கே. எஸ். முத்துசாமி

பிறப்பு தொகு

கே. எஸ். முத்துசாமி ஆச்சாரி தூத்துக்குடி மாவட்டத்தில், கயத்தார் எனும் ஊரில் கே. சங்கரநாராயண ஆசாரி – பூரணத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக 14-10-1905 ஆம் ஆண்டு பிறந்தார்.

பள்ளி பருவம் தொகு

சத்திரிய நாடார் வித்யாசாலையில் காமராசரும் முத்துசாமி ஆசாரியும் உடன்பயின்ற நெருக்கமான நண்பர்கள் ஆவர். முத்துசாமிக்குப் பள்ளி படிப்பில் இருந்த ஆர்வத்தைக் காட்டிலும் உலக நடப்பில் ஆர்வம் மிகுந்திருந்தது[சான்று தேவை].

ஆரம்பகால அரசியல் அறிவும் ஆர்வமும் தொகு

1919 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, மகாத்மா காந்தியின் அறவழிப் போராட்டம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு 1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமைப் போராட்டத்தில் இறங்கும்போது இவருக்கு வயது 15 ஆகியிருந்தது.

விடுதலை தாக்கமும் ஈடுபாடும் தொகு

நாகபுரி கொடிப் போராட்டம், ஆயுதப்போராட்டம் முதலியவற்றில் கலந்துகொள்ள முத்துசாமி மற்றும் காமராசர் குழுவினருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தாலும் மதுரை மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் வயது காரணமாகப் பொறுத்திருக்கச் சொன்னதால் பொறுமை காத்தனர்[சான்று தேவை].

கள்ளுக்கடை மறியல் தொகு

1923ஆம் ஆண்டில் மதுரைநகரில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் தொடங்கிய போது 18 வயதாகிய முத்துசாமியும், காமராசரும் மதுரை சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அடித்து விரட்டுவதும் இன்னொரு இடத்திற்கு சென்று போராட்டம் செய்வதுமாக ஈடுபட்டனர்.

காங்கிரசில் ஈடுபாடு மற்றும் முழக்கம் தொகு

விருதுநகரில் காங்கிரஸ் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். நீதிக்கட்சி பிரமுகர்கள் கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதை உணர்ந்த முத்துசாமி, இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, கூட்டத்தை நடத்திக் காட்டினார்.

திருமணமும், சிறைவாழ்வும் தொகு

1930 ம்ஆண்டு ஜுன் மாதம் 4 ஆம் தேதி கயத்தாரில் கே. எஸ். முத்துசாமி திருமணம் செய்த கையோடு விருதுநகர் சென்று 1930 ஜுன் 09 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் தண்டியில் காந்தி கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் அன்று மாலையே மாபெரும் கூட்டத்தை நடத்தி உப்புசத்தியாகிரகப் போராட்டத்தை ஆதரித்து பேசியதால் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையை திருச்சி, வேலூர் மற்றும் பெல்லாரி சிறைகளில் கழித்தார். அப்பொழுது இராமநாதபுரம் இந்திய தேசிய காங்கிரசு கமிட்டியின் செயலாளராக கே. எஸ். முத்துசாமி ஆச்சாரி செயல்பட்டார். காமராசர் மாவட்டக் கமிட்டியின் உறுப்பினராக இருந்தார்.

அன்னிய துணி மறுப்பு போரட்டம் தொகு

1932 இல் அன்னியத்துணி மறுப்பு போராட்டம் தொடங்கிய போது அதில் பங்கு கொண்டு பொதுகூட்டத்தில் பேசியதால் ஓராண்டு சிறை விதித்தது ஆங்கிலேய ஆட்சி.

வெடிகுண்டு சதி வழக்கு தொகு

1933 ஆம் விருதுநகர் தபால் நிலையத்தை வெடிகுண்டு வீசித் தகர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக கே. எஸ். முத்துசாமியும், இரண்டாம் குற்றவாளியாக காமராசரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த முதல் வகுப்பு நீதிபதி ஜே. பி. எல் மன்றோ முத்துசாமியும் காமராசரும் ஓரு வெடிகுண்டுச் சதியை இவ்வளவு பலவீனமாகத் திட்டமிட்டிருப்பார்கள் என நம்பமுடியவில்லை என்று கூறி விடுதலை செய்து, வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

காங்கிரசு மாநாடும் காமராசர் வெற்றியும் தொகு

1937 ஆம் ஆண்டில் சட்டசபைத்தேர்தல் நடந்தது. விருதுநகர் தொகுதியல் நீதிக்கட்சி சார்பில் வி. வி. ராமசாமி நாடார் போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசு தரப்பில் பார்லிமெண்டரி போர்டு தலைவர் சத்தியமூர்த்தியும், முத்துரங்க முதலியாரும் வேறு வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தனர். அப்போழுது பெய்ஸ்பூர் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற கே. எஸ். முத்துசாமி பார்லிமெண்டரி குழுத்தலைவரான சர்தார் பட்டேலிடம் வாதாடி விருதுநகர் தொகுதிக்குக் காமராசரை வேட்பாளர் என்று அறிவிப்பு செய்தார். தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து நண்பரான காமராசரை வெற்றிப்பெற செய்தார்.

காங்கிரசில் முக்கிய பொறுப்பு தொகு

அதே ஆண்டில் வத்தலகுண்டில் நடந்த மாநாட்டில் மாநில செயலாளராக கே. எஸ். முத்துசாமி ஆச்சாரி பொறுப்பெற்றார். பின்னர் எற்பட்ட பூசலில் சத்தியமூர்த்தியை கே. எஸ். முத்துசாமியும், காமராசரும் ஆதரித்து ராஜாஜியை எதிர்த்தனர். பிறகு சத்தியமூர்த்தியே தமிழக காங்கிரசு தலைவரானார்.

விருதுநகர் இரட்டையர்கள் தொகு

விருதுநகரின் அரசியல் இரட்டையர்கள் என்று அழைக்கப்பட்ட முத்துசாமியும், காமராசரும் மாநில செயலாளர்களானார்கள். 1940-இல் காமராசை, ராஜாஜி குழுவின் சி. பி. சுப்பையாவுக்கு எதிராகப் போட்டியிடச்செய்து தமிழ்நாடு காங்கிரசு தலைவராக்கியதில் கே. எஸ். முத்துசாமி, முத்துராமலிங்கதேவர், வல்லத்தரசு, சிதம்பரபாரதி, சத்தியமூர்த்தி ஆகியோரின் பங்கு மகத்தானகும்.

அரசியல் குரு தொகு

இந்தியா சுகந்திரம் அடைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக அப்போதைய பாரதபிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுமார் 30 ஆண்டுகள் தமிழக அரசியலை தன் கட்டுபாட்டில் கீழ் வைத்துகொண்டு பல மந்திரி சபைகளை ஆக்கவும் அழிக்கவும் செய்தார். நேருவின் மரணத்திற்கு பிறகு இந்தியாவின் பிரதமர் பதவிக்கு எழுந்த போட்டியை மூன்று முறை சமாளித்த இந்திய அரசியல் வழிகாட்டியான காமராசருக்கே ஆரம்ப கால அரசியல் வழிகாட்டியாக இருந்தவர்.[சான்று தேவை]

தாமிரப்பட்டயம் தொகு

இந்தியாவின் சார்பில் அப்போதைய பாரதபிரதமர் இந்திரா காந்தி கே. எஸ். முத்துசாமிக்கு 15-08-1972 அன்று தாமிரப்பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்கள்.[சான்று தேவை]

இறுதி வாழ்வு தொகு

கே. எஸ். முத்துசாமி ஆசாரி 16-12-1972 இல் மறைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._முத்துசாமி&oldid=3943451" இலிருந்து மீள்விக்கப்பட்டது