[1]சிவபாலன் என்னும் இயற்பெயரை எழுத்துலகத்திற்காக மசிவன் எனும் பெயர் மாற்றம் கொண்டவர்.

மசிவன்

தனது தந்தையின் பெயரான மணி என்ற பெயரின் முதலெழுத்தை தனது பெயருடன் இணைக்கும் பொழுது பா,ல ஆகிய எழுத்துக்களை தவித்தால் மசிவன் (ம.சிவபாலன்) ஆகும்.

பிறப்பு

விழிமா மாவட்டத்தில் ஆயந்தூர் அருகேயுள்ள ஆ. கூடலூர் கிராமத்தில் மணி-சிவலட்சுமி என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இயற்கையிலேயே விவசாய குடும்பத்தில் பிறந்ததால் உழவின் மீதும் வேளாண்மையின் மீதும் அதிக பற்றுடையவர்.

கல்வி

தொடக்கக் கல்வியை ஆயந்தூா் அரசு உதவி பெறும் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருவண்ணாமலை சாரோன் விடுதியில் தங்கி கற்றார். இந்த சாரோன் பள்ளிதான் கவிதை எழுத உந்துதலாகவும் தமிழு இலக்கணத்திற்கு அச்சாரம் போடப்பட்ட இடமாகவும் இப்பள்ளியை நினைவுகூருவார் ஆகையால்தான் தன்னுடைய முதல் கவிதை நூலில் தழிழாசிரியை மார்கிரேட் இன்பமேரிக்கு நன்றி தெரிவித்திருப்பார். மேல்நிலைக் கல்வியை அரசு பள்ளியில் முடித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் இலக்கியவியலையும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலையும் முடித்தார். தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து வருகிறார்.

முதல் கவிதை

தன்னுடைய முதல் கவிதை நூலாக இரண்டு இடைக்கால இலக்கியங்களை இணைத்து கணினிவிடு தூது[2][3], அதி அந்தாதி[2] என்று வெளியிட்டிருக்கிறார். மரபிலக்கணங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.

கணினிவிடு தூது

தலைவன் தான் காதற்வயப்பட்ட தலைவியின்கண் கணினியை தூதாக அனுப்புவதே இந்நூலின் மையம். இதில் கணினியின் தோற்றம், வளர்ச்சி, பெருமைகள், தொல்காப்பிய இயல்பகுப்பு போன்றவை இடம்பெறுகின்றது. காப்புச்செய்யுள் சற்று வித்தியாசமாக பெற்றோர் துதியுடன் ஆரம்பிக்கின்றது புதுமையாக உள்ளது. இந்த நூலை தனது சொந்த பதிப்பகத்தின் வழியே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதி அந்தாதி

அதே நூலில் இந்த அந்தாதி இலக்கியத்தை எழுதியுள்ளார். 50 அந்தாதி யாப்புகள் இதில் இடம்பெறுகின்றன.



  1. {{cite book}}: Empty citation (help)
  2. 2.0 2.1 [www.masivanpathippagam.com "Masivan"]. {{cite web}}: Check |url= value (help)
  3. {{cite book}}: Empty citation (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivabalanmasivan&oldid=3124525" இலிருந்து மீள்விக்கப்பட்டது