முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகு

வாழ்க்கைக்குறிப்பு தொகு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பள்ளபட்டி எனும் சிற்றூரில் 07.05.1960 ஆம் நாள், சுந்தரம்பிள்ளை- பாக்கியத்தம்மாள் தம்பதியருக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர். வேளாண் குடியில் தோன்றிய இவரது குடும்பத்தில் இவரே முதல் பட்டதாரி.

கல்வி

தனது தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தனது சொந்தக் கிராமத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் படித்து முடித்தார். முதுகலை(M.A.,)(தமிழ் இலக்கியம்) வரையிலான கல்லூரிக் கல்வியை மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியிலும்(1976-1982), எம்.பில்.,(M.PHIL.,) பிஎச்.டி.,(PH.D.,) ஆகிய ஆராய்ச்சிக் கல்வியை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும்(1983-1989) பயின்று பட்டங்கள் பெற்றவர். இவரது இளநிலை ஆய்வு சிறுதெய்வ வழிபாட்டு முறைகள்(MINOR DEITY WORSHIP) பற்றியது; பிஎச்.டி., ஆய்வு தமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத் தாக்கம்( WESTERN INFLUENCE ON TAMIL NEW POETRY) குறித்த ஒப்பிலக்கியம் சார்ந்தது. பயில்கின்ற காலங்களில் சார்ந்திருக்கும் ஆசிரியச்சூழல்களால் சைவ சித்தாந்தம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் நுட்பங்கள் போல்வனவற்றில் தோய்வும் பயிற்சியும் பெற்றார்.

தமிழ்ப் பெரும்புலமை மிக்க முனைவர் தமிழண்ணல்,முனைவர் சுப அண்ணாமலை, பேராசிரியர் அ.சங்கரநாராயணன், முனைவர் நா பாலுசாமி, பேராசிரியர் கதி சுந்தரம், முனைவர் கோ. விசயவேணுகோபால், முனைவர் ஆ.ஆனந்தராசன், முனைவர் டி.பி.சித்தலிங்கையா, முனைவர் நா.செயராமன், முனைவர் கதிர் மகாதேவன்,  பேராசிரியர் சி.கனகசபாபதி முனைவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் இணையர் போன்றோரிடம் தமிழ்ப் பாடம் கேட்ட பெருமையர்.

பணி தொகு

ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (UNION PUBLIC SERVICE COMMISSION) மூலம் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராகத் தேர்வாகி 1991 ஆம் ஆண்டில் தனது ஊடகப் பணியைப் புதுச்சேரி வானொலியில் தொடக்கினார்.

நிகழ்ச்சிப் பொறுப்பாளர், நிகழ்ச்சித் தலைவர். உதவி இயக்குநர், நிகழ்ச்சி இயக்குநர் ஆகிய நிலைகளில், புதுச்சேரி, சென்னை, மதுரை, கொடைக்கானல், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் 29 ஆண்டுகள் பணியாற்றி 2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்.

ஆய்வாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் எனும் நிலைகளில் ஆழ்ந்த தமிழ்ப்பணி ஆற்றி வருபவர்.

ஆய்வாளராக: தொகு

                 1.பல பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் பங்கேற்று ஆய்வுக்  கட்டுரைகள்/அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் அளித்துள்ளமை.

                 2. மைய சாகித்திய அகாதெமி திருவனந்தபுரத்தில் நடத்திய  மொழிபெயர்ப்பியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுப் பயிற்சி

                 பெற்றமை( 1987)

                 3. செம்மொழித்திட்டத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தோடுஇணைந்து

                 சென்னைத் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய    பயிலரங்கில் பரிபாடல் இலக்கியம் குறித்து ஆய்வுரை நிகழ்த்தியமை.

4.சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் 09.02.2020 அன்று நடத்திய     மெய்நிகர்ப் பகிர்வரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டமை

. 300க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள்  காணொலி வழி கலந்துகொண்ட இப்பகிர்வரங்கில் “கதை கேளுங்கள்! கதை சொல்லுங்கள்

- இன்றைய வாழ்வியலுக்குப் பொருந்தும் செம்மொழித் தமிழ்க்கதைகள்” எனும் பொருண்மையில் உரைப்பெருக்காற்றி, ஐயங்கள் தீர்த்து

வைத்தமை.

           5. தமிழ்ப்பாடத்திட்டக்குழுஉறுப்பினர்: தொகு

               

           1.ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர்கல்லூரி, பெரியகுளம்

           2.என்.ஜி.எம். கல்லூரி பொள்ளாச்சி    

3.அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

           4.எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர்கல்லூரி, சென்னை

           5. சாரா டக்கர் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி 2               

ஒலிபரப்பாளராக: தொகு

1.புதுச்சேரி வானொலியில் கேட்டியாசங்கதி என்ற பெயரில் நாளொரு நம்பிக்கைச் சிந்தனை வழங்கியமை.

2. 1997-2000 மற்றும் 2014-2016 ஆம் ஆண்டுகளில் ஆளுநர் உரை   மற்றும் நிதிநிலை அளிப்பு நிகழ்வுகளைத் தமிழக

சட்டப்   பேரவையிலிருந்து நேரடி வருணனையாக வழங்கியமை.

3.புத்தாயிரம் ஆண்டில் (2000) கன்னியாகுமரியில் நடைபெற்றஅய்யன் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா வைத் தமிழக வானொலி

நிலையங்களின் சார்பில் முழுப்பொறுப்பேற்று நேர்முகமாக வழங்கியமை.

4.கோவையில் 2010 இல் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழிமாநாட்டு நிகழ்வுகளின் வானொலித் தொகுப்புகளைக்

கோவையிலிருந்து தமிழகம் முழுவதும் வழங்கியமை.

5.சென்னைவானொலியில் நாளொன்று பிறக்கச் சொல்லொன்று அறிவோம் என்ற புதிய நிகழ்ச்சியைத் தொடங்கி, நாளொரு

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை அறிமுகப்படுத்தியமை.

6. மதுரை வானொலியில், முனைவர் தமிழண்ணல் அவர்களோடு இணைந்து பழகு தமிழ் அறிவோம் என்ற நிகழ்ச்சியை ஓராண்டு

தொடராக வழங்கியமை.

7.வானொலியில் குறளமுதம் என்னும் நிகழ்ச்சியில் திருக்குறளுக்கு நாள்தோறும் எளியஉரை வழங்கி வருகின்றமை.

8.கோடைப் பண்பலையில் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் வழங்கி வந்தமை.(நம்பிக்கை முனையம்,

வானவில், குறளின்குரல், பட்டிமன்றம், கொடைத்தென்றல், கண்ணதாசத்தென்றல்,   இலக்கிய த்தென்றல்-          

கமல்ஹாசன், வைரமுத்து, வடிவேலு, உதயநிதிஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, மதன்கார்க்கி, பா.விஜய், கபிலன், கவுதமி,

அறிவுமதி, அட்லி, விவேக் போன்ற திரைக்கலைஞர்களோடு நேர்முகங்கள்)

எழுத்தாளராக: தொகு

1.  மதுரைவானொலியில் மீனாட்சிவிலாசம் என்ற குடும்ப நகைச்சுவை நாடகத்தொடரை எழுதி இயக்கிப் பங்கேற்றமை. நான்கு

ஆண்டுகள் மதுரையிலும் கொடைக்கானலிலும் தொடர்ந்து ஒலிபரப்பாகி இத்தொடர் சரித்திரச் சாதனை புரிந்தது.

( மீனாட்சி விலாசம் நாடகநூல் 2006ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு பெற்றது).

2.  சில தன்னம்பிக்கை நூல்களின் ஆசிரியர்.

3.  தேடாதே நில் என்றநாடகம் வானொலி நாடக விழா நாடகமாகத் தமிழகமெங்கும் ஒலிபரப்பாகி நேயர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது.

4.  தீபம் இதழில் ஐந்திணை வாழ்வியல் எனும் தலைப்பில் சங்கத்தமிழர் மாண்புகளைத் தொடராக (21பகுதிகள்) எழுத்துரைத்தமை (2018-2019)

5.  தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலர் பகுதியில் சனிக்கிழமைதோறும் வெற்றிச்சிகரம் எட்டும்தூரம் இளைஞர்களுக்கான

தன்னம்பிக்கைத் தொடர் (40 பகுதிகள்) எழுதியமை.


சொற்பொழிவாளராக:

1.  பல்வேறு கலை இலக்கிய சமுதாயமேடைகளில் பட்டிமன்றப் பேச்சாளராகவும், இலக்கியச் சொற்பொழிவாளராகவும்

பங்கேற்றுவருகின்றமை.

2.  டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, ராஜமுந்திரித் தமிழ்ச்சங்கங்களில் இலக்கியப் பொழிவுகள் ஆற்றியுள்ளமை.

3.   வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை அமெரிக்காவில் பால்ட்டிமோரில் நடத்திய பட்டிமன்றத்தில் நடுவர் பொறுபேற்றமை.

அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலத் தமிழ்ச்சங்கங்களில் இலக்கியப்பொழிவுகள் ஆற்றியமை.

4.  சன் தொலைக்காட்சியின் கல்யாணமாலை சூப்பர்ஜோடி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றமை. (2001- திருப்பதி)

இல்லறம் இனிப்பது இருபதிலா? அறுபதிலா?

சன் தொலைக்காட்சியில் இரண்டுமுறை வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் வலம் வந்தமை.

5.  கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்தவேளையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டமை.

முனைவர் வெ.இறையன்பு ஐ..எஸ்., தலைமையில் கலைஞர் தொலைக்காட்சி சிறப்புப் பட்டிமன்றங்களில் அணித்தலைமை ஏற்றமை.

6.  கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்புப் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று வருகின்றமை( 14.04.2021- குடும்பத்தின் ஆணி வேராக

இருப்பது ஆண்களா? பெண்களா?- 01.05.2021 எதையுமே நகைச்சுவையாகப் பார்ப்பது ஆபத்தானதா?ஆனந்தமானதா?)

7.  மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்நகை என்னும் தலைப்பில் ஒருமாதம் இலக்கியநகைச்சுவைகளை எடுத்தியம்பியமை. குறள்பேசும்குரல்

நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றமை.

8.  ஜெயா தொலைக்காட்சியின் முதல்பட்டிமன்றத்தில் நடுவராகப் பங்கேற்றமை. ( மனைவியர் தினப் பட்டிமன்றம்: மனைவியரை

மகிழ்ச்சிப்படுத்துவது அணிமணிகளா? அன்புமொழிகளா?)

9.  பொதிகைத் தொலைக்காட்சியில் மனசுஅழகாக எனும் நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கைப் பொழிவுகளை வழங்கியமை.

10.  பொதிகையில் வியாழன்தோறும் இரவு 9 மணிக்கு காவியத் தலைவன் நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் திரைப்பாடல்களின்

இலக்கியநயம் எடுத்தியம்பியமை.

11.  வசந்த் தொலைக்காட்சியில், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுநிகழ்வுகளை நேரடி வர்ணனை செய்தமை (2009,10,11).

தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் சங்கஇலக்கியச் சித்திரங்களை இலக்கியப் பொழிவுகளாக வழங்கியமை.

12.  விஜய்தொலைக்காட்சியில் சுகிசிவம் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றங்களில் அணித்தலைமை ஏற்றுப் பங்கேற்றமை.

13. வாழ்க்கையே ஒரு வழிபாடு எனும் ஆன்மிகத் தொடரை 65 பகுதிகளாக முனைவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., அவர்களோடு

விஜய் தொலைக்காட்சியில் வழங்கியமை


வலையொளியில் (YOUTUBE)   anbudan avudai வலையொளி வழியாக

1.திருக்குறள் தெறி – அன்றாட வாழ்வியலுக்கேற்ற         திருக்குறள் விளக்கங்கள் 250 பகுதிகள்

2. சிவனருள்-   சிவ சம்பந்தமான பக்தி, தத்துவ இலக்கிய  விளக்கங்கள் நாள்தோறும் வழங்கியமை.

3. THE MOUNT NEWS வலையொளி வழியாகக் “கதை அல்ல விதை” சிற்றுரைத்தொடர் நாள்தோறும்.

4. PRANAVAM TV  வலையொளி வழியாக “அருளாளர்கள்”-பக்திப்பொழிவுகள் நிகழ்த்துகின்றமை


வெளிநாட்டுப்பயணங்கள்:

1.  லண்டன் பி.பி.சி.(BRITISH BROADCASTING CORPORATION)  வானொலிஅழைப்பின் பேரில் பாலியல்கல்வி தொடர்பான பயிலரங்கிற்கு

(WORKSHP ON HEALTH AND REPRODUCTIVE HEALTH EDUCATION) லண்டன் சென்று திரும்பியமை (2000).

2.   வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவை அழைப்பின் பேரில் பால்ட்டிமோரில் நடைபெற்ற தமிழர்மாநாட்டில் பட்டிமன்ற நடுவராகக்

கலந்து கொண்டமை. அமெரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலத்தமிழ்ச்சங்கங்களில் இலக்கியப்பொழிவுகள் வழங்கியமை(2004).

3.  குவைத், மஸ்கட், துபாய், அபுதாபி தமிழ்அமைப்புகளின் அழைப்பின்பேரில் சென்று பட்டிமன்றங்களிலும் சொல்லரங்கங்களிலும் பங்கேற்றமை.


உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு:

கோவை உலகத்தமிழ்ச்செம்மொழிமாநாட்டுப் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு சங்கஇலக்கியம் பற்றிப் பேசித் தமிழக முதல்வர்

டாக்டர் கலைஞரின் பாராட்டுப்பெற்றமை..


விருதுகள்:            

அமெரிக்காவின் கேரொலைனா தமிழ்ச்சங்கம் 2004ஆம் ஆண்டில் வழங்கிய சொற்சுவை நாவலர் விருது

            சிவகங்கை மாவட்ட ஆன்மீகப் பேரவை 2009 ஆம் ஆண்டில் வழங்கிய இலக்கியப்பணிக்கான குன்றக்குடி அடிகளார் விருது

சென்னை உறவுச்சுரங்கம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்    இணைந்து 2016ஆம்ஆண்டில் வழங்கிய தமிழ்ச்சான்றோர் விருது                               

தேனி நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் வெள்ளிவிழா விருதாக  திருவள்ளுவர் நாளில்(15.01.2018) தமிழ்ச் செம்மல் வழங்கிச் சிறப்பித்தது


வெளியிட்டுள்ளநூல்கள்(25):

1-12 மீனாட்சிவிலாசம்- குடும்பநகைச்சுவை நாடகங்கள் 12 தொகுதிகள்                     

13.எழுபத்தைந்து ஆண்டுகளில் வானொலி.

14. திருக்குறள் எளிய உரை

15. வாங்க சிந்திக்கலாம்.

16. இறையன்புவின் சிந்தனை வானம்..

17. தமிழ்ப் புதுக்கவிதைகளில் மேற்கத்தியத்தாக்கம்

18. மகிழ்ச்சியே வாழ்க்கை

19. இனியவை இனியவை இறையன்பு

20. சங்கச் செவ்வி ( செம்மொழிப்பெட்டகம்)

21. காந்தியத் தாயத்து( தமிழ்நாடு காந்தி நினைவுநிதியின்   காந்தியப்பரிசு பெற்றது)

22. காமராஜர் காயகல்பம்

23. நம்பிக்கை முனையம் –தொகுதி- 1

24. நம்பிக்கை முனையம் –தொகுதி- 2

25. நம்பிக்கை முனையம் –தொகுதி- 3