நீம் கரோலி பாபா

நீம் கரோலி பாபா (Neem Karoli Baba) (இந்தி: नीम करौली बाबा[3](பிறப்பு:ஏறத்தாழ:1900 – இறப்பு:11 செப்டம்பர் 1973), இந்து சமய ஆன்மீக குருவும், அனுமன் பக்தரும் ஆவர்.[4] இவரது ஆசிரமங்கள் நைனிடாலில் உள்ள கைன்சி, பிருந்தாவனம், ரிஷிகேஷ், சிம்லா, நீம் கரோலி கிராமம், பரூக்காபாது மாவட்டம் மற்றும் தில்லியில் உள்ளது. மேலும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் தாவோஸ் நகரத்தில் உள்ளது.

நீம் கரோலி பாபா
பிறப்புஏறத்தாழ 1900 [1]
அக்பர்பூர் கிராமம், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா[2]
(தற்போதைய பிரோசாபாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு11 செப்டம்பர் 1973 (வயது 73)
பிருந்தாவனம், உத்தரப் பிரதேசம், இந்தியா
இயற்பெயர்இலக்குமி நாராயண சர்மா
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்
தத்துவம்பக்தி யோகம், சுயநலமற்ற சேவை
Influence on
  • மார்க் சக்கர்பெர்க், லாறீ பிரிலியண்ட், ஸ்டீவ் ஜாப்ஸ், தன் கோட்டே, லாறீ பேஜ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெப்ரி ஸ்கோல், மார்க்

வாழ்க்கை வரலாறு தொகு

தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் அக்பர்பூர் கிராமத்தில், இலக்குமி நாராயண சர்மாவிற்கு[5]1900ல் அந்தணர் குலத்தில் நீம் கரோலி பாபா இலக்குமண தாஸ் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[1]இவருக்கு திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்த பின், 1958ல் துறவறம் பூண்டார்.[6] நீம் கரோலி பாபா, கிழக்கே குஜராத் முதல் மேற்கே வங்காளம் வரையும், வடக்கே இமயமலை முதல் தெற்கே விந்திய மலைத்தொடர் வரை வட இந்தியா முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, பக்தி யோகத்தை பரப்பினார்.

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-7564-5. https://books.google.com/books?id=OgMmceadQ3gC&pg=PA310. 
  2. "Akbarpur Maharaj ji birthplace". Maharaj Love.
  3. "सुर्खियों में आया बाबा नीम करौली का आश्रम". Dainik Bhaskar (in இந்தி). 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
  4. Swami Chidananda. "Baba Neem Karoli: A Wonder Mystic of Northern India". Divine Life Society. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
  5. The Encyclopedic Sourcebook of New Age Religions. United States: Prometheus. 2004. பக். 142. 
  6. "10 facts to know about Neem Karoli Baba". 1 October 2015.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீம்_கரோலி_பாபா&oldid=3862555" இலிருந்து மீள்விக்கப்பட்டது