தோட்டடா

கேரளத்தின் கண்ணூரில் உள்ள சிற்றூர்

தோட்டடா (Thottada) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இது கண்ணூர் தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கண்ணூர்-தெல்லிச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது கண்ணூர் நகரம் மற்றும் தலச்சேரி நகரம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.

தோட்டடா
தோட்டடா கடற்கரை
சிற்றூர்
Thottada
Thottada
ஆள்கூறுகள்: 11°50′35″N 75°25′17″E / 11.842991°N 75.4214°E / 11.842991; 75.4214
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்36,357
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL

ஸ்ரீ நாராயண கல்லூரி (எஸ். என். கல்லூரி), அரசு தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி கண்ணூர் பலதொழில்நுட்பக் கல்லூரி, கண்ணூர் தொழிற் பயிற்சிப் பள்ளி ( ஐ.டி.ஐ) மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.எச்.டி.டி) ஆகியவை தோட்டாடாவில் அமைந்துள்ளன.

தோட்டாடா ஒரு அழகிய கிராமம். தோட்டாடா கடற்கரை சூரிய குளியல் மற்றும் நீச்சலுக்கு ஏற்ற இடமாகும். இங்கு ஒரு கடற்கரை இல்லம் மற்றும் விருந்தினர் மாளிகைகள் போன்றவை உள்ளன.

மக்கள் வகைப்பாடு தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] தோட்டாடாவின் மக்கள் தொகை 36,357 ஆகும். இதில் ஆண்கள் 46% , பெண்கள் 54% பேரும் ஆவர். தோட்டாடாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 85% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண்களின் கல்வியறிவு 86%, மற்றும் பெண்களின் கல்வியறிவு 84%. என்பதாக உள்ளது. தோட்டாடாவில், மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

தோட்டாடா கடற்கரை தொகு

 
தோட்டாடா கடற்கரை

தென்னிந்தியாவின், கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகான கடற்கரை தோட்டாடா கடற்கரை ஆகும். இது கண்ணூர் நகரம் மற்றும் தலச்சேரி நகரத்தை இணைக்கும் தே.நெ 66 இலிருந்து 2.5 கி.மீ தொலைவிலும், கண்ணூர் நகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் தலசேரியிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 800 மீட்டர் நீளமுள்ள கன்னி கடற்கரையானது சூரியக் குளியல் மேற்கொள்ள ஏற்றது. சுற்றுலாப் பயணிகள் கடற்கரை இல்லம் அல்லது கடற்கரைக்கு அருகிலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்கலாம்.. தோட்டாடா ஆறு என்னும் சிறிய ஆறு கடற்கரையின் ஒரு முனையில் பாய்கிறது. உப்பு நீரின் ஊடுருவலைத் தடுத்து நன்நீரைத் தக்கவைக்க மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. கடலுக்கு சற்று தொலைவில் ஆற்றினால் உருவான சதுப்பு நிலமானது பல்வேறு பறவைகளுக்கும், மீன்களுக்கும் சிறந்த வாழ்விடமாக அமைந்துள்ளது.

குருவா தொகு

குருவா என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது கண்ணூர் நகரத்துக்கும் தோட்டாடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது.

குருவா கிராமம் ஒரு காலத்தில் பீடி சுருட்டும் தொழிலுக்கு பெயர் பெற்றது, ஆனால் இந்தத் தொழில் தற்போது கிராமத்தில் இல்லை. ஸ்ரீ நாராயண குரு ஸ்மராகா வயனாசலை [தெளிவுபடுத்துக] இந்திய சுதந்திர இயக்கத்தின் போது பல சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்தது. உள்ளூர் கூட்டங்கள் பல இங்கு நடத்தப்பட்டன. கிராமத்தில் பல வேளாண் பணிகள் நடந்தன. ஆனால் இப்போது அனைத்து வயல்களும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.

குறிப்புகள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டடா&oldid=3036678" இலிருந்து மீள்விக்கப்பட்டது