வாருங்கள்!

வாருங்கள், Kuzhali.india, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 07:16, 18 மே 2014 (UTC)Reply

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Kuzhali.india!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 07:16, 18 மே 2014 (UTC)Reply

வணக்கம் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உங்களது பங்களிப்பு தொடர வேண்டும். கட்டுரைகளை உருவாக்கும்ப் பொழுதோ அல்லது அதனை விரிவக்கும்ப் பொழுதோ, அதற்குரிய மேற்கோள்களை இணைக்க தவறாதீர்கள். நன்றி. - Vatsan34 (பேச்சு) 15:19, 23 மே 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களது பங்களிப்பிற்குப் பாராட்டுகள். உங்களது கட்டுரைகள் சூரிய வம்சம், வீரம் விளைந்தது இரண்டிலும் விக்கி நடைக்கேற்றவாறு செய்யப்பட்டிருக்கும் சிறுசிறு மாற்றங்களைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு அவை உதவும்.--Booradleyp1 (பேச்சு) 05:30, 25 மே 2014 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை தொகு

 

வணக்கம், Kuzhali.india!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 17:41, 10 சூன் 2014 (UTC)Reply

சிறு வேண்டுகோள் தொகு

நீதிபதியின் மரணம் (நூல்) கட்டுரையின் தகவற்பெட்டியில், ஐஸ்பிஎன் சுட்டெண்: 978-81-234-1643-1 எனத் தரப்பட்டுள்ளது. ஆனால் இங்கு [1] 9788123416434 எனத் தரப்பட்டுள்ளது. சற்று சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:36, 13 சூன் 2014 (UTC)Reply

வணக்கம் குழலி, எனது பேச்சுப்பக்கத்தில் நீங்கள் கேட்டிருந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை இங்கு பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பேச்சுப்பக்கங்களில் உங்கள் கருத்தைப் பதிவுசெய்த பின் உங்கள் கையொப்பமிட மேலுள்ள நீலப்பட்டையில் பேனாவடிவைச் சொடுக்கி பக்கத்தைச் சேமிக்க உங்கள் கருத்தின் இறுதியில் உங்கள் கையொப்பம் தோன்றும்.--Booradleyp1 (பேச்சு) 14:28, 18 சூன் 2014 (UTC)Reply

பாராட்டு தொகு

குழலி, தமிழ் விக்கியில் இணைந்த குறுகிய காலத்திலேயே கட்டுரைகள் உருவாக்கம், பிற கட்டுரைகளில் உரைதிருத்தமென உங்களது பங்களிப்புகள் என்னை வியக்க வைக்கிறது. உங்கள் பணி பாராட்டுக்குரியது. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளால் தமிழ் விக்கியை வளப்படுத்த எனது வாழ்த்துகள்.

நீங்கள் தொடங்கிய சில கட்டுரைகளில், விக்கிக் கொள்கை மற்றும் விக்கி நடை காரணமாக சில சொற்கள், பகுதிகளை நீக்கியிருக்கிறேன். அவற்றையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:30, 25 சூன் 2014 (UTC)Reply

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:18, 25 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:30, 25 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:09, 26 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம்--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 07:11, 26 சூன் 2014 (UTC)Reply

நன்றி--Kuzhali.india (பேச்சு) 06:50, 26 சூன் 2014 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் - படிமம் தொகு

படிமம்:Green Zone poster.jpg இப்படிமத்தில் முறையான வார்ப்புருவை இணைத்துள்ளேன். அவ்வாறே பதிவேற்றும் படிமங்கள் அனைத்திற்கும் முறையான வார்ப்புருக்களை இணையுக்கப்பட வேண்டும். கட்டற்ற முறையில் பயன்படுத்த முடியாத படிமங்கள் நீக்கப்படும். மேலதிக உதவி தேவையெனின் குறிப்பிடுங்கள். நன்றி. இதனையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் --AntonTalk 18:13, 27 சூன் 2014 (UTC)Reply

நன்றி--Kuzhali.india (பேச்சு) 07:06, 28 சூன் 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

  • வலைப்பூக்கள் (குறிப்பாக தனிநபர்) விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் ஆகா. அவற்றை மேற்கோள்கள்களாகச் சுட்டுவதைத் தவிர்க்கவும்.
  • அதேபோல ஆங்கில விக்கி அல்லது பிறமொழி விக்கிப்பீடியாக் கட்டுரைகளையும் மேற்கோள்களாகத் தர வேண்டாம். அவை விக்கியிடை இணைப்புகளாக மட்டுமே இணைக்கப்படுகின்றன.
  • விக்கிப்பீடியாவின் நடுநிலைமை காரணமாக நபர்கள் யாரையும் திரு, திருமதி, அவர்கள்,... போன்ற மரியாதை அடைமொழிகள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அத்தகைய அடைமொழிகளையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:42, 28 சூன் 2014 (UTC)Reply

தகவலுக்கும் திருத்தங்களுக்கும் நன்றி.--Kuzhali.india (பேச்சு) 13:20, 29 சூன் 2014 (UTC)Reply

250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Kuzhali.india!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 18:15, 3 சூலை 2014 (UTC)Reply

பயனர் பக்கம்... தொகு

வணக்கம்! உங்களைப் பற்றிய பொதுவான (பகிரக்கூடிய) தகவல்களை பயனர்:Kuzhali.india எனும் பக்கத்தில் தரலாமே?! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:39, 10 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம் உங்களைப் பற்றி நாங்கள் அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். :) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:50, 10 சூலை 2014 (UTC)Reply

பயனர் பக்க தகவல்களுக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:33, 16 சூலை 2014 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு தொகு

பேச்சு:கிருஷ்ண சுவாமி அய்யர் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:12, 18 சூலை 2014 (UTC)Reply

ஆஸ்திரேலிய சர்ச்சை தொகு

நீங்கள் எழுதிய ஆஸ்திரேலிய பேசன் ஷோ சர்ச்சை என்னும் கட்டுரையை நீக்கியிருக்கிறேன். வருந்த வேண்டாம். ஒரு கட்டுரையை விக்கிப்பீடியாவில் எழுத வேண்டுமென்றால், அது குறிப்பிடத் தக்கது தானா என்று பார்க்க வேண்டும். அந்த கட்டுரையில் குறிப்பிடத்தக்க தகவல்கள் இல்லாமையால் நீக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான தகவல் ஏதேனும் இடம் பெற்றிருக்காததும் ஒரு காரணம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 27 சூலை 2014 (UTC)Reply

தமிழ்க்குரிசில், இவ்வளவு அவசரமாக நீக்கத் தேவையில்லை. நானே நேரடியாக நீக்கி இருக்க முடியுமே? உரையாடலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றே வார்ப்புரு இட்டேன். நிருவாகி அல்லாத பயனர்கள் இவ்வாறு வார்ப்புரு இடும் போது தேவை கருதி உடனே நீக்கலாம். உரையாடலுக்கான வாய்ப்பின்றி நீக்கப்படுவது கட்டுரையை எழுதியவருக்கு ஊக்கம் குன்றச் செய்யலாம். கட்டுரையைத் தற்காலிகமாக மீட்டுள்ளேன். --இரவி (பேச்சு) 10:53, 27 சூலை 2014 (UTC)Reply
நீக்கியவுடன் தான் போதிய விளக்கத்தை தந்துவிட்டேனே! மீட்டெடுத்ததும் சரியே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:58, 27 சூலை 2014 (UTC)Reply

பதக்கம் தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
கட்டுரைகளில் பிழை திருத்தங்கள், விக்கிப்படுத்தல் போன்ற பணிகளை செய்வதாலும் இனிமேலும் இது போல் உங்கள் பங்களிப்புகள் தொடர்ந்து வருவதற்காகவும் இப்பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:15, 28 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம், அசர வைக்கும் வேகம்!! என் வாழ்த்துகளும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:37, 28 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:44, 30 சூலை 2014 (UTC)Reply
அதிர வைக்கும் வேகம்...... வாழ்த்துக்கள்..... குழலி.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:35, 1 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் தொடர்ந்தும் முனைப்புடன் பங்களிக்க வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:20, 2 ஆகத்து 2014 (UTC)Reply

  விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 03:26, 5 ஆகத்து 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

பார்க்கவும்: பேச்சு:எண்ணங்களின் சங்கமம்--Booradleyp1 (பேச்சு) 06:07, 6 ஆகத்து 2014 (UTC)Reply

எண்ணங்களின் சங்கமம் கட்டுரையில் ஜே. பிரபாகர் குறித்த பக்கத்தை நீக்கியுள்ளேன். அவர் பற்றிய தனிக்கட்டுரை உருவாக்கி அந்த விவரங்களை இணைத்துக் கொள்ளுமாறும் தொடர்ந்து நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் விக்கிநடையில் அமைய உங்களது கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:28, 6 ஆகத்து 2014 (UTC)Reply

ஜெ. பிரபாகர் தனிக் கட்டுரை உருவாக்கியதற்கு நன்றி. ஆனால் தனிநபர் குறித்த கட்டுரையின் முறையான முழுவடிவில் அது இல்லையென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  • பிரபாகரின் அறிமுகமே அவர் எண்ணங்களின் சங்கமத்தின் நிறுவனர் என உள்ளது. அவர் ஓவியர், அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் என பன்முகமுடையவராய் இருப்பதால் நிறுவனர் என்பதை மட்டும் முதற்குறிப்பாகத் தர வேண்டாம்.
  • முடிந்தவரை தகவற் பெட்டி இணைக்கலாம்
  • பிறப்பு--தேதி, இடம் (தெரிந்தால்) சேர்க்கலாம்.
  • கட்டுரையின் தொடக்கத்தில் வரும் தலைப்பினை தடித்த எழுத்துக்களில் தரவேண்டும்.
  • முன்மாதிரியாக பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை கட்டுரையைப் பார்க்கவும்.

விரிவான கட்டுரையாக அமையாவிடினும் முறையான வடிவில் அதை மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:02, 6 ஆகத்து 2014 (UTC)Reply

நன்றி. மேற்கோள் தகவலுதவிக்கு நன்றி. சமயத் தலைவர்களுக்கு அதிவணக்கத்துக்குரிய/மதிப்பிற்குரிய போன்ற அடைமொழிகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்தினால் மற்ற கட்டுரைகளில் மாற்ற உதவியான தகவலாக அமையும். --Kuzhali.india (பேச்சு) 04:15, 7 ஆகத்து 2014 (UTC)Reply

@பயனர்:Kanags, இங்கு Kuzhali.indiaக்கு நீங்கள் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 7 ஆகத்து 2014 (UTC)Reply

எனது புரிதலின்படி பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை கட்டுரையில் ’அதிவணக்கத்துக்குரிய’ என்பது ‘Reverend’ என்பதற்கானதென நினைக்கிறேன். (சுவாமி என விவேகானந்தருக்குச் சேர்ப்பது) இது பொதுவாக அனைத்து சமயத் தலைவர்களுக்கும் விக்கியில் பயன்படுத்த முடியாதென்றே கருதுகிறேன். விக்கியின் கொள்கைகளை ஆழமாகத் தெரிந்த பிற பயனர்களின் கருத்தினைக் கோரலாம். பொறுத்திருங்கள்.--Booradleyp1 (பேச்சு) 05:44, 7 ஆகத்து 2014 (UTC)Reply

நபர்கள் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் பட்டப்பெயர் (மேதகு, வணக்கத்துக்குரிய, முனைவர்) போன்றவற்றை தலைப்புகளில் பயன்படுத்த முடியாது. ஆனால், கட்டுரைகளிலோ அல்லது தகவற்சட்டங்களிலோ பயன்படுத்தலாம். சுவாமிகள் என்ற சொல்லை தலைப்பில் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் விக்கியில் சில கட்டுரைகள் சுவாமிகளுடன் சேர்ந்து தலைப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:33, 7 ஆகத்து 2014 (UTC)Reply

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Kuzhali.india!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

-- mohamed ijazz(பேச்சு) 10:40, 6 ஆகத்து 2014 (UTC)Reply

பதக்கம் தொகு

  விக்கிப்புயல் பதக்கம்
குழலி, உங்கள் புயல் போன்ற பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். விரைவிலேயே விக்கி கொள்கைகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்வீர்கள்... வாழ்த்துக்கள். தொடர்ந்தும் இதே வீச்சில் பங்களிக்க வாழ்த்துகிறேன். ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:13, 7 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் சிறப்பான தொடர்பங்களிப்பிற்கு வாழ்த்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 7 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் தொடர்ந்தும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகின்றேன். :)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:31, 8 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் சிறப்பான தொடர்பங்களிப்பிற்கு வாழ்த்துகிறேன்-- mohamed ijazz(பேச்சு) 09:02, 8 ஆகத்து 2014 (UTC)Reply

நன்றி--Kuzhali.india (பேச்சு) 09:10, 8 ஆகத்து 2014 (UTC)Reply

மேற்கோளும் சான்றுகளும் தொகு

வணக்கம் குழலி! கட்டுரைகளை விரைவில் மேம்படுத்தி வருவதைக் கண்டேன். மகிழ்ச்சி! பொருத்தமான நூல்களில் இருந்து கட்டுரைகளுக்கு மேற்கோளோ, சான்றோ இணையுங்கள். ஒரு நூலில் உள்ள பத்திகளை அப்படியே இங்கே இட வேண்டாம். அது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். சில வரிகளை மட்டும் நூலில் இருந்து எடுத்து மேற்கோளாக காட்டுங்கள். நூல், இணையதளம் போன்றவற்றை சான்றாக குறிப்பிடலாம். ஒரு தகவல் முக்கியத்துவம் மிக்கதாகவோ, சர்ச்சைக்குரியதாகவோ இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களை இடுங்கள். உங்களுக்கு நினைவூட்டுகிறேன். :) உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:18, 10 ஆகத்து 2014 (UTC)Reply

தாங்கள் தரும் குறிப்புதவிகள் சில சமயங்களில் குழப்பமானவையாக அமைகின்றன. ஏதேனும் மொத்தமாகச் சுருக்கி எழுதும் போது சொந்தக் கருத்தைக் கூறாதிருக்குமாறு கூறி நீக்குகிறீர்கள். சொந்தக்கருத்தல்ல எனத் தெரியப்படுத்த மேற்கோள்கள் அதிகம் காட்டினால் அப்படியே கூறுவதாகச் சந்தேகப்படுகிறீர்கள். இதை எவ்வாறு புரிந்து கொள்வது? --Kuzhali.india (பேச்சு) 17:12, 10 ஆகத்து 2014 (UTC)Reply

//ஏதேனும் மொத்தமாகச் சுருக்கி எழுதும் போது சொந்தக் கருத்தைக் கூறாதிருக்குமாறு கூறி நீக்குகிறீர்கள். சொந்தக்கருத்தல்ல எனத் தெரியப்படுத்த மேற்கோள்கள் அதிகம் காட்டினால் அப்படியே கூறுவதாகச் சந்தேகப்படுகிறீர்கள்.// எங்கே இவ்வாறு இடம்பெற்றது என கூறினால் இலகுவாக விளக்கம் தரலாம்.... நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:11, 11 ஆகத்து 2014 (UTC)Reply

தற்போது குறிப்பிட்டுள்ளது உலகச் சமயங்களின் பாராளுமன்றம் தலைப்பிலான கட்டுரையின் மேற்கோள்களை என்று கருதுகிறேன். --Kuzhali.india (பேச்சு) 08:38, 11 ஆகத்து 2014 (UTC)Reply

பல பத்திகளாக தகவல்கள் இருப்பின் கட்டுரையில் சுருக்கித் தாருங்கள். ஆனால், சுருக்கமாகத் தருவதில் முக்கிய தகவல் அடங்கியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முன்பொரு முறை நீங்கள் சேர்த்த மூன்று வரிகளில் ஒன்றரை வரியில் தகவலே இல்லை. நீக்கியதற்கான காரணம் அதுவே! கட்டுரையின் தலைப்பிற்கு எது முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை விரிவாக எழுதுங்கள். ஏனையவற்றை சுருக்கிக் கூறுங்கள். ஒரு தலைப்பைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள்/தகவல்கள் இருக்கின்றன என்ற காரணத்திற்காக அவை அனைத்தையும் சேர்க்க வேண்டியதில்லை. மேலும், கிடைக்கும் அனைத்தையும் திரட்டுவது விக்கிப்பீடியாவின் நோக்கமும் அன்று. தேவையானவற்றை/தொடர்புடையவற்றை (relevant) மட்டும் சேர்த்தால் போதுமானது. அந்த தலைப்பை முன்னிலைப்படுத்தி, முழுமையாகக் கூறப்பட்ட நூல் ஏதேனும் இருந்தால், “மேலும் படிக்க” என்ற பகுதியில் நூலின் பெயரைக் குறிப்பிடலாம். பல நூல்கள் இருப்பின், அவற்றில் எவை தெளிவாகவும், சிறப்பாகவும் எழுதப்பட்டிருக்கின்றனவோ அவற்றைக் குறிப்பிடலாம். வரலாற்றுக் குறிப்புகளுக்கு வரலாற்றாய்வாளர்களின் நூலை சான்றாக காட்டுவது பொருத்தமானதாக இருக்கும். எழுத்தாளர்கள் தம் சொந்தக் கருத்தால் எழுதியிருப்பர். அத்தகைய நூல்களை சான்றாகத் தர வேண்டாம். இணையதளங்களை சான்றாக தர விரும்பினால் அரசு தளங்கள், பிரபலமான நாளேடு, பல்கலைக்கழக நூலகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கட்டுரைக்கு தொடர்புடைய அதிகாரப்பூர்வ அமைப்பு எதுவோ அதன் தளத்தில் இருந்து தகவல்களை எடுக்கலாம். வலைப்பூக்களை சான்றாகக் காட்ட வேண்டாம். சான்றுகளை/மேற்கோளை காட்டும்போது நடுநிலைமை மீறாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:08, 11 ஆகத்து 2014 (UTC)Reply

தற்போது தாங்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பாக எந்த கட்டுரையை குறித்து? உலகச் சமயங்களின் பாராளுமன்றம் தலைப்பிலான கட்டுரையின் தகவல் சேர்ப்பிற்காகவா?--Kuzhali.india (பேச்சு) 15:18, 11 ஆகத்து 2014 (UTC)Reply

பொதுவாக குறிப்பிட்டேன். அந்த கட்டுரையில் “சுவாமியின் உரையை அனைத்திலும் வெற்றிகரமானது என்று பத்திரிக்கைகள் எழுதின” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எந்தெந்த பத்திரிகைகள் குறிப்பிட்டன என்பது கண்டிப்பாக தெரிவிக்கப்பட வேண்டும். முடிந்தால் அந்த பத்திரிகைகளின் செய்தி இணைப்பை தரலாம். எவை பாராட்டினவோ, அவற்றின் இணைப்பே முதன்மையான ஆதாரமாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் தேடிப் பார்த்தால் அவற்றின் பழைய பதிப்புகள் கிடைக்கக் கூடும். தம்மைச் சார்ந்த ஒன்று சிறப்பானது எனக் கருதுவது மனித இயல்பு. இந்து சமயத்தை சார்ந்த ஒருவர் சிறப்பாக பேசினார் என இந்து சமயத்துடனோ, அவருடனோ தொடர்புடைய நூலை/இணையதளத்தை ஆதாரமாகக் காட்டுவது நடுநிலையாக இருக்காது. அதை கூடுதல் ஆதாரமாகக் கொள்ளலாமே ஒழிய, முதன்மை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அது இரண்டாம் நிலை/மூல ஆதாரமாகும். அவரது உரைகளையும், அவரைப் பாராட்டிய கூற்றுகளையும் நூலகங்களில் தேடிப் பாருங்கள். பேஸ்புக்கை பற்றிய கட்டுரையில், "அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில்" என்று எழுதியிருக்கிறீர்கள். ஆய்வு நடத்திய பல்கலைக்கழகத்தின் பெயரை குறிப்பிட்டிருந்தால் தகவலுக்கு வலு சேர்த்திருக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 11 ஆகத்து 2014 (UTC)Reply

சைவம் - திட்டம் தொகு

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Kuzhali.india!

 
தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 11 ஆகத்து 2014 (UTC)Reply

மத்யார்ஜுனேஸ்வரர் கோயில் அருகே புத்தர் தொகு

அன்புடையீர், வணக்கம். பேட்டவாய்த்தலையிலிருந்த புத்தர் 2002இல் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. தாங்கள் The Hindu இதழிலிருந்து சுட்டியுள்ள மேற்கோள் 2008இல் திருச்சியில் காஜாமலை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையாகும். பேட்டவாய்த்தலை புத்தருக்கும் காஜாமலை புத்தருக்கும் எவ்வித தொடர்புமில்லை. அன்புகூர்ந்து The Hindu இதழிலிருந்து சுட்டியுள்ள மேற்கோளை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:26, 25 ஆகத்து 2014 (UTC)Reply

அப்பத்திரிக்கையில், "He said the Buddha statues were also found at Aviraveli Ayilur, Keezhakurichi, Kuzhumani, Mangalam, Musiri, Pettavaithalai and Vellanur" என்ற வரிகளில் பேட்டைவாய்த்தலை பகுதியில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்படுவதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததால் குறிப்பிட நேர்ந்தது. தங்கள் விருப்பப்படி தற்போது நீக்கியுள்ளேன்.

நன்றி --Kuzhali.india (பேச்சு) 15:48, 25 ஆகத்து 2014 (UTC)Reply

செய்தியைப் படிக்கும்போது காஜாமலை புத்தரும் சிவன் கோயிலிலிருந்து வந்ததோ என வாசகர் நினைத்து குழம்ப வாய்ப்பு உள்ளது என்ற நிலையில் செய்தியின் தெளிவிற்காக நீக்கக் கோரியிருந்தேன். களப்பணியில் இரு சிலைகளையும் நான் நேரில் பார்த்துள்ளேன். நீக்கியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:05, 26 ஆகத்து 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

பேச்சு:திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் பார்க்க்கவும். சான்றுகளாகத் தரும் பக்கம்/வலைப்பக்கங்களில் உள்ள தகவற்களை விக்கிப்பீடியா கட்டுரைகளில் அப்படியே படியெடுத்து ஒட்டுவது பதிப்புரிமை மீறலாகும் என்பதால் அதனைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:04, 3 செப்டம்பர் 2014 (UTC)

வேண்டுகோள் தொகு

குடவாயில் பாலசுப்பிரமணியன் இக்கட்டுரையில் மேற்கோள்கள் இணைத்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:19, 5 செப்டம்பர் 2014 (UTC)

இணையத்தில் உள்ள மேற்கோள்கள் சேர்க்க முயற்சிக்கிறேன். தொல்லியலில் களத்தில், குடவாயில் பாலசுப்பிரமணியன் உடன் இணைந்து பணியாற்றியவராக டாக்டர் ஜம்புலிங்கம் தெரிவதால் அவரிடம் புத்தகங்கள் வடிவில் மேலதிக தகவல்கள், ஆதாரங்கள் இருக்க வாய்ப்பு அதிகம்.( Ref: http://musivagurunathan.blogspot.in/2012_07_01_archive.html) நன்றி.--Kuzhali.india (பேச்சு) 16:45, 5 செப்டம்பர் 2014 (UTC)

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Kuzhali.india!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 19:36, 6 செப்டம்பர் 2014 (UTC)

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:08, 8 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
குழலி, தமிழ் விக்கியில் உங்களின் தொடர் பங்களிப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை அகம் மகிழ்ந்து வழங்குகிறேன். இரா.பாலா (பேச்சு) 06:33, 9 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:40, 9 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:44, 9 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:54, 9 செப்டம்பர் 2014 (UTC)

சிதிலமடைந்த திருக்கோயில்கள் தொகு

வணக்கம். ’சிதிலமடைந்த திருக்கோயில்கள்’ என்ற புதிய பகுப்பினை உருவாக்கி அதில் கட்டுரைகளை இணைத்து வருகிறீர்கள். அது குறித்த எனது கருத்து:

அக் கோயில்கள் சிலவற்றில் புனரமைப்பு நடந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வேலை முடிவடையும் போது அவை சிதலமடைந்த கோயில்களாக இராது. மற்ற கோயில்களிலும் புதுப்பிக்கும் பணி நடைபெறலாம். (நடைபெறாமலும் போகலாம்) அச்சமயம், அவை இந்தப் பகுப்பின் கீழ் அமையாது. எனவே இற்றைப்படுத்தல் பணி அவசியமாகிவிடும். வருங்காலத்தில் விக்கிப் பயனர் (நம்மையும் சேர்த்து) அதனைக் கவனங்கொண்டு இற்றைப் படுத்துவோமா என்பது கேள்விக்குறியே. ’தமிழ்நாட்டிலுள்ள வைணவக் கோயில்கள்’ கட்டுரை இருந்தால் அவை இற்றைப் படுத்தப்படாவிட்டாலும் பொருத்தமில்லாத பகுப்பினுள் இருக்காது.

இந்தக் கோணத்தில் இவ்விஷயத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:08, 16 செப்டம்பர் 2014 (UTC)

தங்கள் கருத்து ஏற்புடையதே, கோயில் பெயர்களைத் தேடும் பொழுது சிறிது குழப்பம் உண்டாவதால் வேறு பகுப்புகள் உதவுமா என்ற வகையில் ஏற்படுத்த முயன்ற ஒன்று.. ஒரே பெயரில் பல ஊர்களில் திருக்கோயில்களும், ஒரே ஊர் பெயர் பல மாவட்டங்களிலும் வரும் பொழுது குழப்பம் உண்டாகிறது.

தற்போது பகுப்பு:108_திவ்ய_தேசங்கள் 88 தலைப்புகளைக் கொண்டுள்ளது. சில கோயில்கள் விடுபட்டுள்ளனவா அல்லது வேறு பெயரில் இந்த பகுப்பில் இல்லாமல் உள்ளனவா என உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

’புராதனக் கோயில்கள்’ என்பது போன்று வேறு பெயரில் இதை மாற்றினால் உதவியாக இருக்குமா? --Kuzhali.india (பேச்சு) 06:11, 16 செப்டம்பர் 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு தொகு

பேச்சு:பழங்கரை முன்தோன்றீசுவரர் கோயில் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 04:32, 16 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம் தொகு

  சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்
தாங்கள் சைவசமயக் கட்டுரைகளை தொகுப்பதிலும் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டுவதால், இப் பதக்கம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! -- mohamed ijazz(பேச்சு) 08:28, 20 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! --ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:46, 20 செப்டம்பர் 2014 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:54, 20 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம் வாழ்க வளமுடன்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:09, 20 செப்டம்பர் 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம் தொகு


எழுத்தாளர்க்ள் தொகு

எழுத்தாளர் தகவற்பெட்டியில் இருந்து தாக்கங்களையும், பின்பற்றுவோரையும் கட்டுரைக்குள் நகர்த்தும் போது இரு விசயங்கள் (என கருத்துகள் மட்டுமே. உங்களுக்கு உகந்ததாகப் பட்டால் செய்யுங்கள் :) )

1) ”தாக்கங்கள்” என்ற பத்தி தலைப்பு “வாழ்க்கைக் குறிப்பு” தலைப்புக்கு (அது கட்டுரையில் இருக்குமெனில்) அடுத்ததாக நகர்த்துங்கள் அல்லது தலைப்பாக இன்றி கட்டுரைக்குள் ஒரு வரியாக நகர்த்திவிடலாம். ஏனெனில் முதல் தலைப்பாக அமைவது கட்டுரையின் நடையொழுங்கை தடை செய்வது போல எனக்குப் படுகிறது.

2) இவ்விரண்டும் தகவற்பெட்டியிலும் இருந்து விட்டுப் போகட்டும். தகவற் பெட்டியிலும் இருந்தால் கூடுதல் நன்மை என்பது என் கருத்து. --சோடாபாட்டில்உரையாடுக 13:06, 19 அக்டோபர் 2014 (UTC)Reply

தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மீட்க முயல்கிறேன். கைப்பேசி அமைப்பில் தகவல்கள் காட்டப்படாததால் மாற்ற முயன்றேன். --Kuzhali.india (பேச்சு) 05:28, 4 நவம்பர் 2014 (UTC)Reply

காண்டேகர் என்னும் எழுத்தாளர் வங்காளத்தைச் சேர்ந்தவர் அல்லர்; அவர் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். --பயனர்:செம்மல்50

நன்றி. கலைமகள் (இதழ்) பக்கத்தில் பொதுவாக மாற்றி விட்டேன். -Kuzhali.india (பேச்சு) 11:06, 7 நவம்பர் 2014 (UTC)Reply

உதவி... தொகு

பிருகு - இக்கட்டுரையை கொஞ்சம் கவனியுங்கள், நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:51, 13 திசம்பர் 2014 (UTC)Reply

வேண்டுகோள்... தொகு

வணக்கம்! விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் தங்களின் ஆதங்கத்தைக் கண்டேன். என்னால் இயன்ற திருத்தத்தினை செய்துள்ளேன் - அதாவது, சர்ச்சைக்குரிய தகவல்களை உடனடியாக நீக்கிவிட்டேன். கதையின் உண்மையான சாராம்சம் என்ன என்பது தெரியாததால் இதைமட்டுமே என்னால் செய்ய இயன்றது.

  • முன்பு எவரோ சேர்த்த தவறான தகவல்களுக்காக, ஒரு சக பயனர் எனும் முறையில் நான் மனம் வருந்துகிறேன்; எனது கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
  • கண்காணிப்பினை வலுப்படுத்தி, தரத்தையும் நடுநிலைமையையும் காத்திட நாம் அனைவரும் முயற்சி செய்வோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:28, 14 திசம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம் --நந்தகுமார் (பேச்சு) 19:46, 14 திசம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 02:01, 15 திசம்பர் 2014 (UTC)Reply

நன்றி -Kuzhali.india (பேச்சு) 07:44, 15 திசம்பர் 2014 (UTC)Reply

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:32, 15 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் Kuzhali.india!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:14, 30 திசம்பர் 2014 (UTC)Reply

Translating the interface in your language, we need your help தொகு

Hello Kuzhali.india, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:17, 8 சூலை 2015 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kuzhali.india&oldid=3184395" இலிருந்து மீள்விக்கப்பட்டது