தாதாரியா

சத்தீஸ்கர் மாநில நாட்டுப்புற இசையின் ஒரு வடிவம்

தாதாரியா (சத்தீஸ்கர்: ददरिया) என்பது இந்தியாவின் சத்தீஸ்கர் [1] மாநிலத்தில் பாடப்படும் பல்வேறு வகையான நாட்டுப்புற பாடல்கள் அல்லது களப் பாடல் வகைகளில் ஒன்றாகும். இந்தப் பாடல்கள் 1970 களுக்கு முன்னர் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு பகுதியாகவும் அங்குள்ள மக்களிடம் மிகவும் பிரபலமானவையாகவும் இருந்தன, மேலும் நெல் வயல்களில் அறுவடை செய்யும் போதும் ஓய்வு நேரத்தின் போதும் கிராமத்து ஆண்கள் அல்லது பெண்களால் பாடப்பட்டன. 1980களின் பிற்பகுதியில், ஆண்-பெண் இடையேயான 'கேள்வி மற்றும் பதில்' என்னும் முறையில் அமைந்த இந்த பாடல் முறையின் அந்தரங்க மொழிதன்மையின் காரணமாக, இந்தப் பாடல்களை எந்த ஒரு ஆணும் ஒரு பெண் அல்லது பெண் ஒரு ஆணின் முன்பாக தனிப்பட்ட முறையில் பாடுவது என்பது  சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்பட்டது. தாதாரியா பாடல்கள் இப்போது ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாக்கள் மற்றும் சிறிய வட்டுகளில் ஆடியோ மற்றும் வீடியோவில் கிடைக்கின்றன. பிரபல தொழில்முறை தாதாரியா பாடகர்களில் ஷேக் ஹுசைன் [2] மற்றும் மம்தா சந்திரகர் ஆகியோர் அடங்குவர்.

டெல்லி-6 திரைப்படத்தின் புகழ்பெற்ற பாடலான சசுரல் கெண்டா பூல் ஒரு தாதாரியா வகையை தழுவி எடுக்கப்பட்டதாகும். [3]

குறிப்பிடத்தக்க தாதாரியா பாடல்கள் தொகு

கீழே சில பிரபலமான தாதாரியா பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. [4]

  1. சனா கே டார் ராஜா சனா கே டார் ராணி
  2. படா தே ஜா ரே, படா லே ஜா ரே கடிவாலா
  3. ஏக் பைசா கே பாஜி லா டு பைசா மா தேஹே ஓ
  4. கா தை மோலா மோஹ்னி தார் தேஹே கோண்டா பூல்
  5. காதா கூந்தி கே ரெங்கோயா கம்ரா கும்ரி கே ஓதோய்யா தயா மாயா லே ஜா ரே
  6. அட்பாட் கோதியதாஸ் தைன் மன் கே பரம் லா ஓ
  7. லகே ரைதே திவானா டோர் பார் மோர் மாயா லகே ரைதே

மேற்கோள்கள் தொகு

  1. "Field Songs of Chhattisgarh"
  2. "Famous Dadaria Singers"
  3. "Genda Phool". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
  4. "Popular Dadaria Songs"
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதாரியா&oldid=3657445" இலிருந்து மீள்விக்கப்பட்டது