கிருட்டிணகிரி குள்ள மரப்பல்லி

கிருட்டிணகிரி குள்ள மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. கிருட்டிணகிரியென்சிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு கிருட்டிணகிரியென்சிசு
அகர்வால் மற்றும் பலர், 2021

கிருட்டிணகிரி குள்ள மரப்பல்லி (Krishnagiri dwarf gecko)(நெமாசுபிசு கிருட்டிணகிரியென்சிசு) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி ஆகும்.[1]

விளக்கம் தொகு

கிருட்டிணகிரி குள்ள மரப்பல்லியின் தலை, உடல், கைகால்கள் மற்றும் வால் வெளிர் பழுப்பு நிறத்திலும் தலை மற்றும் முதுகு முழுவதும் கருமையான புள்ளிகளுடன் காணப்படும். இதனுடைய குறிப்பிட்ட சிற்றினப் பெயரானது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் இந்த சிற்றினத்தின் வகை அறியப்பட்ட பகுதியிலிருந்து பெறப்பட்டது.

இது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. பகலாடி வகையினைச் சார்ந்த பாறையில் வசிக்கும் இந்த மரப்பல்லி பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. AGARWAL, ISHAN; TEJAS THACKERAY, AKSHAY KHANDEKAR 2021. A new medium-sized rupicolous Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) of the C. bangara clade from granite boulder habitats in Krishnagiri, Tamil Nadu, India. Zootaxa 4969: 351–366