வாருங்கள், MakizNan!

வாருங்கள் MakizNan, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --செல்வா 03:10, 3 ஜூலை 2009 (UTC)

நன்றி தொகு

உங்களைப் பற்றி சுருக்கமான தகவல்கள் தந்தது கண்டு மகிழ்ச்சி, நன்றி. தொடர்ந்து பங்காற்றுங்கள். எதுவும் உதவிகள் வேண்டும் என்றால் தயங்காமல் கேளுங்கள். உங்கள் துறை எனக்கு மிகவும் பிடித்தா ஒரு துறை (நான் பணியாற்றும் துறை வேறாயினும்).--செல்வா 04:17, 4 ஜூலை 2009 (UTC)

வணக்கம் தொகு

வணக்கம் மகிழன் அவர்களே!, உங்களின் உயிர்தொழிட்நுட்பம் தொடர்பான கட்டுரைகள் தமிழ் விக்கிக்கு மிகவும் முக்கியமானவை, தொடர்ந்து பங்களியுங்கள். நான் சூழியலில் ஆராய்ச்சி செய்கிறேன், உயிர்தொழிட்நுட்பம் எனக்கு கொஞ்சம் தொடர்புடைய துறை. இத்துறையில் கட்டுரைகளை காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் குறு ஆர். என். எ, கட்டுரையில் சில திருத்தங்களை செய்துள்ளேன். பாருங்கள். கட்டுரை வடிவமைப்பு, கோப்புகள் பதிவேற்றம், அல்ல வேறு ஏதேனும் சந்தேகங்கள் /உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் மகிழன்.--கார்த்திக் 20:58, 5 ஜூலை 2009 (UTC)

நன்றி .... உறுதியாக நாம் இதை செய்ய வேண்டும் ... முடிவில் நம் தமிழ்தான் அழகுற போகிறது...

குறிப்பு தொகு

வணக்கம். உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் தமிழில் நுட்பக் கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்கிறேன். ஒரு சிறு வேண்டுகோள்: கட்டுரைகளைத் துவங்கும்போது தலைப்பில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தேவையில்லை. தமிழ்த் தலைப்பு மட்டுமே போதும்.நன்றி--ரவி 06:36, 6 ஜூலை 2009 (UTC)

Help needed தொகு

மகிழ்நன், நீங்கள் help needed என்ற பேச்சுப் பகுதியில் இட்டிருந்த கேள்வியை இங்கே கீழே பதிந்துள்ளேன். உங்கள் கேள்விகளை ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 21:19, 7 ஜூலை 2009 (UTC)

hi can you inform how you people are including picture in the article. −முன்நிற்கும் கருத்து MakizNan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மகிழ்நன், இடப்புறச் சட்டத்தில் உள்ள 'கோப்பைப் பதிவேற்று' என்ற இணைப்பைச் சொடுக்கவும்.--சிவக்குமார் \பேச்சு 19:38, 7 ஜூலை 2009 (UTC)
உங்கள் சொந்தப் படமாக இருந்தால், நீங்கள் விரும்பும் காப்புரிமத்துடன் சிவக்குமார் கூறியவாறு விக்கிப்பீடியா பக்கத்தின் இடப்புறம் உள்ள பட்டியலில் (தேடுக என்னும் பெட்டிக்குக் கீழே உள்ள பட்டியலில்) "கோப்பைப் பதிவேற்று" என்று ஒரு சுட்டி இருக்குமே அதனைச் சொடுக்குங்கள். பின்னர் அதன் வழி வரும் கேள்விகளுக்கு விடை தாருங்கள், செயலாற்றுங்கள், பதிவேற்றிவிடலாம். ஆனால் ஏற்கனவே விக்கி காமன்சு என்னும் இடத்தில் உள்ள படங்களை தமிழ் விக்கியில் தனியாக பதிவேற்ற வேண்டியதில்லை. (பிற மொழி விக்கிகளில் உள்ள பல படங்கள் இப்படி காமன்சு என்னும் பொதுக் கிடங்கில் உள்ளதாகும், அப்படத்தின் பெயரை அப்படியே தமிழ்விக்கியில் பயன்படுத்தினால் போதும், ஆனால் காமன்சில் இல்லாமல் பிற மொழி விக்கிகளில் உள்ள படங்களை, முதலில் உங்கள் கணினிக்கு இறக்கிக்கொண்டு பின்னர் தமிழ் விக்கியில் பதிவேற்றுங்கள்). --செல்வா 19:55, 7 ஜூலை 2009 (UTC)
மகிழ்நன், உங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் தமிழிலேயே கேட்கலாம். விக்கிப்பீடியா தளத்தின் இடப்புறம் "சமுதாய வலைவாசல்" என்று ஒரு சுட்டி உள்ளது அதனைச் சொடுக்கி உள்ளே சென்றால் "ஒத்தாசைப் பக்கம்" என்று ஒரு பக்கம் இருப்பதைப் பார்க்கலாம். அங்கு உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் என்னும் பக்கத்தைப் பார்க்கவும். --செல்வா 20:01, 7 ஜூலை 2009 (UTC)

வருக! வருக! தொகு

மகிழ்நன், மேலக்காலில் இருந்து ஒருவரைப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! நான் சோழவந்தானில் வளர்ந்தவன். :) -- சுந்தர் \பேச்சு 16:09, 8 ஜூலை 2009 (UTC)

நல்லது மகிழ்நன் (மகிழ்ணன்?). உங்கள் துறையில் பங்களிப்புகள் விக்கிப்பீடியாவுக்கு மிகவும் இன்றியமையாதவை. -- சுந்தர் \பேச்சு 05:42, 9 ஜூலை 2009 (UTC)

மரபியல் தலைப்புகள் பட்டியல் தொகு

மரபியல் தலைப்புகள் பட்டியல் உங்களுக்கு ஈடுபாட துறை என நினைக்கிறேன். இந்த பட்டியலை நீங்கள் ஏற்ற மாதிரி விரிவாக்கலாம். மாற்றி அமைக்கலாம். நன்றி. --Natkeeran 03:27, 10 ஜூலை 2009 (UTC)

மூன்று வகை இணைப்புகள் தொகு

விக்கிப்பீடியாவில் மூன்று வகை இணைப்புகள் உள்ளன. அவை:

  • உள் இணைப்புகள்: எ.கா தமிழர்
  • மற்ற விக்கிகள் இடை இணைப்புகள், குறியீடு: [[en:Tamil people]]
  • வெளி இணைப்புகள் Google
  • தமிழ் விக்சனரிக்கு: [[wikt:ta:அகல்|அகல்]] அகல்
  • ஆங்கில விக்கி கட்டுரைக்கு: en:Small interfering RNA

தமிழ் விக்கியில் கட்டுரைக்கு உள்ளே ஆங்கில தலைப்புகளுக்கு உள் இணைப்பு தருவதை தவிர்த்தல் நன்று. தேவை என்றால் மேலும் பாக்க என்ற பகுதியில் பொருத்தமான ஆங்கில கட்டுரைகளுக்கு இணைப்புத் தரலாம். அத்தோடு தமிழ் சொல்லுக்கு இணைப்புத் தரும் போது, அடைப்புக் குறிக்குள் வரும் ஆங்கிலச் சொல்லும் இணைப்புத் தருவதை தவிர்க்கவும். மிக்க நன்றி. --Natkeeran 00:19, 11 ஜூலை 2009 (UTC)


தடித்த எழுத்துக்கள் தொகு

கட்டுரையின் தலைப்பு முதல் பந்தியில் தடித்த எழுத்தில் அமையும். அதன் பின்பு தடிப்பு எழுத்துக்களை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. குறிப்புகா உள் இணைப்புகளை தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

--Natkeeran 00:26, 11 ஜூலை 2009 (UTC)

அடிப்படைக் குறிப்புகள் தொகு

  • பகுதியிடல்

== பெரும் பகுதி ==
=== பெரும் பகுதிக்குள் உட்பகுதி ===
==== அப்படியே மேலும் ====

  • இலக்கமிடல்
  • எ.கா 1
  • எ.கா 2
  1. எ.கா 1
  2. எ.கா 2
  3. எ.கா 3
  • பகுப்புக்குள் சேர்த்தல்

[[பகுப்பு:உயிரியல்]] --Natkeeran 00:26, 11 ஜூலை 2009 (UTC)

உங்கள் பங்களிப்புகள் தொகு

மகிழ்நன், மூலக்கூறு உயிரியலில் நீங்கள் அளிக்க இருக்கும் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை. உங்கள் அறிவியல், ஆய்வுத்துறை வளர்ச்சிக்கும், உங்கள் முன்னேற்றங்களுக்கும் எவ்விதத் தீங்கு நேராவண்ணம், நேரம் கிடைக்கும்பொழுது இயன்றவாறு இந்த முக்கியமான துறையில் பங்களித்து ஆக்கம் தாருங்கள். நீங்கள் எழுதவிருக்கும் பல கட்டுரைகள் தமிழ் எழுத்து வரலாற்றில் இத்துறையில் முதலாவதாக இருக்க வாய்ப்புகள் கூடுதலாக உள்ளது. தரமான, ஆழமான கட்டுரைகளைப் பொறுமையாக எழுதுங்கள். இங்கு பதிவாகும் கட்டுரைகள் எப்பொழுது யார் என்ன எழுதினார்கள் என்பது முன் எப்பொழுதும் இல்லாத் துல்லியத்துடன் பதிவாகும். யாரும் அழித்தாலும், ஒரு சொடுக்கில் மீட்டெடுத்துவிடலாம். உலகெங்கிலும் எந்நேரத்திலும் யாருக்கும் கிடைக்கும். அழகாக தக்க படங்களுடன், வேதியியல் குறியீடுகளுடன், தகவல் சட்டங்களுடன், தக்க சான்றுகளுடன், சீரான கட்டுரைத் தமிழ் நடையில் பலரும் படித்துப் பயன்படுமாறு வடிக்க வசதிகள் உண்டு. உங்களுக்கு வேண்டியவாறு இங்குள்ள பலரும் உதவுவர். --செல்வா 21:37, 11 ஜூலை 2009 (UTC)

மூலக்கூறு உயிரியல் தொகு

Molecular Biology - மூலக்கூற்று உயிரியல் என்றல்லவா இருக்க வேண்டும்?--Kanags \பேச்சு 23:51, 11 ஜூலை 2009 (UTC)
உங்கள் வினாவுக்கு நன்றி, மூலக்கூறு அல்லது மூலக்கூற்று என எனக்கு தெரியவில்லை.... molecule என்றால் மூலக்கூறு என்று தான் பொருள்.... அப்படிதான் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பார்த்ததை போல நினைவு... தவறகாக இருந்தால் பொருந்து கொள்ளவும்..
molecule என்பது மூலக்கூறு சரியே. ஆனால் molecular theory என்பது மூலக்கூற்றுக் கொள்கை என்று வரும். அதுபோல் molecular biology மூலக்கூற்று உயிரியல் என்று தானே வரும். செல்வா என்ன சொல்கிறீர்கள்?--Kanags \பேச்சு 03:30, 12 ஜூலை 2009 (UTC)
சிறீதரன் கனகு, நானும் மூலக்கூற்று உயிரியல் என்றுதானிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் தமிழ்நாட்டு அரசு = தமிழ்நாட்டரசு என்றில்லாமல் தமிழ்நாடு அரசு என்று ஒரு (தவறான) புது வழக்க்ம் தோன்றியுள்ளது. அதுபோல மூலக்கூறு உயிரியல் எனலாம் ஆனால் அது வழுவானது, மூலக்கூற்றுக் கொள்கை, மூலக்கூற்று உயிரியல் என்றே நாம் இங்கு வழங்குவது நல்லதெனப் படுகின்றது.--செல்வா 00:45, 13 ஜூலை 2009 (UTC)

உயிரணு தொகு

த.வி வில் நீண்ட உரையாடலின் பின்பு cell என்பதற்கு உயிரணு என்று பயன்படுத்துவதாக தீர்மானித்தோம். கலம் என்பது இலங்கை வழக்கு. செல்/உயிரணு என்பது தமிழக வழக்கு. அணு, மரபணு, உயிரணு போன்ற ஒரே அடிப்படைக் கருத்தை கூறுவரும் சொற்களைப் பயன்படுத்துவது நன்று. நீங்கள் எப்படியும் பயன்படுத்தலாம். இது தகவலுக்கே. --Natkeeran 04:45, 12 ஜூலை 2009 (UTC)


தங்களின் தகவலுக்கு நன்றி.

cell என்ற வார்த்தை தமிழ் சொல் என நினைத்தேன் (நினைக்கிறேன்). ஏனெனில் என் அம்மா இச்சொல்லை பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். உடம்பில் கண்ணுக்கு தெரியாமல் ஊர்ந்தால், என் அம்மாவிடம் வினவிய போது "செல்லூரும்" என் சொல்லுவார். மேலும் எதாவது (துணி அல்லது காகிதம்) அரிந்து போயிருந்தால் "செல்லரிந்து" விட்டது என எனது ஊரில் சொல்லுவதை கேட்டுள்ளேன். யாரும் படிக்காத ஊரில் இவ்வார்த்தை வந்தது எப்படி என எனக்கு தெரியவில்லை.

கலம் என்ற சொல்லை கலக்கொல்கை என்ற கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டதால், அச்சொல்லை பயன்படுத்தினேன் . நன்றி மகிழ்நன் --Munaivar. MakizNan 18:18, 12 ஜூலை 2009 (UTC)

மகிழ்நன், நானும் இதனை அறிவேன். செல் என்பது மிகச்சிறிதாக உள்ள ஒரு பூச்சி. அரிசி முதலியவற்றில் இது இருக்கும். பறக்காது (என நினைக்கிறேன்), அரிசி, பயிறு போன்றவற்றில் இது இருக்கும்.--சிவக்குமார் \பேச்சு 18:54, 12 ஜூலை 2009 (UTC)
ஆமாம், ஆனால் அது செள் என்னும் செள்ளுப்பூச்சி. இதனை செல் என்றும் பேச்சு வழக்கில் கூறக்கேட்டிருக்கின்றேன். cell என்பதைத் தமிழில் செல் என்றே கூறலாம் என்று முன்னர் வேறு ஒரு பொருளில் பரிந்துரைத்தேன். பேச்சு:உயிரணு என்னும் பக்கத்தைப் பார்க்கவும். தமிழில் cell நெடுநாட்களாக கண்ணறை என்ற சொல் செல் என்பதற்கு இணையாக பயன்பாட்டில் உள்ளது. கண்ணறை என்ற சொல் தமிழ் லெக்ஃசிக்கன், கழகத்தமிழ் அகராதி ஆகிய அகராதிகளிலும் இடம் பெற்றுள்ளது. அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக தமிழ் விக்கிப்பீடியாவில் உயிரணு என்னும் சொல்லை தேர்ந்தெடுத்தோம். செல், கண்ணறை, கலம் என்னும் எல்லாச் சொற்களுக்கும் மாற்றுவழிகள் உண்டு. உயிரணு, கலம், கண்ணறை, செல் ஆகிய நான்கு சொற்களும் நல்ல பொருத்தமான சொற்கள்தாம், ஆனால் ஏறாத்தாழ எல்லா இடங்களிலும் ஒரே சீராக உயிரணு என்னும் சொல்லைப் பயன்படுத்துவது நல்லது எனத் தோன்றுகின்றது. பேச்சு:உயிரணு என்னும் பக்கத்தில் பயனர்கள் பல கருத்துகளை முன் வைத்து உரையாடியதின் பதிவைப் பார்க்கலாம். --செல்வா 00:57, 13 ஜூலை 2009 (UTC)


நன்றி செல்வா அவர்களே,

என்னுடைய படிவாக்க கட்டுரையில் blunt and sticky end cloning என்ற நுட்பத்தை எழுதி உள்ளேன். முதலில் இச்சொற்களை தமிழ் படுத்திய போது சமம் மற்றும் சமமற்ற முனை படிவாக்கம் என எழுதினேன். பின் சமம் என்ற சொல் தமிழா என்றார் ஐயம் வந்ததால், அதை ஒற்று (ஒற்றுமை, ஒத்த முனை) என பொருளில் மாற்றி விட்டேன். தங்களின் கருத்து என்ன என அறிய ஆவல்.

மேலும் bacterial cloning கட்டுரையின் ஆங்கில இணைப்பு தவறானது. this is linking with Bacterial artificial chromosome. படிவாக்க கட்டுரை ஆங்கிலத்தில் இல்லையென்றால் இணைப்பு கொடுக்கமால் விட்டு விடவும்.


நன்றி மகிழ்நன்

உயிரியல் குழு: மகிழ்நன், கார்த்திக், கலை, ரவி தொகு

வணக்கம்....மகிழ்நன். நீங்கள் எழுதும் பல ஆழமான உயிரில் துறை தலைப்புக்களைப் பாக்கையில் மகிழ்ச்சி. கணிதம், கணினியியல், கட்டிடக்கலை, இயற்பியல், இலத்திரனியல் போன்ற துறைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றவை. உயிரியல் துறையில் தற்போது ஆழமான தலைப்புகளில் பங்களிக்கக்கூடிய குறைந்தது 4 பயனர்கள் உள்ளார்கள். நீங்கள், கார்த்திக், ரவி, கலை. முடிந்தால், நீங்கள் நால்வரும் கூட்டாக ஒரு விக்கித் திட்டம் உயிரியல் தொடங்கலாம். கணினியியலில் நல்ல தமிழில் கட்டுரைகள் எழுத அங்கு பரந்த பயன்பாட்டில் இருக்கும் (http://www.tcwords.com/) கலைச்சொற்கள் துணை புரிகின்றன. அது போல, பல அடிப்படைத் தலைப்புகள்/கலைச்சொற்கள் கொண்ட ஒரு விரிவான பட்டிய்லைத் தொடங்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பல பட்டியல்களின் கூட்டுகாக் கூட இது இருக்கலாம். தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் --Natkeeran 15:22, 19 ஜூலை 2009 (UTC)


அன்பின் நட்கீரன்,

உறுதியாக.. இதை என்னால் முடிந்த alavukku செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறேன் . மற்றவர்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.

நன்றி மகிழ்நன் --Munaivar. MakizNan 15:27, 19 ஜூலை 2009 (UTC)

நன்றி. கருத்தறிந்து செயற்படலாம். --நற்கீரன் 15:35, 19 ஜூலை 2009 (UTC)

ஆம், சென்ற ஆண்டு பேரா.வி.கேவின் அரும்பெரும் பணியால் கணிதக் கட்டுரைகள் பல எழுதப்பட்டன. மற்ற பயனர்களும் துணை நின்றோம். இப்போது வலுவான கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதால் உயிரியல் கட்டுரைகளை அருமையாக எழுத முடியும். -- சுந்தர் \பேச்சு 15:43, 19 ஜூலை 2009 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்‎ தொகு

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:04, 19 ஜூலை 2009 (UTC)

உங்களின் கட்டுரைகள் தொகு

மகிழன், உங்களின் கட்டுரைகள் மிகவும் இன்றியமையாதவை. இரண்டாம் ஆண்டு இளக்கலை (நுண்ணுயிரியல்) படித்துக்கொண்டு இருக்கும் போது பல மூலக்கூறு உயிரியல் தலைப்புகள் புரியவே புரியாது :(. அப்படியே எதையாவது படிச்சு எழுதி மதிப்பெண் வாங்கி தேர்வாயாச்சு. இதெல்லாம் தமிழ்ல இருந்த புரியவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை :). மூலக்கூறு உயிரியல் பத்தி விரிவாக எழுதிய முதல் தமிழர் என்ற பெருக்குரியவர் நீங்கள்....உங்கள் பங்களீப்பு மென்மேலும் தொடரட்டும். கட்டுரை வடிவமைப்பு, இணைப்பு கொடுத்தம், படங்கள் சேர்த்தல் தொடர்பா சந்தேகம், தமிழ் தட்டச்சு அல்லது உதவி வேணும்னா என்_பேச்சு பக்கத்தில் ஒரு செய்தி இடுங்கள். உதவுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரி diatomist at gmail.com --கார்த்திக் 20:41, 19 ஜூலை 2009 (UTC)

மகிழ்னன். உங்களை வரவேற்பதில் தவக்கம் காட்டியதற்காக மன்னிக்கவும். விக்கியில் கட்டுரைகள் எழுதுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கலந்துரையாடலும் செம்மை-செய்தலும் என்பதை இப்போது உணர்கிறேன். நீங்கள் ஆக்கும் பக்கங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. நிற்க.

முன்னொரு சமயம் டிசுகவரியில் பார்த்ததாக நினைவு. டெல்டா-32 என்றொரு மரபணு சிலவகை நோய்களிலிருந்து நம்மைக் காக்கின்றதாகக் காட்டப்பட்டது. டெல்டா-32 என்றால் என்ன? அதனைப்பற்றிய ஆய்வுகள் எந்த அளவில் உள்ளது? இவற்றையெல்லாம் உள்ளடக்கி ஒரு பக்கம் உருவாக்க இயலுமா? நன்றி -- பரிதிமதி 23:30, 3 ஆகஸ்ட் 2000 (IST)


நன்றி பரிதிமதி,

நீங்கள் சொன்னபின் தான் அவ் மரபணுவை அறிந்து கொண்டேன். உறுதியாக எழுதுவோம். அதை பற்றி படித்து விரிவாக செய்வோம்.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். -- மகிழ்நன் 18:12, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

மேற்கோள் சுட்டுவது எப்படி தொகு

ஒரு பந்தியில் இப்படி மேற்கோள் சுட்டலாம்:
<ref>எழுத்தாளர் பெயர். (2009). இது ஒரு எடுத்துக்காட்டு நூல். சென்னை: தமிழினி பதிப்பகம். </ref>.

அத்துடன் கட்டுரையின் அடியில் பகுப்புகளுக்கு சற்று மேல் பின்வருமாறு எழுதுங்கள்:
=== மேற்கோள்கள் ===
<references />
இது கட்டுரையில் பின்வருமாறு தெரியும்:

[1]

மேற்கோள்கள் தொகு

  1. எழுத்தாளர் பெயர். (2009). இது ஒரு எடுத்துக்காட்டு நூல். சென்னை: தமிழினி பதிப்பகம்.

கட்டுரைத் தலைப்பிடல் தொகு

மகிழ்நன், கட்டுரைத் தலைப்புகளின் முடிவில் ":" என்ற குறியீடு தேவையற்றது. செமினிவிரிடீ: என்று நீங்கள் இட்ட தலைப்பை செமினிவிரிடீ என மாற்றியுள்ளேன்.--Kanags \பேச்சு 05:48, 25 ஜூலை 2009 (UTC)

படங்கள் சேர்ப்பது எப்படி? தொகு

மகிழ்நன், நீங்கள் விக்கிப்பீடியா:உதவி என்னும் பக்கத்தைப் பார்த்தால் அதில் ஒவ்வொன்றையும் எப்படிச் செய்வது என்று காணலாம். படத்தைச் சேர்க்க மூன்று வழிகள் உள்ளன. (1) ஏற்கனவே காமன்சு (Wikipedia Commons) என்னும் பொதுக்கிடங்கில் இருக்கும் ஒரு படமாக இருப்பின், அப்படத்தின் பெயரை [[படிமம்:Figurename.jpg|thumb|right|படத்தைப் பற்றிய விளக்கம்]] என்று இட்டால் படம் பதிவாகும். (2) பிற விக்கிகளில் உள்ள படம் ஒன்று ஆனால் அது காமன்சு என்னும் பொதுவில் இல்லை என்றால்,, முதலில் உங்கள் கணினியில் அப்படத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். பிறகு தமிழ் விக்கியில் இடப்பட்டியில் உள்ள "கோப்பைப் பதிவேற்று" என்னும் சுட்டியைச் சொடுக்கிப் பதிவேற்றுங்கள். (3) உங்கள் சொந்தப்படமாக உங்கள் கணினியில் இருந்தால் (2) இல் கூறியவாறு பதிவேற்றுங்கள் ஆனால் தக்க உரிமத்துடன் பதிவேற்ற வேண்டும். மேலும் விளக்கம் வேண்டும் எனில் தயங்காது கேளுங்கள். --செல்வா 17:54, 25 ஜூலை 2009 (UTC)

இதையும் பாருங்கள் மகிழ்நன், விக்கிப்பீடியா:Picture_tutorial. இந்த இணைப்பு உங்களை படங்கள் சேர்பதற்கான உதவி பக்கத்திற்கு கூட்டிச்செல்லும். இந்தப் பக்கம் இன்னும் தமிழ் படுத்தப்படவில்லை:(. இந்த யூடுயுப் இணைப்பும் (http://www.youtube.com/watch?v=3XYWrvl3OSk) உங்களுக்கு உதவும். மகிழ்நன் உஙகளின் கட்டுரைகளில் மேற்கோள்கள் கீழே கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்க்கான இணைப்பு கட்டுரையில் கொடுக்கபடவில்லை. கட்டுரைகளில் எண்கள் மற்றும் ஒரு குறிப்பிடதக்க தரவுகளுக்கு சான்றுகள் கொடுப்பது நல்லது. அது கட்டுரையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இச்செயல் ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள் கொடுப்பது போன்றதாகும்.இதை கீழ்கண்டவாறு செய்யலாம். எடுத்துக்காட்டாக செமினிவிரிடீ (geminiviridae) என்பவைகள் பயிர்களை தாக்கும், ஓரிழை கொண்ட வட்ட வடிவிலான தீ நுண்மம்] ஆகும். இவைகள் தோரயமாக 2.6 kb- 2.8 kp வரை டி.என்.ஏ வரிசைகள் கொண்டவை என்ற வரிக்கு மேற்க்கோள் கொடுக்க விரும்பினால் அந்த வரி முடிந்தபின் "< ref >" (எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் எழுதவும்) என்று எழுதி பின் அந்த மேற்கோளை இங்கே ஒட்டவும், பிறகு மீண்டும் "< /ref >" (எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் எழுதவும்)என்று எழுதி முடிக்கவும். அனைத்து இடத்திலும் இதே போல் மேற்கோள் கொடுத்துவிட்டு இறுதியாக கட்டுரையின் முடிவில் மேற்கோள் என்று தலைப்பு கொடுத்துவிட்டு "< references/ >" (எழுத்துக்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் எழுதவும்) என்று இட்டால் அனைத்து மேற்கோள்களும் வரிசைப்படி அதுவாகவே வந்துவிடும். மேலும் விவரத்திற்கு ஒரு மேற்கோள்கள் சுட்டியுள்ள கட்டுரையை காண்க இந்திய_காண்டாமிருகம். மேலும் விவரங்கள் வேண்டுமெனில் என்னை ஸ்கையிலும் தொடர்பு கொள்ளலாம் (எனது ஸ்கைப்பு பயனர் பெயர் karthick.bala)--கார்த்திக் 20:29, 25 ஜூலை 2009 (UTC)

தக்காளிக்காய்ப் படம் தொகு

நீங்கள் தக்காளிக்காய்ப் படத்தை பதிவேற்றியதைப் பார்த்தேன். இனி நிறைய நல்ல படங்களைத் தக்க காப்புரிமத்துடன், தேவைப்படும்மொழுது இடுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. --செல்வா 21:19, 27 ஜூலை 2009 (UTC)


நன்றி செல்வா, மெதுவாக பலவற்றை அறிய முற்படுகிறேன். விரைவில் படங்களுடன் தரமான கட்டுரைகளை தர முயற்சிப்பேன்.

நன்றி --Munaivar. MakizNan 21:41, 27 ஜூலை 2009 (UTC)

கருத்து தொகு

உங்கள் கவிதையை/உரை வீச்சைப் படித்தேன். உங்கள் தமிழ் உணர்வு மெச்சத்தக்கது. தமிழர்களின் ஒற்றுமை இன்மைக்கும், உள் பகைக்கும் அதன் பக்க விளைவுகளுக்கும் ஈழப் போராட்டம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அண்மைய பச்சைத் துரோகங்கள் மட்டும் அல்ல. முந்திய சகோதர இயக்கப் படு கொலைகளும்தான். நாங்கள் எங்கு சென்றாலும் கட்டி வைத்திருக்கும் கோயில்கள் அளவுக்கு சனசமூக நிலையங்கள் எதையும் கட்டவில்லை. அதகும் யூதர்களிடம் படிக்க வேண்டும். சிங்கள அரசுகள் எம்மை நெடுங்காலமாக கொடுமை படுத்துகின்றன, அழித்தொழிக்கின்றன என்றாலும், மொத்த சிங்கள் இனத்தையும் சாடுவது சரியல்லை. சிலர் பல உதவிகளைச் செய்துள்ளார்கள். சிலர் முற்போக்குவாதிகள். --Natkeeran 22:13, 30 ஜூலை 2009 (UTC)

பெயரிடுதல் தொகு

தலைப்பை இடும் போது ஒரு பெயரைத் தரவும், முதன்மைப் படுத்தவும். இதர பெயர்கள் சரிபோல தோன்றினால், வழிமாற்றுத் தரலாம். உள் இணைப்புக் கொடும் போது இது இலக்குவாகிறது. குறிப்பாக அல்லது என்பதை தவிர்க்கலாம். நன்றி. --Natkeeran 19:28, 1 ஆகஸ்ட் 2009 (UTC)


தமிழில் கொடுப்பதா அல்லது ஆங்கில தலைப்பு தருவதா என ஒரு குழப்பம். தமிழ் தலைப்பு மற்ற payanarkalukku சரி எனப்பட்டால் அதனையே முதன்மைபடுத்தாலம்.

nanri --Munaivar. MakizNan 19:36, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

தலைப்பு கட்டாயம் தமிழ் எழுத்துகளில்தான் இருத்தல் வேண்டும். அவை ஆங்கிலச்சொல்லின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பாக இருக்கலாம். பென்சைல் அசிட்டேட் என்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கட்டுரையின் முதல் வரியில் இலத்தீன் எழுத்துகளிலும் குறிப்பிடலாம். ஆங்கில விக்கிக்கோ பிறமொழி விக்கிகளுக்கோ கட்டாயம் இணைப்புகள் இருக்கும் ஆதலால் (இப்பொழுது இல்லாவிட்டாலும் வருங்காலத்தில்), போதிய தொடர்புகள் இருக்கும். மில்லி மீட்டர், செண்ட்டி மீட்டர் என்று தனித்தனியாக கட்டுரை இருக்க வேண்டாம் என்று நாம் நினைத்தால், ஒரே கட்டுரைக்கு இச்சொற்களை வழி மாற்றாகத் தரலாம். அப்பொழுது இச்சொல்லில் எதனைக் கட்டுரையில் இட்டாலும் இவை பற்றி மொத்தமாக விரித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைக்கு இட்டுச்செல்லும், பொருளும் புரியும். தலைப்பில் கட்டாயம் அல்லது, என்னும், என்ற போன்ற சொற்கள் இருப்பது நல்லதல்ல. --செல்வா 19:45, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

விரைவாக எழுத தொகு

தமிழில் விரைவாக, விரல் சோர்வின்றி எழுத தமிழ்99 முறை தட்டச்சு உதவும். முயன்று பாருங்கள். விவரங்களுக்கு - http://tamil99.org --ரவி 05:00, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

புதிய திட்டம் தொகு

மகிழ். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

திருமண நல்வாழ்த்துகள் தொகு

அன்புள்ள மகிழ்நன்,
மிக மகிழ்ச்சியான செய்தி! இனிய திருமண நல்வாழ்த்துகள்!! எல்லா நலங்களும், வளங்களும் பெருமைகளும் பேறுகளும் பெற்று இனிதே இல்லறம் அமைய நல்வாழ்த்துகள். அன்புடன் --செல்வா 05:27, 4 அக்டோபர் 2009 (UTC)Reply

அன்பின் செல்வா

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. -- மகிழ்நன் 19:02, 4 அக்டோபர் 2009 (UTC)Reply

இனிய திருமண நல்வாழ்த்துகள் மகிழ்நன்!. பிரியா விடை கொடுக்கின்றோம் பிரம்மச்சாரிகள் சங்கத்தில் இருந்து :)--arafat 06:02, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

இனிய திருமண நல்வாழத்துகள் !!--மணியன் 06:19, 5 அக்டோபர் 2009 (UTC)Reply
அன்பின் மகிழ்நன், எனது இனிய திருமண வாழ்த்துகள்!.--Kanags \பேச்சு 08:16, 5 அக்டோபர் 2009 (UTC)Reply
அன்புள்ள மகிழ்நன், நீங்களும் உங்கள் துணைவியாரும் எல்லா வளங்களும் பெற்று இனிதே இல்லறம் அமையப் பெற வாழ்த்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:45, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

நன்றி, நன்றி..

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. என்னுடைய திருமணம் அடுத்த மாதம் நவம்பர் 15 ஆம் நாள் மதுரையில் நடைபெறும். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

அன்பின் இரவி விரைவில் புகைபடம் தருகிறேன்.

நன்றி -- மகிழ்நன் 15:48, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

மகிழ்நன்! இனிய திருமண நல்வாழ்த்துகள்! உங்கள் துணைவியுடன், அனைத்து வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்திட, நல்லதொரு குடும்பம் அமைத்திட என் வாழ்த்துகள்! காலம் தாழ்த்தி வாழ்த்து அனுப்பியதற்கு மன்னிக்கவும்.-- பரிதிமதி 07:00 21 நவம்பர் 2009 (இந்திய நேரம்)

பங்களிப்பாளர் அறிமுகம் தொகு

வணக்கம் மகிழ்நன். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:50, 5 அக்டோபர் 2009 (UTC)Reply

தமிழ்99 தொகு

வணக்கம் மகிழ்நன். தாங்கள் தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர் என்றால் தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய பரிந்துரைக்கிறேன். நீண்ட கட்டுரைகளைக் கைவலி இன்றி விரைவாக எழுதிட இந்த முறை உதவும். முயன்று பாருங்கள். உதவிக்கு: தமிழ்99. நன்றி--ரவி 12:09, 5 அக்டோபர் 2009 (UTC)Reply



Thanks for displaying my article in the front page. It is giving pleasure and impetus to contribute more. After wedding, I will be back to our wikipedia.


Thanks for your wishes for my wedding. My wedding will be held on Nov.19 in N.N.R Mahal, Virattipatthu, Madurai.


Thanks

-- மகிழ்நன் 14:57, 16 நவம்பர் 2009 (UTC)Reply

முனைவர் மகிழ்நன் அவர்களே, உங்களுக்கும் உங்களுக்கு மனைவியாக வரவிருக்கும் நல்லாளுக்கும் எங்கள் திருமண நல்வாழ்த்துகள்! எல்லாமும் பெற்று நல்லின்பமுடன் வாழ வாழ்த்துகிறோம்!--செல்வா 16:24, 16 நவம்பர் 2009 (UTC)Reply

இனிய திருமண வாழ்த்துகள் மகிழ்நன். --குறும்பன் 19:27, 16 நவம்பர் 2009 (UTC)Reply

கருத்துக்கள் வேண்டுதல் தொகு

வணக்கம் மகிழ்நன். உங்கள் மகிழ்ச்சியான நிகழ்வுகளை எம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உயிரியலில், குறிப்பாக மரபியலில் உங்களின் துறைசார் பங்களிப்புக்கள் கண்டு மகிழ்ச்சி. கணினி தொடர்பாக பலர் நல்ல தமிழில் எழுதுகிறார்கள். ஆனால் மற்ற துறைகள் அவ்வாறு இல்லையா என்று எண்ணுவதுண்டு. ஆனால் மற்ற துறைகளாலும் முடியும் என்று உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் காட்டுகின்றன.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 02:55, 18 டிசம்பர் 2009 (UTC)

குறிப்பாக நாம் என்ன செய்யலாம் என்று கூறினால் நன்றாக இருக்கும். எ.கா இந்த இந்த துறைகளில் கவனம் தரலாம். இந்த இந்த வழிகளில் த.வி மக்களுக்கு எடுத்துச் செல்லாம். இந்த விமர்சனங்களை இப்படிக் கையாளலாம். எந்தளவு கட்டுரைகளின் எண்ணிக்கையை இலக்காக் கொள்ளாம் என்பது பற்றி. நன்றி. --Natkeeran 02:18, 19 டிசம்பர் 2009 (UTC)

வாழ்த்துகள்! முதற்பக்கத்தில் பயனர் அறிமுகம் காட்சிப்படுத்தல் தொகு

மகிழ்நன், உங்கள் பயனர் குறிப்புகள் அறிமுகமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்ந்து மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள்!!--செல்வா 14:41, 8 பெப்ரவரி 2010 (UTC)


அன்பின் செல்வா,

வாழ்த்துகளுக்கு நன்றி . நான் தமிழுக்கு மிக மிக சிறு பங்களிப்பை தான் செய்துள்ளேன். நான் இன்னும் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தை, களிப்பை அளிகின்றது.

நன்றி

-- மகிழ்நன் 04:24, 9 பெப்ரவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல் தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:43, 18 பெப்ரவரி 2010 (UTC)

  • எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தங்களுக்கு என் இனிய நன்றிகள்... --Theni.M.Subramani 17:08, 23 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள் தொகு

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி தொகு

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)

இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.

மேலும் பேசுவோம்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி தர வேண்டும். நன்றி. பரிதிமதி

நன்றி (ம) விளக்கம் தொகு

மதிப்பிற்குரிய நண்பர் முனைவர்.திரு.மகிழ்நன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!

தங்கள் மடல் கண்டேன். மகிழ்ந்தேன்! தங்கள் வரவேற்பிற்கு நன்றி!!

ஆனால் சுஜாதா பற்றிய அந்தக் கட்டுரை நான் எழுதியது இல்லை. சுஜாதா என் உளம் கவர்ந்த எழுத்தாளர். ஆகவே அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துப் பார்த்தேன். படித்தபொழுது அக்கட்டுரையில் இருந்த சில சொற்பிழைகளைத் திருத்தினேன். அவ்வளவுதான்! மற்றபடி அந்தக் கட்டுரைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஒருவேளை நான் திருத்தம் மேற்கொண்டதால் அந்தக் கட்டுரை நான் எழுதியது போல் தோற்றமளிக்கிறதோ என்னவோ? அல்லது Beta வழியாகச் சென்று நான் அந்தக் கட்டுரையைத் திருத்தியதால் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒருவேளை நான்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன் என்பதுபோல் தோற்றமளிக்கக் கூடிய வகையில், அந்தக் கட்டுரையில் நான் ஏதாவது செய்திருந்தால் தெரியாமல் செய்த அக்குற்றத்தை அன்பு கூர்ந்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் பயனர் பக்கம் கண்டேன். அண்மையில்தான் தங்களுக்குத் திருமணம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!! தங்கள் பயனர் பக்கத்தை முழுவதும் படித்துப் பார்த்து விட்டு விரைவில் தொடர்பு கொள்கிறேன்!--இ.பு.ஞானப்பிரகாசன் 12:00, 29 மார்ச் 2010 (UTC)

வரைவு வாழ்த்துகள் தொகு

மகிழ்நன்! தங்களுக்கு வரைவு வாழ்த்துகள். -:) தாமதமாகக் கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். இப்போதுதான் உங்கள் பயனர் பக்கத்தைப் படித்தேன். இது வரை மண விழா, திருமண அழைப்பிதழ் என்றே பார்த்துப் பழகிய கண்களுக்கு வரைவு விழா என்ற பதம் வியப்பை ஏற்படுத்தியது. நல்ல தமிழ்ச் சொல். புதுமண இணையருக்கு மீண்டும் வரைவு வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்.--Ragunathan 22:51, 6 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை. தொகு

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)


மீண்டும் வருக! தொகு

மகிழ்நன். மீண்டும் மதுரைக்கு வந்தாயிற்றா? வருக வருக..!--அராபத்* عرفات 11:35, 17 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நீங்கள் தற்போது மதுரை காமராசர் பல்கலையில் இருக்கிறீர்களா? அடுத்த வாரம் அங்கே ஒரு மலையாள விக்கிப் பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது. அது தொடர்பாக உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது. ravidreams at gmail dot com அல்லது 99431 68304 தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். நன்றி --இரவி 14:51, 17 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மதுரையில் விக்கிப் பயிலரங்கு - உதவி தேவை தொகு

மகிழ்நன், வரும் செப்டம்பர் 21-ம் நாள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மலையாள விக்கிப்பயிலரங்கு ஒன்று நடைபெற உள்ளது. அவர்களோடு அணைந்து தமிழ் விக்கியைப் பற்றிய அறிமுகப் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்ய இயலுமா? இது தொடர்பில் உங்கள் கருத்தை ஆலமரத்தடி உரையாடலில் சேர்க்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:05, 19 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மீண்டும் வருக!! தொகு

மகிழ்நன், உங்களை மீண்டும் இங்கு விக்கியில் காண்பதில் பெரு மகிழ்ச்சி. பணியின் அழுத்தங்களை அறிவேன், ஆகவே, இயன்றபொழுது இயன்றவாறு அருள்கூர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் அரிய கட்டுரைகளைக் காண ஆவலுடன். --செல்வா 19:45, 20 செப்டெம்பர் 2010 (UTC)Reply

விக்கி மாரத்தான் தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:24, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள் தொகு

வணக்கம் மகிழ்நன். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:25, 2 மே 2011 (UTC)Reply


நன்றி . நன்றி .

என் பணி நிமித்தமாக என்னால் தற்பொழுது நம் விக்கிக்கு எழுதமுடியவில்லை. ஆறு மாதங்கள் அல்லது ஒரு ஆண்டிற்கு பிறகு, உறுதியாக என்னுடைய பங்களிப்பு மிகையாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி

-- மகிழ்நன் 05:23, 4 மே 2011 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:30, 21 சூலை 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு தொகு



தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:08, 24 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

Help needed in translating English images to Tamil தொகு

I am currently in process of translating almost all the English images in Tamil Wikipedia , into Tamil . In this process , I request your help for the translation part of the images which you have used in your உள்-பிணைவு படிவாக்கம் and other articles which you have created in Tamil . I am very poor in Tamil translation of scientific terms . Hope you could help me in this process . Excuse my English. My Tamil typing is not upto the mark and still in learning process .--Commons sibi (பேச்சு) 11:53, 21 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் 100 அழைப்பு தொகு

வணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி...--இரவி (பேச்சு) 15:24, 11 சனவரி 2015 (UTC)Reply


Dear Friends,

I am MakizNan who has written many Biology articles for tamil wiki. When I was in Madurai, I could not contribute anything for Tamil wiki for the past six years, currently I am in USA. I hope, I can contribute something for our tamil hereafter (at least for a year). Trusting, all my friends are active in wiki who has contributed immensely.Best MakizNan (Gopal .P).

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு தொகு

அன்புள்ள மகிழ்நன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 15:58, 24 மார்ச் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:MakizNan&oldid=2501812" இலிருந்து மீள்விக்கப்பட்டது