செவ்வாய்
21
மே

Refresh Time

வாருங்கள்!

வாருங்கள், Iramuthusamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சஞ்சீவி சிவகுமார் 15:23, 13 திசம்பர் 2011 (UTC)Reply

பயனர் :Iramuthusamy பதில்

 

தொகுப்புகள்


1


நன்றி தொகு

போர் ஊர்தி, ஆவடி என்னும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் குறிப்பைப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது நீங்கள் ஆவடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று. நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்து ஆக்கம் செய்வது கண்டு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். அருள்கூர்ந்து இயலும் பொழுதெல்லாம் நல்லாக்கம் செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் பெற்ற நல்லறிவும் நல்ல பட்டறிவும், தமிழ் மக்களுக்குச் சென்று பரவுமாறு ஆக்கங்கள் செய்ய வேண்டுகிறேன். உங்கள் நண்பர்கள் சிலரையும் ஊக்குவித்து, நற்பணியாற்ற வழிகாட்டுங்கள். ஆவடியில் என் கல்லூரி நண்பர்கள்/தோழர்கள் செயக்குமார், இராசேந்திரன் ஆகியோர் பணி புரிந்தனர் (இராசேந்திரன் பின்னர் அப்துல் கலாமுடனும், பின்னர் சிதம்பரத்துடனும் பணி புரிந்தார். இராசேந்திரனை இரண்டாடுகளுக்கு முன்பு தில்லியில் சந்தித்தேன். ஒப்பரிய உயர்மணியான மாந்தன் இராசேந்திரன்!). உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. --செல்வா (பேச்சு) 16:52, 15 மார்ச் 2012 (UTC) செல்வா பேச்சு

நான் ஒரு நூலகன். சி.வி.ஆர்.டி.இ நூலகத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளேன். திரு.பி.இராசேந்திரன் அவர்கள் 70 மற்றும் 80 களில் சி.வி.ஆர்.டி.இ இல் பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிறைய கட்டுரைகள் செர்மானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க விரும்பினார். DESIDOC , தில்லியிலிருந்து உடனுக்குடன் உதவி கிடைத்தது. அவருடன் இணைந்து ஒன்றிரண்டு State of the Art Reports செய்தோம். ஒப்பற்ற மனிதர். திரு செயக்குமார் அவர்கள் இணை இயக்குனாரகப் பணியாற்றி அண்மையில் ஒய்வு பெற்றுள்ளார். இவரிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தங்கள் எனக்களித்த ஊக்கமும் உற்சாகமும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. என்னால் இயன்றவரை விக்கிபீடியாவில் பங்களிக்க எண்ணியுள்ளேன். மிக்க நன்றியுடன் --Iramuthusamy (பேச்சு) 17:22, 15 மார்ச் 2012 (UTC)

மிக்க நன்றி! தொகு

  நன்றி
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! Anton (பேச்சு) 05:56, 31 மார்ச் 2012 (UTC)


பயனர் பேச்சு:மதனாஹரன் தொகு

 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Iramuthusamy. உங்களுக்கான புதிய தகவல்கள் மதனாஹரன் இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
--மதனாஹரன் (பேச்சு) 11:54, 5 ஏப்ரல் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல் தொகு

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/இரா. முத்துசாமி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 18:38, 15 மே 2012 (UTC)Reply

முதற்பக்க கட்டுரைத் திட்டம் தொகு






முதற்பக்க அறிமுகம் சிறு குறிப்பு தொகு

திரு.இரவி அவர்களுக்கு வணக்கம். என்னைப்பற்றிய அறிமுகம் தருவது பற்றிய தகவலை இன்று தான் படிக்க நேர்ந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னைப்பற்றிய சிறு குறிப்பினை இணைத்துள்ளேன். புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் அன்பிற்கு நன்றி.

இரா.முத்துசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் எனும் ஊரைச் சேர்ந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் நூலக அறிவியல் பட்ட மேற்படிப்பு பட்டமும், ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (டி.ஆர்.டி.சி) (Documentation Research and Training Centre (DRTC), இந்திய புள்ளியியல் நிறுவனம் (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute), பெங்களூர்]] இல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை (சி.வி.ஆர்.டி.இ,) டி.ஆர்.டி.ஒ, என்ற ஆய்வுக்கூடத்தில் தகவல் அறிவியல் அலுவலராகப் (நூலகராகப்) பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளார். 2011 திசம்பர் முதல் தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வருகிறார். அழகியல், இணையம், இந்து சமயம், இந்துக் கடவுள்கள், உணவுகள், கலைகள், சட்டம், தமிழ் இலக்கியம், தமிழ், தமிழர் அறிவியல், தமிழர் தொழில்நுட்பம், தமிழர், நாட்டுப்புறவியல் மற்றும் மருத்துவம். போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். விக்கிமீடியா காமன்சிலும் பல புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். தமிழ் விக்சனரியிலும் குறிப்பிடும்படி பங்களித்து வருகிறார்.

  படிமம்:Muthusamy.jpg


இரா♣முத்துசாமிஉரையாடுக 18:23, 3 சூன் 2012 (UTC)Reply


அறிமுகக் குறிப்பிறகு நன்றி இரா.முத்துசாமி. நீளம் கருதி சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். நானும் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். கிடைத்ததா எனத் தெரியவில்லை. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:36, 3 சூன் 2012 (UTC)Reply
அறிமுகக் குறிப்புக்கு நன்றி. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு உள்ள இடச்சிக்கலைக் கருதி, தங்கள் தனிப்பட்ட விவரங்களில் சிலவற்றைச் சுருக்கி உள்ளேன். அதே வேளை, தங்கள் விக்கிப் பங்களிப்புகளில் இருந்து கூடுதல் விவரங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் முதற்பக்கத்தில் இருந்து வாசகர்களை ஈர்க்க முடியும். தங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவலை பயனர் பக்கத்தில் முழுமையாகத் தரலாம். வரும் சூன் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு, தங்கள் முதற்பக்க அறிமுகம் இடம்பெறும். நன்றி--இரவி (பேச்சு) 05:27, 12 சூன் 2012 (UTC)Reply

பார்வதிஸ்ரீ அறிமுகக் குறிப்பு - நன்றி தொகு

என்னைப்பற்றிய அறிமுகக் குறிப்பினை இத்துனை விரைவாக பதிவேற்றிய தங்கள் அன்பிற்கு நன்றி

இரா♣முத்துசாமிஉரையாடுக 10:52, 4 சூன் 2012 (UTC)Reply


ஐயா வணக்கம். தாங்கள் பங்களித்த கட்டுரைகளை விட, தாங்கள் தொடங்கிய கட்டுரைகளைத் தருதல் நன்று. சான்றாக திருவிளக்கு வழிபாடு,மூலிகைக் குடிநீர்,ஈயம் பூசுதல்,திருமயம் மலைக்கோட்டை,அத்தி மரச்சிலைகள், வைரப்பெருமாள் கதை, ரேக்ளா வண்டிப் பந்தயம், பவானி கைத்தறி தரை விரிப்பு, மரப்பாச்சி பொம்மைகள், கொலுசு, திருமண் ஆகியவற்றை இணைத்து விடுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு தொகு






பயனர் பெட்டிகள் தொகு

வணக்கம் இரா.முத்துசாமி, நீங்கள் உருவாக்கிய பயனர்பெட்டிகள் தவறான பெயர் வெளியில் உருவாக்கப்பட்டிருந்தது (பயனர் பெயர்வெளி--->ஒரு பதிவு செய்யாத பயனரைப் போல). எனவே அதனை சரியான தலைப்பிற்கு (வார்ப்புரு வெளிக்கு) நகர்த்தியுள்ளேன். தங்கள் பயனர் பக்கத்திலும் அதற்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.. நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 11:57, 16 சூன் 2012 (UTC)Reply

சண்முகம்ப7
பயனர்பெட்டிகள்
வார்ப்புருவை திருத்தியமைத்தமைக்கு நன்றி. இனி எப்படி பதிவேற்ற வேண்டும்? விளக்கினால் பயன்பெறுவோம். தங்கள் அன்புக்கு நன்றி

இரா♣முத்துசாமிஉரையாடுக 12:48, 17 சூன் 2012 (UTC)Reply


வார்ப்புருவை உருவாக்குவதும் எப்போதும் கட்டுரையை உருவாக்குவது போன்றதுதான். (தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்).. முன்னொட்டாக வார்ப்புரு:<<பெட்டியின் பெயர்>> என தட்டச்சிட்டு தொடங்க வேண்டும். இவ்வாறு பயனர் பெட்டிக்கான வார்ப்புருக்களை உருவாக்கும்போது வார்ப்புரு:பயனர் <<பெட்டியின் பெயர்>> என பொதுவாக (கண்டிப்பாக பயனர் சேர்த்துதான் உருவாக்க வேண்டும் என்றில்லை :), அவ்வாறு உருவாக்கினால் BABEL லில் இணைக்கும் போது சரியாக வரும் ) உருவாக்குவோம். தாங்கள் உருவாக்கும் போது பயனர்:<<பெட்டியின் பெயர்>> என உருவாக்கியதால் அது பயனர் பெயர்வெளியாக உருவாகிவிட்டது. அதனை நகர்த்தல் மூலம் வார்ப்புரு வெளிக்கு நகர்த்தினேன். மேலும் பெயர்வெளிகள் பற்றிய விவரங்களுக்கு பார்க்க WP:NS--சண்முகம்ப7 (பேச்சு) 14:06, 17 சூன் 2012 (UTC)Reply

நன்றிகள்! (முதற்பக்க அறிமுகம்) தொகு

பணி ஓய்விற்குப் பின்னரும் அதே உத்வேகத்தை விக்கியில் காட்டிவரும் உங்களின் 'தகவலளிப்புத் தொண்டிற்கு' எமது நன்றிகள்!
அன்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:49, 17 சூன் 2012 (UTC)Reply

மா. செல்வசிவகுருநாதன் பாராட்டுக்கு நன்றி தொகு

பலர் ஆற்றிவரும் விக்கி பணிகள் மலைப்பாக உள்ளது. தாங்கள், ரவி அவர்கள், பார்வதிஸ்ரீ அவர்கள், தென்காசி சுப்பிரமணியன் அவர்கள், த. உழவன் அவர்கள், மதனாஹரன் அவர்கள், சண்முகம் அவர்கள், இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.
இவற்றில் என் பங்கு மிகக் குறைவு. வரும் காலத்தில் தங்களைப் போல கட்டுரைகளில் பிழை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்யலாம் என்று நினைத்துள்ளேன். தங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி.

இரா♣முத்துசாமிஉரையாடுக 13:31, 17 சூன் 2012 (UTC)Reply


முதற்பக்க அறிமுகம் வாழ்த்துகள் தொகு

  • ஐயா, தங்களை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்ச்சி. தங்களின் ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு நல்கும் தங்கள் பணி மேன்மேலும் சிறந்தோங்க இறைவனை வேண்டுகிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:40, 17 சூன் 2012 (UTC)Reply
தங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி.--Kanags \உரையாடுக 21:09, 17 சூன் 2012 (UTC)Reply
முதல் பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:48, 17 சூன் 2012 (UTC)Reply
தங்கள் முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. தங்கள் பங்களிப்பு முனைப்பாகத் தொடர்ந்திட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 01:03, 18 சூன் 2012 (UTC)Reply
தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. தங்கள் ஓய்வுக்காலத்தை விக்கிப்பீடியாவின் மூலமாகப் பிறருக்குப் பயனுடையதாகச் செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 18 சூன் 2012 (UTC)Reply

வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 13:32, 18 சூன் 2012 (UTC)Reply

உங்கள் அறிமுகத்தை இன்று முதற்பக்கத்தில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். உங்கள் நற்பணிகளுக்கு நல்வாழ்த்துகள்! நீங்கள் தொடர்ந்தும் பங்களித்து அறிவு பரப்ப வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 16:33, 20 சூன் 2012 (UTC)Reply
பணிகளுக்கு இடையில் விக்கிபீடியாவிற்கு தாங்கள் அளித்துவரும் பங்களிப்புகள் எப்போதும் முனைப்பாகத் தொடர்ந்திட என் வாழ்த்துகள். --எஸ்ஸார் (பேச்சு) 14:15, 24 சூன் 2012 (UTC)Reply
  நன்றி
தமிழ் விக்கி முதற்பக்க அறிமுகம் கண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

இரா♣முத்துசாமிஉரையாடுக


தமிழ் விக்கிபீடியாவில் அனைவருடைய வழிகாட்டுதல்களாலும், பிற உதவிகளாலும் என்னால் இந்த சிறிய பங்களிப்பை செய்ய இயன்றது. இது போல தொடர்ந்து தங்கள் ஆதரவையும் உதவிகளையும் வருங்காலத்திலும் நல்கி உதவ வேண்டுகிறேன். இரா♣முத்துசாமிஉரையாடுக 11:09, 21 சூன் 2012 (UTC)Reply


தனிக் கட்டுரை ஆக்குங்கள் தொகு

தாங்கள் தொடங்கிய செட்டிநாட்டு அணிகலன்கள்: கழுத்திரு (நகரத்தார் தாலி), கௌரி சங்கம்‎ எனும் கட்டுரை கழுத்திரு (நகரத்தார் தாலி) எனும் பெயரிலான வழிமாற்றுடன் கழுத்திரு (அணிகலன்) என்கிற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு விட்டது. செட்டி நாட்டினரான நகரத்தார் திருமணங்களில் மணமகள் கழுத்தில் அணியும் கழுத்திரு தனிக் கட்டுரையாகவும், மணமகன் அணியும் கௌரி சங்கம் தனிக் கட்டுரையாகவும் இருப்பதே சிறப்பு. எனவே தாங்களே இக்கட்டுரையிலுள்ள கௌரி சங்கம் எனும் தலைப்பிலான செய்திகளைத் தனியே பிரித்து கௌரி சங்கம் (அணிகலன்) எனும் தலைப்பில் தனிக் கட்டுரையாக்கவும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:48, 26 சூன் 2012 (UTC)Reply

தேனீ எம் சுப்பிரமணி அவர்களுக்கு

தாங்கள் தொடங்கிய செட்டிநாட்டு அணிகலன்கள்: கழுத்திரு (நகரத்தார் தாலி), கௌரி சங்கம்‎ எனும் கட்டுரை கழுத்திரு (நகரத்தார் தாலி) எனும் பெயரிலான வழிமாற்றுடன் கழுத்திரு (அணிகலன்) என்கிற தலைப்புக்கு நகர்த்தியமைக்கு நன்றி. இதுபோல மணமகன் அணியும் கௌரி சங்கம் தனிக் கட்டுரையாகவும் இருப்பதே சிறப்பு என்று தாங்கள் விரும்பியபடி இக்கட்டுரையிலுள்ள கௌரி சங்கம் எனும் தலைப்பிலான செய்திகளைத் தனியே பிரித்து கௌரிசங்கம் (அணிகலன்) எனும் தலைப்பில் தனிக் கட்டுரையாக உருவாக்கியுள்ளேன். தங்கள் வழிகாட்டுதலுக்கும் அன்பிற்கும் நன்றி. இரா♣முத்துசாமிஉரையாடுக 14:06, 26 சூன் 2012 (UTC)Reply


பிறந்த நாள் வாழ்த்துகள் தொகு

  வணக்கம் Iramuthusamy அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாகரன் (பேச்சு) 02:30, 20 பெப்ரவரி 2013 (UTC)
 
இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள் !! --மணியன் (பேச்சு) 02:54, 20 பெப்ரவரி 2013 (UTC)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இரா.முத்துசாமி !!--maathavan 16:04, 20 பெப்ரவரி 2014 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு தொகு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:00, 4 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:50, 24 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

விக்கித் திட்டம் 100 அழைப்பு தொகு

வணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி...--இரவி (பேச்சு) 15:24, 11 சனவரி 2015 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

கட்டுரையாக்க அடிப்படைகள் தொகு

 

வணக்கம், Iramuthusamy!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 03:07, 5 ஏப்ரல் 2022 (UTC)

பகுப்பாக்கம் தொகு

பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும் --AntanO (பேச்சு) 02:36, 6 ஏப்ரல் 2022 (UTC)

இயன்றவரை எனது கட்டுரைகளுக்கு பகுப்பாக்கம் செய்துள்ளேன். ஏதாவது பிழை இருப்பின் அருள்கூர்ந்து சுட்டிக்காட்டுங்கள். துப்பரவு வார்ப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி ஐயா.. Iramuthusamy (பேச்சு) 14:54, 6 ஏப்ரல் 2022 (UTC)

குறிப்பு தொகு

விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் அவசியமானது. ஃ மொழிமுதல் எழுத்துத்தாக அமைய முடியாது. காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 10:09, 8 ஏப்ரல் 2022 (UTC)

கவனியுங்கள் தொகு

நீங்கள் அண்மையில் எழுதிய சில கட்டுரைகளைத் திருத்தியிருக்கிறேன். அவற்றைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:24, 10 ஏப்ரல் 2022 (UTC)

மிக்க நன்றி.. ஐயா.. திருத்தங்களை பார்த்தேன்.. படிப்படியாக கற்றுக்கொண்டு வருகிறேன்.. எனினும் மேற்கோள் சுட்டுதலை எளிதில் விளங்கிக் கொள்ள இயலவில்லை.. நன்றி.. Iramuthusamy (பேச்சு) 15:37, 10 ஏப்ரல் 2022 (UTC)
இங்கு அவர்களுக்கு.. ஐயா.. என விழித்திருந்தீர்கள். அவ்வாறு இல்லாமல் பெயர் சொல்லியே அழைக்கலாம். --AntanO (பேச்சு) 16:16, 17 ஏப்ரல் 2022 (UTC)
 

வணக்கம், Iramuthusamy!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 02:36, 29 ஏப்ரல் 2022 (UTC)

AntanO ஐயா,

ஏற்கனவே விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை மேம்படுத்துதல், பிழை திருத்தம் செய்தல் ஆகிய பணிகளை செய்வதற்கு ஆயத்தமாக உள்ளேன். எனினும் நான் விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது குறித்து இன்னமும் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. எனக்கு என் மேல் நம்பிக்கை வந்தவுடன் கட்டாயம் இத்தகைய பணியில் ஈடுபடுவேன். புகைப்படங்களை பதிவேற்றுகிறேன்.

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம் என்ற கட்டுரை என்னால் அகரம் வலைத்தளத்தில் செப்ரெம்பர் 19, 2018 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இக்கட்டுரை என்னுடைய அகரம் வலைத்தளத்தில் என்னுடைய சொந்த ஆக்கமாக வெளியிடப்பட்டது. சென்னையைச் சேர்ந்த REACH Foundation, நிறுவனம் நடத்திய கல்வெட்டு வகுப்பில் பயின்றபோதும் தொண்டூருக்கு சக மாணவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோதும் கட்டுரை குறித்த தகவல்களை சேகரித்தேன். என்னுடைய கட்டுரையை பயன்படுத்தி விக்கிபீடியாவில் எழுதி வெளியிட்ட கட்டுரை பதிப்புரிமை சிக்கல் காரணமாக நீக்கப்பட்டதாக இன்று தெரிந்து கொண்டேன். இது குறித்து இரண்டு விடையங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
1. அகரம் கட்டுரை என்னுடைய ஆக்கம் என்று கூறி கட்டுரையின் பதிப்புரிமைச் சிக்கலுக்குத் தீர்வு காண இயலுமா?
2. என்னுடைய வலைத்தளத்திலிருந்து கையாண்ட தகவல்களை நீக்கிவிட்டு கட்டுரையை வெளியிட இயலுமா? (ஏனெனில் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட தகவல்களின் மூலங்களையும் சான்றாக அளித்துள்ளேன். வலைத்தளத்தில் உள்ள பத்திகளை அப்படியே இணைத்துள்ளேன். அது தவறுதான்)
விக்கிபீடியா விதிகளின்படி கட்டுரையை மீட்டெடுக்க நான் என்ன செய்ய வேண்டும்? தங்கள் விளக்கம் மேற்கொண்டு விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும்போது எனக்குப் பெரிதும் உதவும். இரா.முத்துசாமி (பேச்சு) 15:03, 29 ஏப்ரல் 2022 (UTC)
  • உங்களுடைய ஆக்கமாயினும், முறையான பதிப்புரிமம் அளிக்காவிட்டால், இங்கு அது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். அல்லது நீங்கள் உங்களை வலைப்பூவை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தின் கீழ் வெளியிட வேண்டும். இது சாத்தியமா? விக்கிப்பீடியாவிற்கு wordpress போன்ற வலைப்பூக்களின் ஊடாக கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தை அனுப்புவதில் தொழினுட்பச் சிக்கல் உள்ளது.
  • //என்னுடைய வலைத்தளத்திலிருந்து கையாண்ட தகவல்களை நீக்கிவிட்டு கட்டுரையை வெளியிட இயலுமா?// இணைய சேமிப்பகங்களில் அது சேமிக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அதன்படி, கட்டுரையை மீட்க முயற்சிக்கலாம். --AntanO (பேச்சு) 04:58, 1 மே 2022 (UTC)Reply

AntanO
ஐயா,
தங்களது அறிவுறுத்தலின்படி தங்கள் ஒப்புதலுக்கான வரைவு ஒன்றினை பயனர்:Iramuthusamy/தொகுப்பு2 (மணல்தொட்டி) இங்கு காணலாம்.
தொண்டுர் விண்ணம்பாறைப் பாறை விஷ்ணு சிற்பமும் பல்லவர் கல்வெட்டும் (கட்டுரை)https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Iramuthusamy/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%812#%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
தங்கள் முடிவிற்கேற்ப கட்டுரையை மீட்டெடுக்க இயலுமா? என்பதைத் தெரிவிக்கவும். நன்றி. இரா.முத்துசாமி (பேச்சு) 21:17, 1 மே 2022 (UTC)Reply
AntanO
ஐயா,

மேற்குறித்த கோரிக்கை பற்றிய சிறு நினைவூட்டல் இது. நன்றி. இரா.முத்துசாமி (பேச்சு) 15:28, 4 மே 2022 (UTC)Reply

தாமதமான பதிலுக்கு வருத்தங்கள். தொண்டுர் விண்ணம்பாறைப் பாறை விஷ்ணு சிற்பமும் பல்லவர் கல்வெட்டும் கட்டுரை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மணல் தொட்டியில் செய்த தொகுப்பு சரியாகவுள்ளது. அக்கட்டுரையில் இதனைச் சேர்த்து பதிப்புரிமை மீறல் இல்லாதவாறு மாற்றிவிடுங்கள். --AntanO (பேச்சு) 01:43, 6 மே 2022 (UTC)Reply
ஐயா தாங்கள் அறிவுறுத்தியபடி கட்டுரையில் மணல்தொட்டி தொக்குப்பினை சேர்த்து விட்டேன். மிக்க நன்றி. இது போல "தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு" கட்டுரைக்கான வரைவையும் சர்பார்த்து ஒப்புதல் வழங்க வேண்டுகிறேன். கட்டுரை மணல்தொட்டியில் தங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வரைவு:

தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Iramuthusamy/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%812 தங்கள் ஒப்புதலுக்கான வரைவு ஒன்றினை பயனர்:Iramuthusamy/தொகுப்பு2 (மணல்தொட்டி) இங்கு காணலாம். கட்டுரையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டுகிறேன். நன்றி

. இரா.முத்துசாமி (பேச்சு) 18:27, 6 மே 2022 (UTC)Reply

AntanO
ஐயா,

மேலே குறிபிட்ட கோரிக்கை பற்றிய சிறு நினைவூட்டல் இது. நன்றி. இரா.முத்துசாமி (பேச்சு) 21:32, 12 மே 2022 (UTC)Reply

வணக்கம். கட்டுரை மீட்கப்பட்டுள்ளது. மாறவாமல் தற்போது உள்ளவற்றை நீக்கி உங்கள் மணல் தொட்டியில் உள்ளதைச் சேர்த்துவிடுங்கள். நன்றி. AntanO (பேச்சு) 09:23, 15 மே 2022 (UTC)Reply
AntanO அவர்களுக்கு வணக்கம்... தாங்கள் அறிவுறுத்தியபடி "தொண்டூர் சமணர் குகையில் தமிழ் பிராமி கல்வெட்டு" கட்டுரையில் மணல்தொட்டி தொகுப்பினை சேர்த்து விட்டேன். மிக்க நன்றி ஐயா.. இரா.முத்துசாமி (பேச்சு) 15:57, 15 மே 2022 (UTC)Reply

மே 2022 தொகு

வணக்கம். (பட் ரோடு ஜும்மா மசூதி) என்பதற்கு பட் சாலை ஜும்மா மசூதி என்றும் தலைப்பிடலாம். நீங்கள் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தலைப்பாக கொடுக்க வேண்டாம். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 00:38, 1 மே 2022 (UTC)Reply

மிகவும் சரி மாற்றிவிடுகிறேன் இரா.முத்துசாமி (பேச்சு) 14:09, 1 மே 2022 (UTC)  Y ஆயிற்று இரா.முத்துசாமி (பேச்சு) 21:23, 1 மே 2022 (UTC)Reply

குறுங்காலிசுவரர் கோவில், கோயம்பேடு குறித்த ஐயம் தொகு

திரு.:கி.மூர்த்தி அவர்களுக்கு

வணக்கம்

இன்று குறுங்காலிசுவரர் கோவில், கோயம்பேடு என்ற கட்டுரையை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டேன். சற்று நேரத்தில் இக்கட்டுரையை விரிவாக்கம் செய்யவும் முயன்று சில செய்திகளை இணைத்து வெளியிட வேண்டி பொத்தானை அழுத்த முனைந்த போது தங்கள் சில திருத்தங்களை செய்துள்ளது தெரிய வந்தது. நான் மேற்கொண்ட திருத்தங்களை வெளியிட முடியாமல் போயிற்று. எனினும் சற்று நேரத்தில் நான் மேற்கொண்ட விரிவாக்கத்தை இணைத்துவிட்டேன். தாங்கள் விரும்பினால் ஒரு முறை பார்த்துவிடுங்கள். நன்றி.. இரா.முத்துசாமி (பேச்சு) 22:14, 5 மே 2022 (UTC)Reply

திரைப்படங்களின் தலைப்பு தொடர்பாக தொகு

வணக்கம் தாங்கள் புதியதாக தொடங்கும் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளுக்கான தலைப்பில் ஹரிவு (திரைப்படம்) என்பது போன்று அடைப்புக் குறிக்குள் திரைப்படம் என்று பெயர் இடவேண்டியது அவசியமில்லை ஒரு திரைப்படத்தின் பெயரில் வேறு ஒரு கட்டுரை இருந்தால் மட்டும் அடைப்புக் குறிக்குள் திரைப்படம் என்று குறிக்கலாம். நன்றி--அருளரசன் (பேச்சு) 14:12, 10 மே 2022 (UTC)Reply

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு தொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

மொழிமுதல் எழுத்துக்கள் தொகு

மொழிமுதல் எழுத்துக்கள் - மெய் எழுத்துக்களை மொழிமுதலாகக் கொண்டு சொல் அமைப்பது இலக்கணப்பிழையும் உச்சரிக்க முடியாத நிலையும் ஆகும். மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரையைக் கொண்டுள்ளன. AntanO (பேச்சு) 03:18, 27 சூலை 2022 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

பகுப்பு தொகு

 

வணக்கம், Iramuthusamy!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும் - முறையாகப் பகுப்பிடுங்கள். விளங்காவிட்டால் உதவிப்பக்கத்தில் கேளுங்கள். --~AntanO4task (பேச்சு) 02:27, 23 ஆகத்து 2022 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


பைரவகோனா தொகு

கிருஷ்ணமூர்த்தி
பைரவகோனா என்பதே சரி. கோனா என்றால் தெலுங்கில் அருவி என்பது பொருள். இரா.முத்துசாமி (பேச்சு) 16:25, 14 அக்டோபர் 2022 (UTC)Reply

தகவல் தொகு

வணக்கம் ஐயா. தலைவெட்டி முனியப்பன் கோவில் வழக்கு என்பதாக தலைப்பை மாற்றியுள்ளேன். மேலும், இக்கட்டுரையானது விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும். ஏது உதவி தேவையெனில் கேளுங்கள். நன்றி.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 16 அக்டோபர் 2022 (UTC)Reply

வணக்கம் ஐயா, விக்கியாக்கம் பற்றி எனக்குத் தெரியவில்லை. உதவி தேவை. தலைப்பு சுருக்கமாக உள்ளது. புத்தர் குறித்த clue எதுவுமில்லை. எனக்கு ஆட்சேபணை இல்லை. மிக்க நன்றி. இரா.முத்துசாமி (பேச்சு) 07:48, 16 அக்டோபர் 2022 (UTC)Reply

விக்கியாக்கம் குறித்து ஐயா, தலைவெட்டி முனியப்பன் கோவில் வழக்கு என்ற கட்டுரையை விக்கியாக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தீர்கள். விக்கியாக்கம் என்னும் குழுச்சொல் (Jargon) குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் உதவி தேவை என்றும் சொல்லியிருந்தேன். விக்கியாக்கம் குறித்த விளக்கம் விக்கிபீடியாவிலும் இல்லை. எனவே இது குறித்து விளக்கம் தர இயலுமா? இரா.முத்துசாமி (பேச்சு) 17:04, 20 அக்டோபர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open தொகு

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

குறிப்பிடத்தக்கமை தொகு

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை அற்ற கட்டுரைகளை நீக்குதல் என்பது நடைமுறை. ஆர்வமிக்க செய்தி, சம்பவம் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகள் கலைக்களஞ்சிய கட்டுரைகள் ஆகா. ஆ.வி.யில் மேலதிக தகவல் உள்ளது. en:Wikipedia:Notability AntanO (பேச்சு) 03:46, 24 நவம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline தொகு

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு தொகு

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iramuthusamy&oldid=3780971" இலிருந்து மீள்விக்கப்பட்டது