சினோஜ் கியான் ( Sinoj kiyan -பிறப்பு :22-பிப்ரவரி -1991) இவர் ஒரு தமிழிலக்கிய எழுத்தாளரும், கவிஞரும் சினிமா பாடலாசிரியரும் ஆவார். இவர் தன் ''ஈரச் சிறகுகள்'' என்ற முதலாவது கவிதைத் தொகுப்பை, கோவை - இந்துஸ்தான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது(2015) வெளியிட்டார். இந்த நூலிற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மூத்த படைப்பாளியும் முனைவருமான சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ''மேக ராஜ்ஜியம்'' ( மரபுக் கவிதைகள்) வெளியானது.

கோவை மாவட்டத்தில் இருந்து வெளியாகும் சேரன் முரசு என்ற பத்திரிகையில் ரிபோர்டராகப் பணியாற்றியபடி, அதில் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதியபோது, எல்லோருக்கும் அறியப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிரப்பான 'சிவாகாமி' என்ற சீரியலில் இடம்பெற்ற ''கண்ணு ரெண்டும் பேசும்'' என்ற பாடலை எழுதியுள்ளார்.

தற்போது, தமிழ் வெப்தூனியா(Tamil Webdunia) என்ற ஆன்லைன் லைன் மீடியாவில் துணை ஆசிரியராகப் (Sub Editor) பணியாற்றி வருகிறார்.

2019 ஆம் ஆண்டு, தன் 25 வயதில் இவரால் எழுதப்பட்ட, இளமைக் கால நிகழ்வுகளை மையப்படுத்திய'' என் முகவரி'' ( En Mugavari) என்ற தன்வரலாற்று நூல் 28 வயதில் வெளியானது.

2020 ஆம் ஆண்டு 'சுழல் சக்கரம்' (புனைவு நாவல்), புதுயுகம் ( கட்டுரைகள்) , என் எழுத்துச் சாசனம்( சேரன் முரசில் எழுதிய கட்டுரைகள்) , காகித இதயம்( சிறுகதை), வாழும் உலகு( மரபுக் கவிதைகள்) , சினோஜ் சிறுகதைகள், மழைக்கீதம்( கவிதைகள்), அழியா ஓவியமாய்ப் பொழியும் காதல்( கவிதைகள் ),என் இளமைக் கால நினைவுகள்(கட்டுரைகள்), காலத்தின் குரல்( கட்டுரைகள்), உலகின் ஓசை( கட்டுரைகள்), ஒரு கலைஞனோடு நான்( ஓவிய ஆசிரியருடனான தன் அனுபவம் ), நலம் விரும்பிக்கு ( ஃபேஸ்புக்கில்'' அவருக்கே உரித்தான நலம் விரும்பிக்கு'' என்ற தலைப்பில் தன் நண்பர்களுக்காக நாள் தோறும் எழுதி வரும் கட்டுரைகள்), எழில்( கவிதைகள்), ஒரு கவிஞனின் தேடல்( புதினம்) , தொழிலாளி( ஒரு தொழிலாளியைப் பற்றிய நாவல்), வெண்பா இரவுகள்( ஓரிரவில் எழுதப்பட்ட 100 வெண்பாக்களின் முத்துகள் அடங்கிய நூலிது), இந்த நிலவுக்கு ஒளியூட்டிய சூரியன்கள் ( கவிஞரின் வாழ்வின் அவர் சந்தித்த மனிதர்கள், அவரது அனுபவங்களைத் தொகுத்து எழுதப்பட்டது), ஜெயஹே ( வெப்தூனியாவில் எழுதிய கட்டுரைகள் ), நதியோடு பேசும் காற்று ( தற்போது எழுதிவரும் நூலின் பெயர்).


இதுவரை கவிஞர் 26 நூல்கள் எழுதியுள்ளார். சினிமாவில், தங்கவேலு கண்ணன் அவர்களின் இயக்கத்தில் கண்டேன் உன்னை தந்தேன் என்னை என்ற படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

கவிஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, ஓவியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sinoj_poet&oldid=3502330" இலிருந்து மீள்விக்கப்பட்டது