பயனர் பேச்சு:Parvathisri/தொகுப்பு 3

மணல்தொட்டி தொகு

காலை வணக்கம், விக்கிப்பீடியா:மணல்தொட்டி என்பது புதிய பயனர்கள் பயிற்சி பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பயனர் ஒருவர் அதில் எழுதிப் பழகுவதற்கு சிறிது காலம் அவகாசம் கொடுத்து அதனைத் துப்பரவாக்கலாம். துப்பரவாக்கும் போது ஆரம்பத்தில் உள்ள வார்ப்புருவை விட்டு வையுங்கள். அதனை நீக்க வேண்டாம். புதுப் பயனர்கள் சிலர் தெரியாமல் அதனையும் அழித்து விட்டுப் பயிற்சி எடுப்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களது தொகுப்பை அழிக்காமல் அந்த வார்ப்புருவை நாம் மீண்டும் சேர்த்து விடலாம்.--Kanags \உரையாடுக 22:25, 28 செப்டெம்பர் 2012 (UTC)Reply

விக்கிப்பீடியா அரங்கு தொகு

நீங்கள் அரங்கினுள் உள்வருகிறீர்கள்.ஆனால், தட்டச்சிட வில்லை. உள் நுழைந்தவுடன், *வெகு கீழே தட்டச்சிடும் பகுதி உள்ளது. சற்று கட்புலனாகும் வகையில், வெள்ளைநிறத்தில் இருக்கும். சற்று சொடுக்கிப் பார்க்கவும்.-- உழவன் +உரை.. 05:56, 30 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அதலை கட்டுரையில் உங்கள் கேள்வி தொகு

பேச்சு:அதலை#கேள்வி - அங்கே நீங்கள் எழுப்பியிருந்த கேள்வியை இப்போதுதான் பார்த்தேன், பார்வதி. மறுமொழியிட்டுள்ளேன், பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 08:51, 5 அக்டோபர் 2012 (UTC)Reply

கட்டுரை உருவாக்கத்திற்கு நன்றி தொகு

வணக்கம் பார்வதி, உங்களுக்கு என் நன்றிகள்

  1. கோரப்படும் கட்டுரைகளில் நான் கோரிய கட்டுரைகளை உருவாக்கியமைக்கு நன்றி! படித்துப் பயன்பெறுவேன். :)
  2. பழந்தமிழ் இசை, தமிழுக்கு மிகவும் முக்கியமான கட்டுரையாயிற்றே. அதை செவ்வனே உருவாக்கியமைக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  3. திடீரென்று தோன்றி கட்டுரையை உருவாக்கி, உடனே விரிவாக்கியதற்கும் வியந்து கூறும் நன்றி!

நான் அடிக்கடி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் இலக்கணத்தின் முக்கிய விதிகளை எனக்கு கூறுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:30, 5 அக்டோபர் 2012 (UTC)Reply

பழந்தமிழ் இசை கட்டுரையை மிகவும் விரிவுபடுத்திவிட்டீர்கள். இன்னும் இது போன்றே தொடர்புடைய ஒன்றிரண்டு கட்டுரைகளை உருவாக்கினால் ஒரு விக்கிநூலே எழுதிவிடலாம். அவ்வளவு தகவல்கள் உள்ளன!! நிலப் பண்களை மட்டுமே நான் அறிவேன். கருநாடக இசைக்கும் தமிழிசைக்கும் உள்ள தொடர்பு, இசைக் கருவிகளின் படிமக் கோப்புகள், விரிவான ஆதாரங்கள், பழந்தமிழ்ப் பாடல்கள் என அனைத்தையும் சேர்த்து அசத்திவிட்டீர்கள். நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:36, 11 அக்டோபர் 2012 (UTC)Reply

மிக்க நன்றி தமிழ்க்குரிசில். படங்களை இணைத்தவர் பயனர் சிவம் அவர்கள். பொருத்தமான படம். ஆனால் அவற்றின் பெயர்கள் இருப்பின் மிகப் பொருத்தமாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:14, 11 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம். பயனர் பார்வதி ஸ்ரீ மற்றும் தமிழ். கண்டிப்பாக இணைக்கின்றேன். எனக்கு நேரம் வரும் போது இணைகின்றேன். உண்மையில் மிக்க நன்றாக இருந்தது உங்கள் கட்டுரை அதனால்த்தான் படத்தை இணைக்க விரும்பினேன்,. நன்றி.--சிவம் 12:12, 13 அக்டோபர் 2012 (UTC)

நன்றி தொகு

வணக்கம் பார்வதிஸ்ரீ, என்னுடைய திட்டத்தை என்னுடைய ஆரம்பகால கட்டுரைகளில் ஆரம்பித்து வைத்தமைக்கு. என்னுடைய கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இதனை பயன்படுத்திக் கொண்டேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:10, 17 அக்டோபர் 2012 (UTC)Reply


  • ஆம் தினேஷ் எனக்கும் இத்திட்டம் என்னுடைய கட்டுரைகளில் தகுந்த சான்றுகளை இணைக்க உதவியாகவே இருந்தது. நானும் எனது தொடக்கக் காலக் கட்டுரைகளை இவ்வாறே மீளமைத்து வருகிறேன். நன்றி! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:07, 17 அக்டோபர் 2012 (UTC)  விருப்பம்Reply

சந்தேகம் தொகு

வணக்கம். காலத்தினால் ஒரு பெயர் மாறுதல் அடைவதைக் குறிக்கும் சொல்:

  • மருவி; மருவு பெயர்
  • மறுவி; மறுவு பெயர்

இரண்டில் எது சரியானது என்ற எனது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp (பேச்சு) 09:54, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம் பூ. மருவுதல் = மயங்கி வருதல். மரூஉமொழி = மருவி வழங்கும் மொழி. எனவே மரூஉ என்பதே சரி (இங்கு உகரம் அளபெடுத்து வரும்)−முன்நிற்கும் கருத்து Parvathisri (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விளக்கியமைக்கு மிகவும் நன்றி.--Booradleyp (பேச்சு) 10:26, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

சிறு குறிப்பு தொகு

"சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர்(ஆடல் மகளிர்) போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர்." என்னும் வசனத்தில் பாணர், பாடியினர்களும், பிறரும் ஆண்கள், பெண்கள் என்ற வகைக்கும் வருவார்கள் அல்லவா. சற்றுக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 18:38, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

உதவி தொகு

வணக்கம், பார்வதி. தினமணியின் வெள்ளிமணி ஆதாரத்துடன் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர் என்ற கட்டுரை உருவாக்க்கினேன். அதில் மங்களாசாசனம் பகுதியில்தான் எனக்குச் சந்தேகம். தினமணிக் கட்டுரை திருமங்கையாழ்வார் ஒரு வரியில் இத்தலத்தைக் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுகிறது. ஆனால் வெளி இணைப்பிலுள்ள தினமலர் கட்டுரை திருமங்கையாழ்வாரின் கூற்றாக வேறொரு பாசுரம் த்ருகிறது. கூகுள் தேடலில் ஒரு இணைய முகவரி கூறும் செய்தி தினமணியுடன் ஒத்துப் போகிறது. எனக்கோ திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் பற்றி எதுவும் தெரியாது. உங்களால் இது குறித்து எனக்கு உதவ முடியுமா?--Booradleyp (பேச்சு) 08:45, 26 அக்டோபர் 2012 (UTC)Reply

  • வணக்கம் பூ. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலில் (பாடல் வரிகள் 125-130 -ல்) "கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் " எனத் தொடங்கும் பாசுரத்தில் இறுதியில்

 "முன்னவனை - மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை "

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

தாங்கள் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளது திருமங்கையாழ்வாரைக் குறித்த தனியன்கள் அல்லது வேறொரு பாசுரம் என நினைக்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:20, 26 அக்டோபர் 2012 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி பார்வதி. கட்டுரையில் மாற்றிவிடுகிறேன்.--Booradleyp (பேச்சு) 17:43, 26 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம். "கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்

நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்

கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே.'

-திருமந்திரம் பாடல் எண்: 569.

விரல் (கணிதம்) கட்டுரையில் இதை இணைக்கலாம் என நினக்கிறேன். இது கூகுல் தேடல் மூலம் முகநூலில் இருந்து கிடைத்தது. இப்பாடல் உண்மையிலேயே திருமந்திரம் பாடலா என எனக்கு உறுதி செய்யமுடியுமா? --Booradleyp (பேச்சு) 05:31, 6 நவம்பர் 2012 (UTC)Reply


ஆம். பூ இது திருமந்திரப் பாடல்தான். ஆனால் 557 ஆம் பாடல். பத்தாம் திருமுறையில் ( மூன்றாம் தந்திரம் அட்டாங்க யோகம் பற்றிக் குறிப்பிடுகையில் பிராணாயாமம் பற்றிய பாடல் எண்:13)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:43, 6 நவம்பர் 2012 (UTC)Reply

எனது சந்தேகங்களைப் பொறுமையுடனும் உடனுக்குடனும் தீர்க்கும் உங்களது உதவிக்கு எனது பாராட்டும் நன்றியும் பார்வதி.--Booradleyp (பேச்சு) 04:00, 7 நவம்பர் 2012 (UTC)  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:29, 8 நவம்பர் 2012 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா தொகு

வணக்கம் சஞ்சீவி. இவ்வாரம் இடம்பெற்ற உங்களுக்குத் தெரியுமா பகுதியில் நின்றொளிர் காளான் பற்றிய செய்தி ஏற்கனவே இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. காண்க பேச்சு:நின்றொளிர் காளான் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:15, 7 நவம்பர் 2012 (UTC)Reply
வணக்கம் பார்வதிஸ்ரீ. 2011 சூன் இடம்பெற்ற அச்செய்தி நின்றொளிர் காளான் கட்டுரையில் இடம் பெற்ற மற்றொரு செய்தி. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:54, 8 நவம்பர் 2012 (UTC)Reply
நன்றி சஞ்சீவி. அவ்வாறு இடம்பெறலாமா எனச் சிறிது ஐயம் இருந்தது. வார்ப்புரு இடுவதற்காகவே கேட்டேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:28, 8 நவம்பர் 2012 (UTC)Reply

ஒரே கட்டுரையில் 2 தகவல்கள் இடம்பெறக்கூடாது என்பது தான் விதி. நமக்கிருக்கும் ஆள் பலத்தில் பல கவணக்குறைவுகள் நடைபெற்று விடுகிறது, அது எப்படி என்றால் பார்வதி அவர்கள் முதற்பக்க வார்ப்புருவில் உங்களுக்கு தெரியுமா நவம்பர் 7 என்ற இணைப்பை 11 என்று மாற்றிவிட்டு அது முதற்பக்கத்தில் சிவப்பிணைப்பாக விட்டுவிடுவது போல். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 11 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி தொகு

வணக்கம். பஞ்சபூதத் தலங்கள் கட்டுரையில் நிலத்துக்குரியதாக காஞ்சிபுரம், திருவாரூர் இரண்டும் தரப்பட்டுள்ளன. அதனால் தான் எனக்குச் சந்தேகம் வந்தது. அக்கட்டுரையிலிருந்து திருவாரூரை நீக்கி விடட்டுமா? --Booradleyp (பேச்சு) 15:39, 20 நவம்பர் 2012 (UTC)Reply

அத்தகவலை கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டேன் :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:53, 20 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி.--Booradleyp (பேச்சு) 16:15, 20 நவம்பர் 2012 (UTC)Reply

நெல்லையப்பர் கோவில் தொகு

வணக்கம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கட்டுரையில், சிறப்புக்கள் என்ற தலைப்பில் அருசணலக் கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப் பெற்றுள்ளது என்ற குறிப்பு உள்ளது. ஆனால் அருணாசலக் கவிராயர் கட்டுரை தரும் கவிராயருக்கும் நெல்லையப்பர் கட்டுரை சொல்லும் கவிராயருக்கும் சம்பந்தம் இல்லாதது போல உள்ளது. இருவரும் ஒருவரா அல்லது வெவ்வேறா? உங்கள் உதவி தேவை.--Booradleyp (பேச்சு) 14:58, 24 நவம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் பூ. வேணுவன புராணம் அருணாசலக் கவிராயர் பாடியது என நெல்லையப்பர் கோவில் தல புராணங்களில் குறிப்பிட்டுள்ளதே தவிர அருணாசலக் கவிராயர் எழுதிய நூல்களில் வேணுவன புராணம் இடம்பெறவில்லை. என்னிடம் இராம நாடகக் கீர்த்தனைகள் உள்ளது. தேடிப்பார்த்துச் சொல்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:41, 25 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி. சரியான விவரம் தெரிந்தபின் மாற்றிக் கொள்ளலாம்.--Booradleyp (பேச்சு) 04:02, 26 நவம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை திட்டம் அறிவிப்பு தொகு

தொழிற்புரட்சி கட்டுரைக்கான முதற்பக்கக் கட்டுரை திட்டம் அறிவிப்பினை எனது பேச்சுப் பக்கத்திலும் இட்டுள்ளீர்கள். ஆனால்,அக்கட்டுரையில் பெரியளவில் நான் பங்களிப்பினை வழங்கவில்லை. நீங்கள் உட்பட ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் முதற் பக்க கட்டுரையின் முக்கிய பங்களிப்பாளர்கள் இல்லையெனக் கருதுகின்றேன். :) --Anton (பேச்சு) 00:36, 26 நவம்பர் 2012 (UTC)Reply

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு தொகு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:49, 26 நவம்பர் 2012 (UTC)Reply

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:37, 26 திசம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் நற்கீரன்.. முப்பருவ முறை பயிற்றுவிப்பு தொடங்கியதிலிருந்து சற்றே வேலை அதிகமாக உள்ளது.. விக்கி பங்களிப்பும் சற்று குறைந்தே உள்ளது. என்னால் பள்ளி வேலைகளுக்கிடையே ஆய்வுக்கட்டுரைகள் எழுத இயலுமா தெரியவில்லை... குறுகிய காலமே உள்ளது..... எது போன்ற தலைப்புகளில் என்பதும் குழப்பமாகவே உள்ளது. இயன்றவரை முயல்கிறேன்...... நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:33, 27 திசம்பர் 2012 (UTC)Reply

ஆவண மாநாடு தொகு

வணக்கம். நற்கீரன்..... தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைக்கு பழந்தமிழரும் விழாக்களும் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை அணுப்பலாம் என உள்ளேன்... சமய விழா, குடும்ப விழா, அரச விழா , சமுதாய விழா,,, என்ற நோக்கில் எழுதலாம் என உள்ளேன். கருத்து கூறவும்.... மேலும் இத்தலைப்புகளின் உசாத்துணைகள் இருப்பின் உதவவும்... அல்லது வேறேதேனும் தலைப்புகள் இருப்பின் தரவும்... முயல்கிறேன்.. நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:34, 27 திசம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் பார்வதிஸ்ரீ. உங்கள் ஆர்வத்திற்கும் பங்களிப்புக்கு நன்றி. நிச்சியமாக எழுதலாம். ஆவணவியல் பார்வையுடன் எழுதினால் சிறப்பு. என்னிடம் வாழ்வியற் களஞ்சியம் உள்ளது. அதில் மேற்கோள்கள் இருப்பின் பகிர்கிறே. செங்கைப் பதுவன் ஐயாவிடம் கூடுதல் தகவல்கள் இருக்கும்.

கோரப்படும் தலைப்புகள் பட்டியலை விரைவில் விக்கியில் இணைக்கிறேன். எனது தனிப்பட்ட ஒரு கருத்துர்ப்புக் கீழே. சிலம்பம் பற்றிய உங்கள் கட்டுரையைக் கண்டு வியந்தேன். சிலம்பம், குத்துவரிசை, வர்மக்கலை பற்றிய ஏடுகள் தமிழிலேயே இருப்பதாக அறியமுடிகிறது. இந்த ஆங்கில ஆவணப்படுத்தில் கூட அவ்வாறு கூறுகிறார்கள். எ.கா அகத்தியர் பூரண காவியம் !. இவை பற்றி ஒரு கட்டுரை தர முடிந்தால் சிறப்பு. பொழிவு மட்டுமே சனவரி 15 தரப்பட வேண்டும், கட்டுரை பின்பே, எனினும் நேரம் நெருக்கடியாக அமையலாம்.

தமிழில் திறந்த தரவுகள் (Open Data in Tamil)
தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்: தொழில்நுட்ப வாய்ப்புக்களும் சவால்களும் (Multimedia documentation in Tamil:  Opportunities and challenges)
தமிழ்ச் சூழலில் வழங்கும் சிறிய மொழிகளை ஆவணப்படுத்தலும் புத்துயிர்ப்பூட்டலும் (Documentation and revitalization of small languages in the Tamil context)
தமிழ்ச் சூழலில் நூலகவியல், ஆவணகவியல் பயிற்சியும் கல்வியும் (Archival and library science education in the Tamil context)
தமிழ்ப் படைப்புகள் மீதரவுகளுக்கான சீர்தரங்கள் (Standardized metadata for Tamil works)
சுதேசிய அறிவு முறைமைகள் (Indigenous knowledge systems)
ஆவணப்படுத்தலில் தொழில்நுட்பப் பயன்பாடு (Use of technology in documentation)
தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலில் பரவுபடுத்தப்பட்ட கூட்டாக்க முயற்சிகள் (Collaborative documentation efforts in the Tamil context)
தமிழ்ச் சூழலின் தற்போதைய ஆவணப்படுத்தல், மீட்டிருவாக்க வியூகங்களை மதிப்பீடுசெய்தல் (Evaluating documentation and revitalization efforts by the Tamil society) 
தமிழ் இணைய உள்ளடக்கங்களை ஆவணப்படுத்தல் (Archiving of Tamil Internet content)
தமிழில் தகவல் காட்சிப்படுத்தல் (information visualization) எடுத்துக்காட்டுக்கள்
தமிழர் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல் வியூகங்கள் (Strategies in documenting Tamil technical crafts and trades)
தமிழர் தொழிற்கலைகள் ஆவணப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் (Challenges in documenting Tamil technical crafts and trades)
{{தொழிற்கலை}} ஆவணப்படுத்தல் (Documentation of Tamil {{craft/trade}})
தொழிற்கலைகள் மீட்டெடுப்பும் பொருளாதார வாய்புக்களும் (Economical opportunities in reviving traditional crafts and trades)
தமிழர் அறிவுத்தளங்களை ஆவணப்படுத்தல் வியூகங்கள்
அறிவியல் தமிழ் வரலாறு (History of Scientific Tamil)
அறிவியல் தமிழுக்கு ஈழத்தமிழர் பங்களிப்பு (Contribution of Sri Lankan Tamils to Scientific Tamil)
தமிழ்க் கலைச்சொல்லாக்க வரலாறு (History of Tamil technical terminology development)
தமிழ்க் கலைச்சொல் வளர்ச்சியில் ஈழம், தமிழக வேறுபாடுகள்
19 ஆம் நூற்றாண்டுத் ஈழத்துத் தமிழ் அகராதிகள்
ஈழத்து அச்சுக்கலை வரலாறு
தமிழ்க் கணிமையின் முன்மாதிரியை பிற அறிவியல் துறைகள் எவ்வாறு பின்பற்றலாம்

--Natkeeran (பேச்சு) 02:37, 28 திசம்பர் 2012 (UTC)Reply


ஓர் ஐயம் ஆவணப்படுத்துதல் பார்வை என்பது என்ன விளங்கவில்லை.... தமிழிசை, சிலம்பம் களரிப்பயிற்று, வர்மக்கலை குறித்த தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறேன். தமிழர்கள் விளையாட்டு, கலைகள், தொழில்நுட்பங்கள் குறித்தும் தரவுகள் உள்ளன. எனக்கு மாதிரிக்கு ஓர் முன்பொழிவினை அனுப்பித்தந்தால் உதவியாக இருக்கும். ஆவணப்படுத்துதல் பார்வையில் கட்டுரைகள் என்பது புரியவில்லை.. சோடாபாட்டிலிடமும் உதவி கேட்டுள்ளேன்.. ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு முன் பொழிவு மாதிரியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் உதவியாக இருக்கும்....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:23, 30 திசம்பர் 2012 (UTC)Reply


நல்ல கேள்வி. விரைவில் அனுப்ப முயற்சி செய்கிறேன். ஆவணப்படுத்தல் நோக்கு என்னும் போது தகவலை மட்டும் கருப்பொருள் ஆக்காமல், தகவல் மூலங்களையும், அவற்றின் தன்மை, அவை பேணப்பட்ட/பேணப்பாடாத நிலை, ஆய்வுகள், ஆய்வு வரலாறு, முக்கிய ஆய்வாளர்கள், வகைப்படுத்தல், துறைப் பின்புலம் போன்ற செய்திகளையும் குறிப்பிடுகிறேன். எ.கா தமிழர் தற்காப்புக்கலைப் பற்றிய செய்திகளைப் பகிரும் முக்கியமான ஏடுகளை/நூல்களைப் பற்றிய கட்டுரை; நூல்கள்/ஏடுகள் இல்லாவிடின் அவை பற்றிய தகவல்கள் எவ்வாறு தலைமுறை தலைமுறையாக பகிரப்பட்டன என்பது பற்றிய செய்திகள். இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள், முக்கிய ஆய்வாளர்கள், ஆய்வு/பொது நூல்கள். போதிய விளக்கம் தந்தேனோ தெரியவில்லை. இது மாதிரி ஒரு கட்டுரையை புதிய ஒரு துறையை எடுத்துச் செய்வது கடினம், பரிச்சியமான துறை என்றால் இலகு. --Natkeeran (பேச்சு) 01:33, 2 சனவரி 2013 (UTC)Reply

ஒரு தகவல்... தொகு

வணக்கம்!
'பழந்தமிழ் இசை' எனும் கட்டுரையை நீங்கள் உருவாக்கி, சிறந்த முறையில் ஒரு மிக நல்ல கட்டுரையாக விரிவு செய்தீர்கள் - அதற்கு நன்றி!

ஒரு தகவல்: 'தினமணி', ஒவ்வொரு டிசம்பரிலும் 'இசைவிழா மலர்' எனும் சிறப்பு இதழை வெளியிடுகிறது. இந்த ஆண்டு, 'தமிழிசை சிறப்பு மலராக' அந்த இதழ் வெளியிடப்படும் என்று விளம்பரம் வெளியாகி உள்ளது; வெளியிடப்படும் நாள் குறித்து இதுகாறும் தகவல் இல்லை; விலை: ரூ. 50. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமாயின், இந்த மலரினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழிசை குறித்த புதிய கட்டுரைகளை படைக்கவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கம் செய்யவும் இந்த மலர் கண்டிப்பாக உதவிசெய்யும் - 'தினமணி' என்றால் நல்ல பல தகவல்களுக்கு உத்திரவாதம் உண்டு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:11, 28 திசம்பர் 2012 (UTC)Reply

தங்கள் பாராட்டுதலுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி சிவகுரு... இசைவிழா மலரை வாங்கிவிட்டேன். இன்னும் படித்து முடிக்கவில்லை..... நிச்சயம் உதவியாக இருக்கும்....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:35, 8 சனவரி 2013 (UTC)Reply

எடுத்துக்காட்டுக்கள் தொகு

இந்த மாநாட்டுக்கு என எடுத்துக்காட்டு உடனடியாகத் தர முடியுமோ தெரியவில்லை. ஆனால் பின்வரும் எடுத்துக்காட்டுக்கள் (ஆங்கிலத்தில் :( ) நெருங்கி வருகின்றன. இந்த எடுத்துக்காட்டுக்கள் தமிழிலியல் மாநாட்டுக்கு ஆனவை, ஆகவே சிறிது நோக்கம் வேறுபடுகிறது. ஆனால் மிக நெருங்கி வருகின்றன.

http://www.tamilstudiesconference.ca/tsc2012/program.php#T1 Diversity or Division?: The Tamil Language Collections in American Libraries This paper analyzes the different collections of Tamil materials held in American libraries in order to determine their representativeness of Tamil culture and history. Disparities in the strengths of the different collections are discussed as well as the resulting skewing of perspectives. Because libraries/archives can be overly selective in accumulating materials, there can be a real constriction of the information scholars can use in examining the past. This paper includes an examination of those materials that are currently under-collected by libraries. These under represented areas and subjects will create difficulties ("holes") for scholars needing to find alternative evidence and perspectives. This situation has already almost led to an informational hegemony. Lastly, there are recommendations made concerning new collecting areas (e.g. "grey literature") that libraries can utilize to expand resources in the area of Tamil studies.

http://www.tamilstudiesconference.ca/tsc2012/program.php#T1 The Past as known from Tamil Inscriptions: Village Community and Challenge to the Caste System

Inscriptions on stones or copper-plates, which occur in substantial numbers, are the basic source-material for the ancient and medieval history of India, as much of India lacks history books compiled in these periods. It is particularly so in the case of Tamil Nadu, as there remain in Tamil Nadu the largest number of inscriptions from the past. First I will explain this situation by showing the language-wise and chronological distributions of inscriptions. What sort of information can we obtain from those inscriptions and how can it be obtained? In order to elucidate these points, I will take up, as examples, my study of the two issues, namely, (1) the notion of the village community and (2) the challenge to the caste system in the past, made through the examination of Tamil inscriptions of the Chola period (10th to 13th centuries). First, the view expressed by Metcalfe, The Indian Village Communities are little Republics, having nearly everything that they want within themselves, produced later the theory of the Stagnant Orient or Oriental Despotism. There is a volume of inscriptional data on the nature of villages in the Chola period to question this understanding. Second, many people believe that the caste system has been well maintained in South India without much challenge since it was introduced from the North during the Pallava period until the beginning of the last century. An analysis of the imprecations in Chola and Pandyan inscriptions throws anew light on this issue. For such studies, the importance of statistical analysis of inscriptional data, the method of which I introduced into this field of study, need to be emphasized.

--Natkeeran (பேச்சு) 02:40, 4 சனவரி 2013 (UTC)Reply

அறிக்கை தொகு

வணக்கம், இங்கு ஆண்டு அறிக்கைக்கான தரவுகளை சேர்த்து வருகிறேன். நீங்களும் சேர்க்க விரும்பும் தகவல்களை சேருங்கள், பிறகு கட்டுரை வடிவில் மாற்றிவிடலாம், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 13:44, 8 சனவரி 2013 (UTC)Reply

நன்றி தொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:10, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:26, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 15 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைகள் தொடர்பாக தொகு

அம்மையாரே நீங்கள் முதற்பக்கக் கட்டுரைக்கான வார்ப்புருவை வடிவமைக்கும் போது கட்டுரையின் அறிமுகப்பாகத்தின் இறுதியில் ஒரு செக் வையுங்கள். உதாரணம் ஒரு மனிதர் பற்றிய கட்டுரை எனில் அவர் வாழ்க்கையில் ஏதாவது திருப்புமுனை சம்பவம் நடந்திருக்கும். அவர் யாரையாவது சந்தித்திருக்கிறார் என வைத்துக் கொண்டால் கட்டுரையின் முடிவை பின் வருவது போன்று முடியுங்கள். "xxxx ஒருவர் மூலம் மாற்றப்பாட்டார். அவர் யாரெனில்..." இதைப்போன்று முடிக்கலாம். இப்போது முதற்பக்கத்திலுள்ள கட்டுரை வடிவத்தின் இறுதி வார்த்தைகளையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். (தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போது என இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை. அதன் காரணம்... ) இதைப்போல் படிப்பவர்களுக்கு கட்டுரையின் மிக முக்கியமான செய்தியை அரைகுறையாக விட்டால் மேலும் இணைப்பை சொடுக்கி கட்டுரைக்கு வருவார்கள் என்பது என் எண்ணம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:03, 27 சனவரி 2013 (UTC) நன்றி தென்காசி.......அவ்வாறே செய்யலாம்....முதற்பக்கக் கட்டுரைகளை இற்றைப்படுத்தியமைக்கும் நன்றிகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:07, 27 சனவரி 2013 (UTC)Reply


Re: பார்லே ஜி தொகு

Hello Parvathi ma'am,

I used Google Transliteration for typing, and I had my dad besides me who helped me in framing sentences and checking if the Tamizh spelling is right. I saw that you have corrected some mistakes and thanks for the same, and not sure how I forgot to add the reference. I'm still bad in Tamizh, but will continue to take help from my dad, to create new and worthy articles. -- ♪கார்த்திக்♫ ♪பேச்சு♫ 19:15, 13 பெப்ரவரி 2013 (UTC)

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை தொகு

வணக்கம். ஒரு அரசு அலுவலர், ஆசிரியர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்பதை அறிந்திருப்பீர்கள். இது குறித்த உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:13, 25 பெப்ரவரி 2013 (UTC)

வேண்டுகோள் தொகு

வணக்கம் பார்வதி, நீங்கள் தொடங்கியுள்ள வேதாந்த சுவாமி பிரபுபாதா, பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா இரண்டையும் இணைத்துவிடுங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 04:55, 27 பெப்ரவரி 2013 (UTC)

இணைத்தமைக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 14:49, 27 பெப்ரவரி 2013 (UTC)

நன்றிகள் தொகு

உங்களுக்குத் தெரியுமா? பயனர் அறிவிப்பு மற்றும் கட்டுரையின் பேச்சுப்பக்க அறிவிப்பை தொடர்வதில் மகிழ்ச்சியும் நன்றியும். எனது வேலைப்பளு காரணமாக சில தாமதங்கள் நேர்ந்தது. நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:02, 10 மார்ச் 2013 (UTC)

  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:04, 10 மார்ச் 2013 (UTC)

WikiWomen Video தொகு

Namaste Parvathisri, I'm Omshivaprakash and I mostly edit on Kannada wikipedia , Commons, Meta etc. I read about your achievements in mailing lists and I'm touched. Here I'm asking a favor to encourage more women around India to start editing Wikipedia.

As a part of International Womens day celebrations across India, we were working on an event in Bangalore and we had an idea that would help us with this mission.

We are eager to make a video with bites from various Indian Women contributors. It would be great if you can record a short video(about 2mins) speaking about -Who you are? -What you do? -How you got into Wikimedia/Wikipedia? -Your area of contribution -A message to all Women folks out there!

You can shoot the video yourself and upload it to commons and update us or please feel free to write to me at omshivaprakash at gmail.com for any further help.

Let me know how you like the idea and look forward to your video :) Omshivaprakash (பேச்சு) 18:19, 10 மார்ச் 2013 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாக வருபவர்கள் எழுதக்கூடியவை என்ற நோக்கில், இலகுவான ஆனால் முக்கியமான கட்டுரைகள் என்று சிலவற்றை இங்கு பரிந்துரைக்க முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 15:34, 29 மார்ச் 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Parvathisri/தொகுப்பு 3!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:16, 2 பெப்ரவரி 2013 (UTC)நன்றி இரவி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:45, 3 பெப்ரவரி 2013 (UTC)

அட்டவணை தொகு

மாத்தூர் தொட்டிப் பாலம் கட்டுரையில் உள்ள அட்டவணையைச் சரி செய்துள்ளேன். பார்க்கவும். --- மயூரநாதன் (பேச்சு) 19:52, 8 ஏப்ரல் 2013 (UTC)

பட்டியல் தர வேண்டுகோள் தொகு

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் இக்கட்டுரை கண்டேன். இதில் சேர்க்க வேண்டியவை எல்லாம் தொல்லியல் சார்ந்த படங்கள் என்பதால் இவற்றை வரலாற்று சிறப்புமிக்க படங்கள் பட்டியலில் தரவேற்றலாம் என நினைக்கிறேன். மேலும் இதைப்போல் நீங்கள் கி.பி. 600 க்கு முற்பட்ட தமிழக வரலாற்றை பற்றி ஏதும் கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அந்த இணைப்புகளை தரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:06, 11 ஏப்ரல் 2013 (UTC)

டால்மன் என்றால் கல்திட்டையே. இவை மல்லச்சந்திரம் கற்திட்டைகள் போன்றவற்றிலும் காணப்படுகின்றன. இதையும் பட்டியலில் இணைத்துள்ளீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். டால்மனை நானே கல்திட்டை என மாற்றலாம் என்றாலும் இப்போது எனக்கு அதிகம் தூக்கம் வருவதால் இதைப்பார்த்ததும் நீங்களே மாற்றவும். இனி விக்கிக்கு வர சில நாட்கள் ஆகலாம்.

ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:42, 11 ஏப்ரல் 2013 (UTC)

பேரப் பிள்ளைகள் தொகு

அன்புத் தங்கை பார்வதிக்கு, http://ta.wikipedia.org/s/2qjr எனும் இணைய முகவரியில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். நம்முடைய கனகு மாற்றம் செய்யுங்கள் என்று சொல்கிறார். அவர் பேச்சைக் கேட்போம். அதை எனக்கு மாற்றிக் கொடுக்க உதவி செய்யுங்கள்.

இன்னும் இரண்டு நாட்களுக்கு என் பேரப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கட்டம். பார்த்து உதவி செய்யுங்கள். இல்லை என்றால் ஆளை விடுங்கள் சாமி என்று பேரப் பிள்ளைகளுடன் இருந்துவிடுகிறேன். அப்புறம் என்னைத் தேடிப் பிடிப்பது ரொம்ப சிரமம்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 09:36, 12 ஏப்ரல் 2013 (UTC)

Return to the user page of "Parvathisri/தொகுப்பு 3".