பட்டாளம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பட்டாளம் (ஆங்கில மொழி: Pattalam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]

பட்டாளம்
Pattalam

பட்டாளம்
புறநகர்ப் பகுதி
பட்டாளம் Pattalam is located in சென்னை
பட்டாளம் Pattalam
பட்டாளம்
Pattalam
Pattalam (Chennai)
ஆள்கூறுகள்: 13°06′00″N 80°15′41″E / 13.100100°N 80.261500°E / 13.100100; 80.261500
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்32 m (105 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600012
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்சு. அமிர்த ஜோதி, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிவடசென்னை
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர்
மக்களவை உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்ற உறுப்பினர்ஆர். டி. சேகர்
இணையதளம்https://chennaicorporation.gov.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பட்டாளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°06′00″N 80°15′41″E / 13.100100°N 80.261500°E / 13.100100; 80.261500 ஆகும். பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை பட்டாளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

பட்டாளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில்,[5] எல்லையம்மன் கோயில்[6] மற்றும் சித்தி புத்தி விநாயகர் மற்றும் இலட்சுமி அம்மன் கோயில்[7] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மேலும், ஏகாத்தம்மன் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.

பட்டாளம் பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர் ஆவார். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Overnight rains fail to sink chennai". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  2. "[Ground Report]: Overnight rains bring Chennai to its knees; holiday declared for schools, colleges". TimesNow (in ஆங்கிலம்). 2022-11-02. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  3. "Real-time flood forecast becomes a reality in Tamil Nadu". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  4. Serena Josephine, M. (2022-12-10). "Localised solutions prevent water-logging in traditionally vulnerable areas in north Chennai". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  5. "Arulmigu Anjaneya Swamy Temple, Pattalam, Chennai - 600012, Chennai District [TM000435].,Anjaneya Swamy,Anjaneya Swamy". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  6. "Arulmigu Elliamman Temple, Pattalam, Chennai - 600012, Chennai District [TM000043].,Ellaimman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  7. "Arulmigu Sidhi Pudhi Vinayagar- Lakshmiamman Temple, Pattalam, Chennai - 600012, Chennai District [TM000220].,Sidhi Pudhi sundara Vinayagar,Sidhi Pudhi sundara Vinayagar,Lakshmiamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாளம்&oldid=3668897" இலிருந்து மீள்விக்கப்பட்டது