ஆட்டை பெரிய திருவிழா தொகு

ஆட்டை பெரிய திருவிழா’ என்பது சோழ அரசர்களால் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு விழா. ஆட்டை என்ற சொல்லுக்கு விளையாட்டின் திருப்பம் (turn in a game) என்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் களஞ்சியம் (Tamil Lexicon – Madras University 1982) பொருள் கூறுகிறது. ‘ஆட்டைத் திருவிழா’ எனில் வருசத் திருவிழா (Annual Festival) என்றும் விளக்குகிறது. மேலும், ஆட்டைக்கோள், ஆட்டைக் காணிக்கை, ஆட்டைப் பாழ், ஆட்டை வாரியம், ஆட்டைப் பிறாயம் பொன்ற சொற்களும் ஒத்த பொருள் உடையனவாக கல்வெட்டுக் கலைச்சொல் அகராதிகளில் குறிப்பிடப்படுகிறது.

ஆட்டை என்ற சொல் அதன் நேர்பொருளில் விளங்கிக் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்ட காலம் மாறி, இன்று ‘திருடுவது’ என்ற பொருளில் உலக வழக்காகத் திரிந்து வழங்குவது உற்று நோக்கத்தக்கது. வியப்பு என்னவெனில் ‘ஆட்டை’ என்ற நல்ல தமிழ்ச்சொல்லை நமது செவ்வியல் இலக்கியங்களும் ஆட்டையைப் போட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது

கல்வெட்டில் ஆட்டை தொகு

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் ‘ஆட்டை’ என்ற சொல் பல இடங்களில் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஓராட்டை’ எனில் ஓராண்டு என்றும் ‘ஆட்டாண்டு’ எனில் ஆண்டுதோறும் என்றும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி முடித்து அதன் தொடர் செயல்பாட்டிற்காக ஏராளமான காணிகளையும் காசுகளையும் நிவந்தங்களாக ஏற்படுத்திய மன்னன், அவற்றின் விளைச்சலை ஆண்டு வட்டியாக ஓர் ஆட்டைக்கு ஒரு முறை எட்டில் ஒரு பங்காகத் தரவேண்டும் என்று குறிப்பிடுகிறான்.

காசின் வாய் அரைகாற் காசு பொலிசையூட்டாக
உடையார் பண்டாரத்தே இடக்கடவ…'

இவ்வாறாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளமையால், ஆட்டை நாட்களை மிகச் சரியாக வரையறுத்தே ஆண்டு நாட்கள் கணக்கிடப் பட்டிருப்பதாகக் கருத இடம் இருக்கிறது. ஓர் ஆண்டின் நாட்கள் 360 என்றும், அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் தரவேண்டிய வட்டியை ‘நிசதம் இடக்கடவ’ என்றும் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:லிவி&oldid=1588832" இலிருந்து மீள்விக்கப்பட்டது