கோலா லங்காட் மக்களவைத் தொகுதி

(கோலா லங்காட் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலா லங்காட் மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Kuala Langat; ஆங்கிலம்: Kuala Langat Federal Constituency; சீனம்: 瓜拉冷岳国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P112) ஆகும்.

கோலா லங்காட் (P112)
மலேசிய மக்களவை தொகுதி
சிலாங்கூர்
Shah Alam (112)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
கோலா லங்காட் மக்களவைத் தொகுதி

மாவட்டம்கோலா லங்காட் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிகோலா லங்காட் தொகுதி
முக்கிய நகரங்கள்பந்திங்; ஜுக்ரா தெலுக் டத்தோ, மோரிப், கேரி தீவு
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
நீக்கப்பட்ட காலம்கோலா லங்காட் (1958)
கட்சி பெரிக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
(2022)
மக்களவை உறுப்பினர்அகமத் யூனுஸ் அயிரி
(Ahmad Yunus Hairi)
வாக்காளர்கள் எண்ணிக்கை151,707 (2023)[1]
தொகுதி பரப்பளவு582 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் கோலா லங்காட் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (55.1%)
  சீனர் (23.59%)
  இதர இனத்தவர் (4.13%)

கோலா லங்காட் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1959-ஆம் ஆண்டில் இருந்து கோலா லங்காட் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பந்திங் நகரம் தொகு

பந்திங் நகரம், சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தின் தலைப்பட்டணம் ஆகும். சிலாங்கூரின் முன்னாள் அரச நகரமான ஜுக்ரா, பந்திங் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. இந்த நகருக்கு மிக அருகில் மோரிப் கடற்கரைகள் உள்ளன.[5]

1950-ஆம் ஆண்டுகளில் பந்திங் சுற்று வட்டாரங்களில் நிறைய ரப்பர் தோட்டங்கள்; தென்னை தோட்டங்கள்; காபி தோட்டங்கள் இருந்தன. அவற்றுள் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். 1882-ஆம் ஆண்டில் பந்திங், ஜுக்ரா பகுதிகளில் பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. முதலில் இது ஒரு வாழைத் தோட்டம் ஆகும். பின்னர் ஆமணக்கு தோட்டம்; அதன் பின்னர் காபி பயிர்த் தோட்டம். அதற்கு அடுத்து தென்னைத் தோட்டமாக மாறியது. இந்தத் தோட்டத்திற்குத் தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.[6]

கோலா லங்காட் மாவட்டம் தொகு

கோலா லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம், கிள்ளான் மாவட்டம்; தெற்கில் சிப்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன..[7] கோலா லங்காட் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: பந்திங்; ஜுக்ரா; தெலுக் டத்தோ; மோரிப் மற்றும் கேரி தீவு. கோலா லங்காட் மாவட்டம் எண்ணெய் பனை வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் மாவட்டமாகும்.

கோலா லங்காட் மக்களவை தொகுதி தொகு

கோலா லங்காட் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1959- 2022)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சிலாங்கூர் பாராட்; லங்காட் தொகுதிகளில் இருந்து 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P075 1959–1963 அப்துல் அசீஸ் இசாக்
(Abdul Aziz Ishak)
மலேசியக் கூட்டணி
(அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது மலேசிய மக்களவை P075 1963–1964 அப்துல் அசீஸ் இசாக்
(Abdul Aziz Ishak)
தேசிய மாநாட்டுக் கட்சி
2-ஆவது மலேசிய மக்களவை 1964–1969 முகமது தாகிர் அப்துல் மஜித்
(Mohd. Tahir Abdul Majid)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1969–1971 நாடாளுமன்றம் ஒத்திவைப்பு[8]
3-ஆவது மலேசிய மக்களவை P075 1971–1973 முகமது தாகிர் அப்துல் மஜித்
(Mohd. Tahir Abdul Majid)
மலேசியக் கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மலேசிய மக்களவை P082 1974–1978 ஆயிசா கனி
(Aishah Ghani)
5-ஆவது மலேசிய மக்களவை
6-ஆவது மலேசிய மக்களவை
7-ஆவது மலேசிய மக்களவை P094 1986–1990 பசுரி பசூரி
(Basri Bajuri)
8-ஆவது மலேசிய மக்களவை
9-ஆவது மலேசிய மக்களவை P101 1995–1999 சாபி சாலே
(Shafie Salleh)
10-ஆவது மலேசிய மக்களவை
11-ஆவது மலேசிய மக்களவை P112 2004–2008
12-ஆவது மலேசிய மக்களவை 2008–2013 அப்துல்லா சானி அப்துல் அமீத்
(Abdullah Sani Abdul Hamid)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
13-ஆவது மலேசிய மக்களவை 2013–2018
14-ஆவது மலேசிய மக்களவை 2018–2021 சேவியர் செயக்குமார்
(Xavier Jayakumar Arulanandam)
பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)
2021–2022 சுயேச்சை
2022 மலேசிய இனக் கட்சி
15-ஆவது மலேசிய மக்களவை 2022–தற்போது அகமத் யூனுஸ் அயிரி
(Ahmad Yunus Hairi)
பெரிக்காத்தான்
(மலேசிய இசுலாமிய கட்சி)

கோலா லங்காட் மக்களவை தேர்தல் முடிவுகள் தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
148,637 - -
வாக்களித்தவர்கள்
(Turnout)
125,449 83.33%   -4.01
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
123,860 100.00% -
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
153 - -
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,436 - -
பெரும்பான்மை
(Majority)
1,833 1.48%   -17.94
வெற்றி பெற்ற கட்சி:   பெரிக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[9]

கோலா லங்காட் மக்களவை வேட்பாளர் விவரங்கள் தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சுபாங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  அகமத் யூனுஸ் அயிரி
(Ahmad Yunus Hairi)
பெரிக்காத்தான் நேசனல் (PN) 52,867 42.68% +42.68  
  மணிவண்ணன் கோவிந்தசாமி
(Manivannan Gowindasamy)
பாக்காத்தான் அரப்பான் (PH) 51,034 41.20% -7.88  
  மோகனா முனியாண்டி
(Mohana Muniandy Raman)
பாரிசான் நேசனல் (BN) 18,685 15.09% -14.57  
  ரிசுவான் அப்துல்லா
(Ridzuan Abdullah)
உள்நாட்டு போராளிகள் கட்சி
(GTA / PEJUANG)
591 0.48% +0.48  
  சனாரியா சுமுரி
(Zanariah Jumhuri)
சுயேச்சை 512 0.41% 0.41  
  கேவசன் முருகேசன்
(Gaveson Murugeson)
மலேசிய மக்கள் கட்சி
(Parti Rakyat Malaysia)
171 0.14% +0.14  

மேற்கோள்கள் தொகு

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. https://www.mycensus.gov.my/index.php/census-product/publication/census-2020/myparlimen
  5. Activities, Filed under; trips, Day; Langat, Kuala (7 April 2017). "Jugra was the royal capital of Selangor; its well-preserved buildings are good examples of the artistry and grandeur of its glamorous past". Visit Selangor. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  6. "Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources - Southeast Asia Visions". seasiavisions.library.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  7. "BACKGROUND". luas.gov.my.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
  9. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு