கீழ்த்தளி மகாதேவர் கோயில்

கீழ்த்தளி மகாதேவா கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூரில் உள்ள, சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான இந்துக் கோயிலாகும். சேர சாம்ராஜ்யத்தின் முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். பரசுராமர் இங்குள்ள சிவன் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. இக்கோயில் கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும். [1] [2] 108 சிவன் கோயில்களில் (1. தளி கோயில், கோழிக்கோடு, 2. கடுத்திருத்தி மகாதேவர் கோயில், கோட்டயம், 3. கீழ்த்தளி மகாதேவர் கோயில், கொடுங்கல்லூர், 4. தாலிகோட்டா மகாதேவர் கோயில், கோட்டயம்) குறிப்பிடப்பட்டுள்ள நான்கு தளி கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் கீதோளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு தொகு

பண்டைய கேரளா மற்றும் அதன் நிர்வாக கட்டமைப்புகளில் தளி எனப்படுகின்ற சில கோயில்களின் அமைப்புகள் காணப்படுகின்றன. கீஹி தளி, அறத்தளி, மேல்தளி, நெடியதளி மற்றும் சிங்புருத்து தளி எனப்படுகின்ற ஐந்து தளிக்கோயில்கள் பண்டைய சேர இராச்சியத்தில் உள்ளன. இந்த கோயில்கள் பண்டைய கேரளாவின் 108 சிவன் கோவில்களில் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. மேல்தளி கோயிலைப் பற்றி இன்னும் எதுவும் அறியப்படவில்லை.(இது ஆற்றில் இருக்க வாய்ப்பு உண்டு)? திருவஞ்சிக்குளத்திற்கு அருகில் உள்ள கொட்டரித்தி கோயில்களில் அறத்தளி இருப்பதாக நம்பப்படுகிறது.

விழா மற்றும் தினசரி பூஜை தொகு

இக்கோயிலில் மூன்று கால பூஜைகள் வழக்கமாக நடைபெறுகின்றன. (உஷா பூஜை, நண்பகல் பூஜை மற்றும் அத்தாழ பூஜை). கோயிலில் சிவராத்திரி விழா பொதுவாக மலையாள கும்ப மாதத்தில் (பிப்ரவரி - மார்ச்) கொண்டாடப்படுகிறது.

கோயில் அமைப்பு தொகு

கீழத்தளி மகாதேவர் கோயில் கேரள மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தைக் கொண்ட கோயிலாகும். மைசூர் சுல்தான் திப்புவின் முகாமின்போது அழிக்கப்பட்ட சில இந்துக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
  2. "Petuel data world.com/Temple/Cheranalloor-Shiva-Temple".