பயனர்:Dineshkumar Ponnusamy/விக்கிமேனியா 2015

இது என்னுடைய முதல் விக்கிமேனியா, என் கடவுச்சீட்டில் முதல் முத்திரை மெக்சிக்கோவிற்காக. ஒரு புது அனுபவமாக அமைந்தது. விக்கிமேனியாவில் கருத்தரங்கம் மட்டுமின்றி பல்வேறு திரளான, வெவ்வேறு இடங்களைச்சேர்ந்த விக்கி குழுமத்தினரை சந்தித்ததுடன் அவர்களுடைய விக்கி அனுபவங்களை நேரில் கேட்டறிய முடிந்தது. இனிவரும் காலங்களில் விக்கிமேனியாவில் கலந்துகொள்பவருக்கு இது உதவும் என்ற வகையில், எனது அனுபவத்தை இங்கே பதிந்துள்ளேன்.

விக்கிமேனியா 2015-ல் நீல பேயுருவ முகமூடியை வென்ற பிறகு எடுத்த படம்

விக்கிமேனியா உதவித்தொகை தொகு

விக்கிமேனியாவில் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம், ஆனால் கட்டணம் செலுத்த வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 100 நபர்களுக்கான போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு உட்பட பிற உதவிகளையும் விக்கிமீடியா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது. இதற்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சில கேள்விகள் கேட்கப்படும். அவை விக்கித்திட்டங்களில் இணையவளி பங்களிப்பு மட்டுமின்றி இன்னபிற பங்களிப்புகள் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பயனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[1]

நான் சென்ற வருடம் விக்கிமேனியா 2014, லண்டனில் நடைபெற்ற போது விண்ணப்பித்திருந்தேன், அதிக்கப்படியான பயனர்கள விண்ணப்பித்திருந்ததால், எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தேன், வெறும் 600 நபர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்ததால், எனக்கு இந்த முறை உதவித்தொகை கிடைத்திருந்தது. உதவித்தொகை கிடைத்தவுடன் இரவியிடமும், சுந்தரிடமும் இது பற்றி கூறினேன்.

இந்தியாவில் இருந்து பங்குபெறுபவர்களுக்கான் விண்ணப்பங்களை தயார் செய்து தருவதற்காக ஒரு குழு இருந்ததைப் பற்றி அப்போது எனக்கு தெரியாது.

இந்திய விக்கிப்பீடியர்களுடான அறிமுகம் தொகு

 
தெற்காசிய விக்கிமீடியர்களின் சந்திப்பு

இரவியின் வாயிலாக இந்திய பங்களிப்பாளர்கள் குறித்த விவரங்களை அறிய முடிந்தது. அனைவரும் ஒன்றுபட்டு மெக்சிக்கோ செல்வதற்குத் தேவையான தகவல்களை திரட்டினோம். எங்களுக்கென தனி முகநூல் அரட்டை ஒன்றை உருவாக்கினோம். அனைவரும் ஒற்றுமையுடன் தங்களால் முடிந்த உதவிகளை பகிர்ந்து கொண்டோம். இந்தியர்கள் மட்டுமின்றி நேபாளம் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டோம். தமிழ்ப்பரிதியின் அறிமுகம் கிடைக்கப் பெற்றது. தமிழ்ப்பரிதி முதல் நபராக மெக்சிக்கோ அனுமதிச்சீட்டு வாங்க சென்றார்.

மெக்சிக்கோ அனுமதிச் சீட்டு தொகு

இந்தியர்களுக்கு அவ்வளவு எளிதாக மெக்சிக்கோ அனுமதிச்சீட்டு தரப்படுவதில்லை. அவர்களுடைய வலைதளத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்கள் மட்டுமின்றி மேலதிக ஆவணங்களை ஒரே பெயரில் கேட்டனர். அனைவரும் தகவல்களை சரியான முறையில் எனக்குத் தெரிவித்திருந்த காரணத்தால், நான் தேவையான அனைத்து கோப்புகளையும் ஒரே பெயரில் சீர்படுத்திக்கொண்டேன். இந்திய அரசு பெயரிடலில் சில மரபு வைத்துள்ளது.

முதல் பெயர் மற்றும் கடைசி பெயர் என்பதே அது. தமிழகத்தில் தந்தையின் பெயரில் முதலெழுத்தும் ஒரு முற்றுப்புள்ளி அதன்பிறகு இடப்பட்ட பெயர் என எழுதும் முறை. சில அரசு ஆவணங்களில் தமிழக முறைப்படியும் சில ஆவணங்களில் இந்திய அரசு முறையிலும் சில ஆவணங்களில் முன்னும் பின்னும் மாறியும் இருந்தது. அனைத்து ஆவணங்களிலும் ஒரே பெயரை கொண்டுவருவதற்கு அனைவருக்கும் காலதாமதம் ஏற்பட்டது.

அனுமதிச்சீட்டு வாங்க புது தில்லி சென்ற போது பிற இந்திய விக்கிப்பீடியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் விக்கிப்பீடியரான கார்த்திக்கேயன் பெத்துசாமியுடன் மூன்று நாட்கள் தங்கி என்னுடைய அனுமதிச்சீட்டினை பெற்றேன். ஊர் பெயர் தெரியாத இடத்தில் மூன்று நாட்களும் தங்க இடம் தந்து, மூன்று வேளை உணவு கொடுத்து பத்திரமாகப் பார்த்துக்கொண்ட பெருமை அவரையே சாரும். ஒரு மருத்துவருடைய வாழ்க்கையை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய நூல்களும் தற்போது வெளியாகி உள்ளது; வாழ்த்துக்களும் நன்றிகளும்.

வந்தான் வென்றான் என்பது போல இரவிக்கு ஒரே நாளில் அனுமதிச்சீட்டு கிடைத்தது, அதனைத் தொடர்ந்து நானும் சென்றேன். எனக்கும் ஒரே தவணையில் கிடைத்தது.

விக்கி விரும்புதே உணவை தொகு

 
விக்கி விரும்புதே உணவை 2015

விக்கிமேனியா குறித்து எனக்கு எதுவும் தெரியாமல் இருந்த காரணத்தால் ஒருநாள் மாலை இரவியை நேரில் சந்தித்து உரையாடினேன். பெங்களூருவில் உள்ள விக்கிமீடியா இந்தியா அலுவலகத்தையும் தேடிக் கண்டுபிடித்தேன். உரையாடலின் போது இருவரும் விக்கி பங்களிப்புகள் மட்டுமின்றி தொழில் மற்றும் இன்ன பிற தகவல்களை பகிரும் போதும் விக்கி விரும்புதே உணவை போட்டி குறித்து இரவி கூற நானும் அதில் தன்னார்வலராக சேர்ந்து கொண்டேன். உணவுகள் குறித்த படிமங்களை தேர்ந்தெடுப்பது, அதற்கான பிரிவைச் சேர்ப்பது மற்றும் இன்ன பிற பணிகளில் என்னுடைய ஓய்வு நேரங்களில் பங்களித்தேன்.

மீடியாவிக்கி ட்ரைன் தி ட்ரைனர்சு தொகு

மீடியாவிக்கி ட்ரைன் தி ட்ரைனர்சு குறித்து விக்கிமேனியாவில் பங்குபெற இருந்த டியோ தத்தா மூலமாக அறிந்து கொண்டேன். இரவியிடமும் இதுபற்றி மேலதிக தகவல்களை கேட்டறிந்து கொண்டேன். பகுதிநேர பங்களிப்பாளர்களை அனுமதிக்காத காரணத்தால் இறுதிநாளன்று மட்டும் கலந்து கொண்டேன். பிற மொழி விக்கிப்பீடியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி பங்களிப்பாளர்களிடம் விக்கிமேனியா 2015 குறித்து விளக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

  1. ஈத்தர்பேட் குறித்த விவரம் அறியப்பெற்றேன்.
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தானியங்கிகள் குறித்து அறிந்து கொண்டேன். (https://etherpad.wikimedia.org/p/MWTTT)
  3. சஞ்ச்சயா, சமூகா மற்றும் புஷ்தகா திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான சிவா வாயிலாக கன்னட புத்தகங்களுக்கு ஒருங்குறித் தேடல் மற்றும் மெட்டா தகவல்களை பயனர்களிடம் இருந்து எவ்வாறு பெறுவது குறித்து அறிந்து கொண்டேன்.
  4. விக்கிமேனியாவில் காட்சிப்படுத்துவதற்காக சில சுவரொட்டிகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் அனைத்து மொழியினரிடமும் அது குறித்த தகவல் பறிமாறினேன்.

வீ ஆர் விக்கிப்பீடியா தொகு

மீடியாவிக்கி ட்ரைன் தி ட்ரைனர்சு நிகழ்வின் தொடர்ச்சியாக டுவிட்டர் தளத்தில் WeAreWikipedia கணக்கை இயக்கும் வாய்ப்பு சூலை 6 முதல் 12 வரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தருணத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் விக்கிப்பீடியர்களைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களை பதிந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்கள், முகநூல் குழுமத்தின் வாயிலாக விரைந்து பயனர்களை சென்றடைதல் உள்ளிட்டவைகளையும் பத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளையும், பிற விக்கிமேனியாவில் பங்களித்த பயனர்கள் பற்றி சிறு குறிப்புகளையும் பகிர நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

எங்களது பயனம் தொகு

சூலை 14-ம் தேதி இரவியுடன் பெங்களூரில் இருந்து ப்ராங்க்பூர்ட் விமான நிலையம் வழியாக மெக்சிக்கோ நகரத்திற்கு சூலை 14-ம் தேதியே (மெக்சிக்கோ நேரவலயப்படி - இந்திய நேரத்திலிருந்து 12 மணி நேரம் பின்தங்கியுள்ளது) சென்றடந்தோம்.

ஹேக்கத்தான் தொகு

சூலை 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஹேக்கத்தான் நடைபெற்றது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தே அமைந்தது.

  1. இக்கருத்தரங்கில் தமிழ்ப்பரிதியுடன் இணைந்து தமிழ் மொழிக்குத் தேவையான கருவிகளை உருவாக்க தேவையான முயற்சிகளை எடுத்தோம்.
  2. இந்திய மொழியினருக்கான சிறப்புப் பிரிவை சந்தித்து இது குறித்துப் பேசினோம், சில நிரலிகளையும் பெற்றுகொண்டோம்.
  3. வலதிலிருந்து இடதுப்பக்கமாக எழுதும் மொழிகளுக்கான வார்ப்புரு உருவாக்குவதைப் பற்றி கற்றுக்கொண்டேன்.
  4. பாக்கித்தானிய பஞ்சாபி மொழியினருக்கான வார்ப்புருவை உருவாக்கினேன்.
  5. மொழிபெயர்ப்புக் கருவி (Content Translation Feedback) பயன்படுத்தி இரண்டு கட்டுரைகளை உருவாக்கி அதில் இருந்த வழுக்கைளை சுட்டிக்காட்டி சிலவற்றை சரி செய்துகொண்டேன், சில இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.

அமர்வுகள் தொகு

திட்டமிடுதல், பரப்புரைகளில் ஈடுபடுதல், தொழில்நுட்ப முன்னெடுப்புகள், தேவைப்படும் கருவிகளை உருவாக்குதல், கோளாறுகளை சரிசெய்தல் என பல்வேறு அமர்வுகள் நடைபெற்றது. அனைத்து ஒரே நேரத்தில் நடைபெற்றதால் சிலவற்றில் பங்கேற்றேன்.

"விக்கிமீடியா சார்க் சந்திப்பு" என பெயர்மாற்றக்கோறிய வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தேன்.

விக்கிமேனியாவில் யார் கலந்து கொள்ளலாம்? தொகு

யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

ஆயினும், கட்டுரை ஆக்கம் மட்டுமின்றி, பிற விக்கிதிட்டங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். க்ளாம் அதாவது படக்களஞ்சியம், நூலகம், சேமிப்பகம் மற்றும் அருங்காட்சியகம் உட்பட்ட திட்டங்களில் பங்கேற்பவர்கள், அவுட்ரீச் எனப்படும் பரப்புரைகளில் ஈடுபடுவோர்கள், கல்வித்துறையில் விக்கிப்பீடியா திட்டங்களில் பங்குபெறுபவர்கள், நல்லதொரு முன்னெடுப்புகளை பிறரிடம் கூற விளைபவர்கள், விக்கித்திட்டங்களில் பெற்ற வெற்றி குறித்து பிறரிடம் பகிர விரும்புவர்களுக்கு விக்கிமேனியா நல்லதொரு வாய்ப்பாகும். இது வரையிலும் உதவித்தொகை பெற்றவர்கள் கட்டுரை ஆக்கம் மட்டுமின்றி இது போன்ற திட்டங்களிலும் பங்கேற்றவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிமேனியாவில் கலந்து கொள்ள என்ன செய்யலாம்? தொகு

  1. விக்கிமேனியாவில் கலந்து கொள்ள அத்திட்டத்தில் ஆர்வம் இருக்க வேண்டும்.
  2. மேலே கூறியுள்ள திட்டங்களில் ஈடுபட வேண்டும்.
  3. விக்கிமேனியா குறித்த அறிவிப்புகளை கூர்ந்து கவனித்து வரவும்.
  4. அறிவிப்புகள் வந்தவுடன், ஏற்கனவே விக்கிமேனியா சென்று வந்தவர்களின் உதவியோடு விண்ணப்பிக்க வேண்டும்.

விக்கிமேனியா 2016 இத்தாலியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பமா? என்னுடைய பேச்சுப் பக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் செய்யத் தவறியவை தொகு

  1. முதல் தவறு திட்டமிடுதலில் ஏற்பட்டது. அனைத்து இந்திய சுவரொட்டிகளை வடிவமைப்பது, அதனை அச்செடுப்பது உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருந்த போதும் பல சமூகத்தில் இருந்து கடைசி நேரத்தில் கிடைத்ததகவல்களை வைத்து வடிவமைத்து அச்சடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இந்த தவறின் காரணமாக மெக்சிக்கோவில் வசிக்கும் இயல்பான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அச்சகத்தில் பணிபுரிபவர்கள், விக்கிமேனியா தன்னார்வலர்கள், இந்திய விக்கிகுழுமத்தைச் சார்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் பழகும்போது புதிவிதமான அனுபவம் கிடைத்தது.
  2. இரண்டாவது தவறு, ஆலமரத்தடியில் முன்பே திட்டமிட்டு தமிழ் விக்கி குழுமத்திற்கான தேவைகளை பட்டியலிட்டு சென்றிருக்க வேண்டும். என்ன தேவை என்று தெரியாததால், எவையெல்லாம் தேவைப்படும் என்ற தொலைநோக்குப் பார்வையின் காரணமாக விரைந்து செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யமுடியாமல் போனது.
  3. மூன்றாவது தவறு, குடிநீர், சீயநெய் (தலையை கழுவும் திரவம்) உள்ளிட்டவைகளை விமானத்தில் கைப்பையில் எடுத்து செல்ல இயலாது என்பதினை தெரிந்து கொள்ளாமல் விட்டு அவற்றை செருமனி விமான நிலையத்தில் கொடுத்துவிட்டு வந்தது.
  4. நான்காவது தவறு, தேவையான மருந்துகளை குறைந்த அளவிலாவது எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நம்மூர்களைப் போல மருத்துவரின் சீட்டு இல்லாமல் அங்கெதுவும் வாங்க முடியாது.

சிறப்பாக செய்தவை தொகு

  1. விமான வழியை சரியாக தேர்வு செய்தது, அதற்கு ஏற்றாற்போல் அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டது.
  2. சரியான நேரத்தில் உறங்கி, நேர வளைய சிக்கல்களுக்கு சிக்காமல் சென்றது.
  3. எது கிடைத்தாலும் உண்டு உடம்பைத் தேற்றியது, தெருவோரங்களில் விற்ற டாகோசு மிகவும் சுவையாக இருந்தது.
  4. பிற இந்திய விக்கிமீடியர்களிடன் சிறப்பான உறவை கொண்டிருந்த காரணத்தால், தெரியாத ஊரில் தனியாக சுற்றும் சூழல் ஏற்படவில்லை.
  5. முடிந்த அளவு உலகளாவிய விக்கிமீடியர்களுடன் உரையாடியது.

தமிழ் விக்கிப்பீடியர்கள் தொகு

 
தமிழ் விக்கிப்பீடியர்கள் விக்கிமேனியா 2015 நிகழ்வில்

இந்த ஆண்டு உதவித்தொகை தமிழ் விக்கிப்பீடியர்களில் சூர்யப்பிரகாசு, தமிழ்ப்பரிதிமாரி, இரவி மற்றும் எனக்கு ஆகிய நால்வருக்கு கிடைத்தது. அனுமதிச்சீட்டு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சூர்யப்பிரகாசு விக்கிமேனியாவில் கலந்து கொள்ள இயலவில்லை.

தமிழ்ப்பரிதி மாரியை மெக்சிக்கோவில் முதல்முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய விக்கிமீடியா பங்களிப்புகள், பணி, உட்பட பல்வேறுபட்ட விசயங்களை கேட்டறிய முடிந்தது.

இரவி, தமிழ்ப்பரிதி மற்றும் நான் ஆசவ் பார்டோவுடன் தமிழ்விக்கி குழுமத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நமது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள், முன்னெடுப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.

விக்கிமேனியாவில் பங்குபெற்ற பல்வேறு சமூகத்தினருக்கும் ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிந்ததைக் கண்டு வியப்பும், கர்வமும் வந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடிகளின் மீது அளவு கடந்து மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது. தமிழ் விக்கி குழுமத்தின் சூழல் சிறப்பாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகும் வளர்முகமாக இருக்கும் சூட்சமத்தை அரியதொரு வாய்ப்பாகவும் விக்கிமேனியா அமைந்தது.

இந்திய விக்கிப்பீடியர்கள் தொகு

இந்நிகழ்வில் சுமார் 20 (சரியான பட்டியல் கிடைக்கவில்லை) இந்திய விக்கிப்பிடியர்கள் கலந்து கொண்டனர். மலையாளம் விக்கி குழுமத்திலிருந்து நேத்தா, மனோஜ், விஸ்வா ஆகிய மூவரும், இந்திய - பஞ்சாபி விக்கிப்பீடியாவிலிருந்து சத்தீப், இந்திய - வங்காள விக்கிப்பீடியாவிலிருந்து போதி, இந்தி விக்கிப்பீடியாவில் இருந்து முசாமில், உருது விக்கிப்பீடியாவில் இருந்து நிசார், ஒடியா விக்கிப்பீடியாவிலிருந்து சுபாசிஷ், மீடியா விக்கியிலிருந்து விகாஸ், சிஐஎஸ் நிறுவனத்தில் இருந்து ரோஹினி அகியோர் பங்குபெற்றனர்.

கருவிகள் தொகு

பஞ்சாபி எழுத்துப்பெயர்ப்புக்கருவி

சத்தீப்பின் நீண்ட நாள் கனவான இந்திய பஞ்சாபி விக்கியையும், பாக்கித்தானிய பஞ்சாபி விக்கியையும் இணைக்கும் எழுத்த்துப்பெயர்ப்புக் கருவியை உருவாக்கும் பணியில் உள்ளேன்.

தமிழில் அழகி (மென்பொருள்), ஏற்கனவே இதுபோல தமிழ் -> ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் -> தமிழ் ஆகியவை தற்போது செய்ய இயலும். இது குறித்து பா. விசுவநாதன் அவர்களிடம் உதவி கோரியுள்ளேன்.

தமிழ் சொல் உதவிக் கருவி

தமிழ்ப்பரிதியின் கோரிக்கையான சொல்லுதவி தமிழ் மொழியில் கொண்டுவர முயற்சி செய்து வருகிறேன். இது குறித்து விக்கிப்பீடியாவின் மொழி ஆய்வுக்குழுவுடன் உரையாடிய போது சில நிரலிகளையும் பெற்றுக்கொண்டேன். கைபேசியில் உள்ளதுபோல மடிக்கணினியில் பயன்படுத்தும் விதமாக தமிழ் சொற்களை காட்டும் விதமாக முயற்சி செய்து, ஏற்கனவே உள்ள கருவிகளையும் ஆய்வு செய்து வருகிறேன்.

படிமப் பதிவேற்றும் கருவி

நேத்தாவின் வேண்டுகோளான வேகம் குறைவான நேரத்தில் பயன்படக்கூடிய படிமப் பதிவேற்றும் கருவி உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

விக்கி ரிக்சா

2014-ம் ஆண்டில் அளித்திருந்த என்னுடைய விக்கி ரிக்சா திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரிடமும் பகிரும் வாய்ப்பு கிடைத்தது. பலர் இது குறித்து விருப்பம் தெரிவித்தனர். இத்திட்டத்தினை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளேன்.

விக்கிமேனியா 2015-இன் விளைவு தொகு

  • உலகமுழுவதுமுள்ள விக்கிமீடியர்களின் நட்பு வட்டம் எனக்கு கிடைத்துள்ளது.
  • விக்கிகருத்தரங்கு இந்தியா 2016 குறித்த ஆலோசனையில் கலந்து கொண்டு, தற்போது அது குறித்த ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
  • விக்கிப்பீடியா ஆசியர்கள் மாதம் குறித்த ஆலோசனையில் கலந்து கொண்டு, தற்போது அத்திட்டத்தில் பங்குபெற தயாராகி வருகிறேன்.
  • ஆகத்து 1,2 பெங்களூருவில் நடைபெற்ற Natural World Editathon 2015 நிகழ்வில் பங்குபெற்று தமிழ் விக்கியிலும் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த கட்டுரைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
  • வரும் ஆகத்து 8,9 தேதிகளில் தமிழ் இணையப்பல்கலைக் கழக உரையாடலில் கலந்து கொள்கிறேன்.

பிற தொகு

தண்ணீர் தண்ணீர் தொகு

குடிநீரின் அவசியத்தை அறிந்து கொண்டேன். குடிநீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், ஏன் வீணடிக்கக் கூடாது என்பதை கண்கூடாக காண முடிந்தது. பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களை விடவும் குடிநீர் அதிக விலைக்கு உலகம் முழுவதும் விற்கப்படுகிறது.

சாதாரணமாக நாம் குடிக்கும் நீர் மட்டுமல்லாது, கிருமிகள் நீக்கப்பட்ட சோடா போன்ற இன்னொரு நீரும் பயன்பாட்டில் உள்ளது.

தமிழர்களும் மெக்சிக்கர்களும் தொகு

தமிழர்களின் கலாச்சாரமும் மெக்சிக்கர்களின் கலாச்சாரமும் சில விசயங்களில் ஒத்துப்போகிறது. விக்கிமீடியா மெக்சிக்கோ நடத்திய புதிர் போட்டியில் கலந்து கொண்டபோது இது பற்றி மேலும் அறிய முடிந்தது.

  1. தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் (Inscirpts) தற்போதும் மெக்சிக்கோ நகர அருங்காட்சியில் உள்ளது.
  2. இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கின் போது செண்பகப்பூ பயன்படுத்தும் வழக்கமுள்ளது.
  3. இறந்தவர்களுக்கு அவர்களது திதி நாளன்று பிடித்த உணவுகள், மாமிசம், மது, மற்றும் அவர்களுக்கான உடை உள்ளிட்டவைகளை வைத்துப் படைப்பதும், அவற்றைக் காகத்திற்கு வைத்து, அது முன்னோர்கள் வந்து உண்பதாகவும் அவர்களும் நம்புகின்றனர்.
  4. கொலுசு, மூக்குத்தி, தோடு போன்றவற்றை அணியும் வழக்கம் உள்ளது. எசுப்பானியர்களின் ஆதிக்கத்தால் பல பண்பாடுகள் சிறிதளவு மாறியிருந்தாலும் இன்றளவும் பண்பாட்டையும், வரலாற்றையும் கட்டிக்காத்து வருகின்றனர்.

உசாத்துணை தொகு

  1. "Grants:TPS/Wikimania scholars/Proposed 2015 Process". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 5, 2015.

இவற்றையும் பார்க்க தொகு