சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள

சுப்பிரமணியம் பூங்கா எனப் பொதுவாக அறியப்படும் சுப்பிரமணியம் சிறுவர் பூங்கா இலங்கையின் வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாண நகரில் உள்ள ஒரு நகர்ப்புறப் பூங்கா. இது யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது.

சுப்பிரமணியம் பூங்கா
Subramaniam Park
வகைநகரப் பூங்கா
அமைவிடம்யாழ்ப்பாணம், இலங்கை
ஆள்கூறு9°39′39.60″N 80°00′45.50″E / 9.6610000°N 80.0126389°E / 9.6610000; 80.0126389
Operated byயாழ்ப்பாண மாநகரசபை

வரலாறு தொகு

சுப்பிரமணியம் பூங்கா, 1950களில் அப்போதைய யாழ்ப்பாணம் நகரசபையால் உருவாக்கப்பட்டது. உள்ளூர் மருத்துவரான எஸ். சுப்பிரமணியம் இதற்குத் தேவையான பெருந்தொகைப் பணத்தை நகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.[1][2] இதனால் இப்பூங்காவுக்கு அவருடைய பெயரில் சுப்பிரமணியம் பூங்கா எனப் பெயரிடப்பட்டது.[1] பின்னாளில் உடுவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி. தர்மலிங்கம் இவருடைய மருமகன்.[1]

உள்நாட்டுப் போர்க் காலத்தில் இது பெருமளவு சேதம் அடைந்தது. குறிப்பாக 1990ல் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கைகளில் இது முற்றாகவே அழிவுற்றது.[2][3] தொடர்ந்து 14 ஆண்டுகள் பயன்படாமல் இருந்த இப்பூங்கா 2004 ஆம் ஆண்டில், யுனிசெவ் வழங்கிய 2 மில்லியன் இலங்கை ரூபாவைப் பயன்படுத்தி திருத்தி அமைக்கப்பட்டது.[3] திருத்தப்பட்ட பூங்காவை 2006 மே 7ம் தேதி அப்போதைய மாவட்டச் செயலாளர் கே. கணேஷ் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.[4] 2010ல் பூங்காவின் முக்கிய அம்சமாக இருந்த அலங்கார நீரூற்று கொழும்பைச் சேர்ந்த தனியார் நிறுவனமான எல். பி. பினான்ஸ் நிறுவனத்தினால் திருத்தி அமைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள் தொகு