ஆர்க்கும் மிக ஈந்தால், அத்தர்மமே கொதித்து , போருக்கு நினைத்தோரை ,பொலி கொடுக்கும் தர்மமது.    .......இது அய்யாவின்அமுத வாக்கு... தர்மம் நியாயத்தராசுபோன்றது, எடை போடும் போது இவன் பெரியவன்,இவன் ஏழை என்றெல்லாம் பார்க்காது ஒரே நீதியைதான் வழங்கும்! அது போல் பசிக்கும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது,நெரம் வந்த உடன் எல்லோருக்கும் பசி ,நாம் கூப்பிடாமலேயே வந்துவிடும்!

பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்கள், ஒரு இடத்தில் தர்மம் நடக்கிறது என்றால்,காரில் வருபவர்களும் வருவார்கள்,குப்பை தொட்டி பக்கத்திலே படுத்து தூங்குபவனும் ஓடி வருவான்,

தர்மம் கொடுக்கும் தர்ம வான்கள் இருவரிடமும் ஒரே உபசரிப்பை காட்ட வேண்டும்,அதை விட்டுவிட்டு,இவனெல்லாம் ஏன் இங்கு வந்தான்,உழைச்சி சாப்பிட்டால் என்ன! இவன் நமது எதிரியாச்சே இவனை இங்க யார் வரச்சொன்னது ,என்று மனதில் நினைத்தாலே தர்மத்தின் சிறப்பு கெட்டு விடும்!

தர்மம் செய்யும் போது,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுபார்த்தால் அந்த தர்மம் தர்மகணக்கில் சேர்க்கபட மாட்டாது!

ஆயிரம் பேருக்கு தர்மம் செய்தேனே அந்த தர்மம் காக்க வில்லையே என்று கூப்பாடு போடுவதில் பலன் இல்லை!

நாம் செய்யும்தர்மத்தின் பலனை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால்,நம்மை எதிர்த்தவரை நாம் செய்த தர்மம் காக்க வேண்டும் என்றால்,எதிரியை வலுவிழக்க செய்யவேண்டும் என்றால்,நாம் செய்யும் தர்மத்தில் தூய்மை இருக்க வேண்டும், நம் உபசரிப்பில் உண்மை இருக்க வேண்டும்

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்று முழுமையாக நம்ப வேண்டும் தன்னை தாழ்த்தி கொண்டவன் இறைவனால் உயர்த்த படுவான் என்ற எண்ணத்தோடு பணிந்திருந்து தர்மத்தை செய்யவேண்டும்! அந்த தர்மம் நம்மை தேடிவரும் தீய சக்திகளை பொலி ஆக்கி விடும்!!என்பதை உணர்ந்து வாழ்வோம் வளம்பெறுவோம்!

 அய்யாஉண்டு!!வாழ்க வளத்துடன்!!!!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vairai_s.muthukumar&oldid=3937546" இலிருந்து மீள்விக்கப்பட்டது