குப்தேசுவர் மகாதேவ் குகை

நேபாள நாட்டில் உள்ள ஒரு குகை

குப்தேசுவர் மகாதேவ் குகை (Gupteshwor Mahadev Cave) நேபாள நாட்டின் காசுக்கி மாவட்டத்தின் பொக்காரா நகரத்திலுள்ள சோரேபட்டான் என்ற பகுதியில் டேவிசு நீர்வீழ்ச்சிக்கு எதிரே அமைந்துள்ள ஒரு குகையாகும். குப்தேசுவர் மகாதேவ் குகை பொக்காராவின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

குப்தேசுவர் மகாதேவ் குகை
Gupteshwor Mahadev Cave
गुप्तेश्वर महादेव गुफा
குப்தேசுவர் மகாதேவ் குகை
அமைவிடம்பொக்காரா, நேபாளம்
ஆள்கூறுகள்28°11′22″N 83°57′28″E / 28.189552°N 83.957847°E / 28.189552; 83.957847Nepal
நீளம்2950 m
வாயில்கள்1
இணையதளம்https://gupteshworcave.com.np/

1950 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குப்தேசுவர் மகாதேவ் குகை நேபாளத்தின் மிக நீளமான (2950 மீட்டர்) குகையாக கருதப்படுகிறது. டேவிசு அருவியின் நீர் இந்த குகை வழியாக செல்கிறது. குகைக்குள் மிகப்பெரிய சிவலிங்கங்கத்துடன் கூடிய ஒரு சிவன் கோயில் உள்ளது. இந்த நிலத்தடி கோவில் ஆண்டின் 365 நாட்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பரபரப்பாக இருக்கும். குறைந்த வெளிச்சமும் ஈரமான குறுகிய பாதைகளும் இருப்பதால் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் இந்த இடத்திற்குச் செல்ல பரிந்துரைக்கப்படுவதில்லை.[1][2]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Gupteshwor Mahadev Cave | Pokhara, Nepal Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  2. "Gupteshwor Mahadev Cave, Gupteswar Mahadev Cave Pokhara". Vivaan Adventure (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.