சரிபா கபாரி

மைதான் சாரின் நகரத் தந்தை

சரிபா கபாரி (Zarifa Ghafari; பிறப்பு 1992) [1] ஒரு ஆப்கான் ஆர்வலரும், அரசியல்வாதியும் ஆவார்.[2] [3] நவம்பர் 2019இல், இவர் ஆப்கானித்தானின் வர்தகு மாகாணத்தின் தலைநகரான மைதான் சாரின் நகரத் தந்தையானார்.[4] ஆப்கானித்தான் பெண் நகரத் தந்தைகளில் ஒருவராக இவர் இருந்தார். மேலும் 26 வயதில் நியமிக்கப்பட்ட இளையவர் ஆவார்.[5] ஆப்கானித்தானில் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர். [6] 2020ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவு செயலாளரால் சர்வதேச வீரதீர பெண்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் மூன்று கொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளார்.[8]

சரிபா கபாரி
2020இல் சரிபா கபாரி
மைதான் சாரின் நகரத் தந்தை
பதவியில்
நவம்பர் 2019 – ஆகத்து 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1992 (அகவை 31–32)
பாக்டியா மாகாணம், ஆப்கானித்தான்
தேசியம்ஆப்கன்
முன்னாள் கல்லூரிபஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
வேலைதொழில் முனைவு
நகரத் தந்தை
விருதுகள்சர்வதேச வீரதீர பெண்கள் விருது

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், 1992 ல் காபுலில் ஆப்கானித்தான் இராணுவ அதிகாரியும் சிறப்பு அதிரடிப்படையில் தளபதியுமான அப்துல் வாசி கபாரி என்பவரின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை நவம்பர் 5, 2020 அன்று காபுலில் உள்ள தனது வீட்டின் முன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சரிபா தனது ஆரம்பக் கல்விக்காக பாக்டியா மாகாணத்தில் உள்ள அலிமா கசான் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், இந்தியாவின் சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

நகரத் தந்தை தொகு

ஆப்கானித்தானின் குடியரசுத் தலைவர் அசரஃப் கனியால் இவர் சூலை 2018 இல் மைதான் சாரின் நகரத் தந்தையாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.[9] இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆப்கானித்தானின் இளைய நகரத் தந்தையாக ஆனார். ஆனால் சில ஆதாரங்கள் தவறுதலாக ஆப்கானித்தானின் முதல் பெண் நகரத் தந்தை என்று சாரிபாவை கூறுகிறார்கள்.[10] எனினும், இவரது வயது மற்றும் பாலினம் குறித்தும் உள்ளூர் அரசியல்வாதிகள் எதிர்ப்புகளாலும் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் நகரத் தந்தையாக பணியேற்பது ஒன்பது மாதங்கள் தாமதமாக இருந்தது.[11]

கொலை முயற்சி தொகு

ஆப்கானித்தானில் மற்ற பெண் நகரத் தந்தைகளும் இருந்தனர், ஆனால் பொதுவாக கலாச்சாரத்தை பொறுத்துக்கொள்ளக்கூடிய பகுதிகளில் காணப்படுகின்றனர். பாரம்பரியமாக பழமைவாத மாகாணமான வர்தகு மாகாணம் போன்ற இடங்களில் தலிபான்கள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளனர். இவர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை வகித்தார். நகரத் தந்தையாக முதல் நாளில், இவர் பதவியை விட்டு விலகுமாறு எச்சரித்த ஒரு குழுவினரின் தொல்லைகளை எதிர்கொண்டார்.[12] இவர் நகரத் தந்தையாகப் பொறுப்பேற்ற பிறகு தாலிபான் மற்றும் இசுலாமிய அரசு ஆகியோரிடமிருந்து மரண அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார். சாரிபா 2019 மார்ச் மாதம் மைதான் சாகரின் நகரத் தந்தையாகப் பதவியேற்றார். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, இவர் காபுலில் வசித்து வந்தார். தனது நகரத்தில் குப்பை எதிர்ப்பு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்த முடிந்தது. மேலும் இவர் மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்.[13]

இவரது தந்தை துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்ட பிறகு, "இதை தலிபான்கள்தான் செய்துள்ளனர். மைதான் சாரில் என்னை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் என் தந்தையைக் கொன்றார்கள்" என்று கூறினார்.[14] தலிபான்களுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம் இவர் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்தார்.[15]

விருதுகள் தொகு

பிபிசியால் 2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலுமிருந்து 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குள்ள பெண்களின் பட்டியலில் இவர் இடம் பெற்றார். [16] அமெரிக்க வெளியுறவு செயலாளரால் சாரிபா 2020 இல் சர்வதேச வீரதீர பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [17]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Zarifa Ghafari - RUMI AWARDS பரணிடப்பட்டது 2021-01-23 at the வந்தவழி இயந்திரம், rumiawards.com
  2. ‘They will come and kill me,’ says Afghanistan’s first female mayor, smh.com.au, 17 August 2021
  3. Who is Zarifa Ghafari? All you need to know about Afghanistan's 1st female mayor who is 'waiting for Taliban to come and kill her', freepressjournal.in, August 18, 2021
  4. News, Ariana. "ROKH: Interview with Zarifa Ghafari, the Mayor of Maidan Wardak province". Ariana News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-20. {{cite web}}: |last= has generic name (help)
  5. "Afghan Mayor Zarifa Ghafari Risks Her Life for Her Community". Time (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
  6. "Education Is the Key to Empowering Afghan Women". thediplomat.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  7. "2020 International Women of Courage Award". United States Department of State (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
  8. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  9. "Female Mayor in Afghanistan Anticipates Her Impending Assassination". therealistwoman (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-23. Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  10. "What the Return of the Taliban Means for Women and Girls in Afghanistan". V Magazine. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  11. "Newly-appointed female Afghan mayor barred from taking office". The Khaama Press News Agency (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  12. "Afghan Town's First Female Mayor Awaits Her Assassination". https://www.nytimes.com/2019/10/04/world/asia/zarifa-ghafari-afghanistan-maidan-shar.html. 
  13. {{Cite web|url=https://www.state.gov/2020-international-women-of-courage-award/%7Ctitle=2020 International Women of Courage Award|website=United States Department of State|language=en-US|
  14. "An Afghan Mayor Expected to Die. Instead, She Lost Her Father.". https://www.nytimes.com/2020/11/06/world/asia/afghanistan-mayor-zarifa-ghafari.html. 
  15. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  16. "BBC 100 Women 2019: Who is on the list?" (in en-GB). 2019-10-16. https://www.bbc.com/news/world-50042279. 
  17. "2020 International Women of Courage Award". United States Department of State (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-13."2020 International Women of Courage Award". United States Department of State. Retrieved 2020-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிபா_கபாரி&oldid=3664211" இலிருந்து மீள்விக்கப்பட்டது