66
96   எரித்திரியா 11.68 −0.65
96   சிம்பாப்வே 11.68 −0.65
98   அசர்பைஜான் 11.66 −0.65
99   அர்ஜென்டினா 11.57 −0.65
100   வெனிசுவேலா 11.45 −0.64
101   Chad 11.44 −0.63
102   பொட்ஸ்வானா 11.35 −0.62
103   கிரேக்கம் 11.18 −0.61
104   லத்வியா 11.16 −0.60
105   ஓமன் 11.11 −0.60
106   பெலருஸ் 11.07 −0.60
107   கோஸ்ட்டா ரிக்கா 11.06 −0.59
108   சிங்கப்பூர் 11.06 −0.59
109   Vatican City 10.90 −0.58
110   பப்புவா நியூ கினி 10.80 −0.57
111   San Marino 10.70 −0.56
112   லைபீரியா 10.67 −0.56
113   கினியா 10.63 −0.55
114   நமீபியா 10.59 −0.55
115   ஐவரி கோஸ்ட் 10.42 −0.53
116   சப்பான் 10.28 −0.52
116   மொசாம்பிக் 10.28 −0.52
118   லித்துவேனியா 10.06 −0.50
119   நைஜர் 10.04 −0.50
120   உருசியா 9.98 −0.49
121   பிரேசில் 9.95 −0.50
122   துருக்மெனிஸ்தான் 9.89 −0.48
123   சூடான் 9.70 −0.46
124   ஆஸ்திரியா 9.65 −0.46
125   மொனாகோ 9.50 −0.40
126   எய்ட்டி 8.72 −0.37
127   Gibraltar 8.70 −0.36
128   லெய்செஸ்டீன் 8.55 −0.35
129   துனீசியா 8.42 −0.34
130   கினியா-பிசாவு 8.23 −0.32
131   கிழக்குத் திமோர் 8.04 −0.30
132   இடாய்ச்சுலாந்து 8.02 −0.30
133   பெல்ஜியம் 7.91 −0.28
134   சுவிட்சர்லாந்து 7.84 −0.28
135   நெதர்லாந்து 7.82 −0.28
136   பனாமா 7.77 −0.27
137   உருகுவே 7.76 −0.27
138   புர்கினா ஃபாசோ 7.62 −0.26
139   மொரோக்கோ 7.43 −0.25
140   ஐக்கிய இராச்சியம் 7.24 −0.22
141   பிரான்ஸ் 7.20 −0.22
142   லக்சம்பேர்க் 7.19 −0.21
143   ஐக்கிய அமெரிக்கா 7.05 −0.21
143   மடகாஸ்கர் 7.05 −0.23
145   சோமாலியா 6.96 −0.20
146   டென்மார்க் 6.94 −0.19
147   கம்பியா 6.78 −0.17
148   ஸ்பெயின் 6.69 −0.18
149   லிபியா 6.67 −0.17
150   டொமினிக்கன் குடியரசு 6.66 −0.19
151   மால்ட்டா 6.50 −0.15
152   அந்தோரா 6.39 −0.14
153   கியூபா 6.07 −0.11
154   கனடா 5.61 −0.08
155   கயானா 5.55 −0.06
156   பக்ரைன் 5.54 −0.05
157   மாலி 5.51 −0.07
158   அல்ஜீரியா 5.47 −0.06
158   சொலமன் தீவுகள் 5.47 −0.05
160   காமரோஸ் 5.45 −0.04
161   செனகல் 5.30 −0.07
162   எசுத்தோனியா 5.16 −0.05
163   போர்த்துக்கல் 5.02 −0.03
164   சுரிநாம் 4.90 −0.02
165   ஆஸ்திரேலியா 4.66 −0.07
166   அயர்லாந்து 4.56 0.00
167   சுவீடன் 4.56 −0.02
168   பின்லாந்து 4.10 0.00
169   நோர்வே 3.79 0.00
170   மொரீசியஸ் 3.61 0.00
171   திரினிடாட் டொபாகோ 3.43 0.00
172   மவுரித்தேனியா 3.20 0.00
173   வனுவாட்டு 3.07 0.00
174   சிஷெல்ஸ் 3.06 0.00
175   பகாமாசு 2.85 0.00
176   நியூசிலாந்து 2.67 0.00
177   Puerto Rico 2.25 0.00
178   ஐஸ்லாந்து 2.11 0.00
179   டொமினிக்கா 2.04 0.00
180   கிரெனடா 1.92 0.00
181   செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 1.91 0.00
182   பார்படோசு 1.86 0.00
183   செயிண்ட். லூசியா 1.78 0.00
184   பலாவு 1.77 0.00
185   கேப் வேர்டே 1.76 0.00
186   அன்டிகுவா பர்புடா 1.75 0.00
187   பிஜி 1.52 0.00
188   துவாலு 1.26 0.00
189   தொங்கா 1.03 0.00
190   நவூரு 1.00 0.00
191   கிறீன்லாந்து 0.90 0.00
192   சமோவா 0.84 0.00
193   கிரிபட்டி 0.81 0.00
194   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 0.60 0.00
195   மார்ஷல் தீவுகள் 0.56 0.00

மேற்கோள்கள் தொகு

  1. Ritchie, Hannah; Roser, Max (2013-11-16). "Indoor Air Pollution". Our World in Data. https://ourworldindata.org/indoor-air-pollution. 
  2. "The Air Quality Life Index (AQLI)". AQLI (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.

புற இணைப்புகள் தொகு