பாலோ

குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்

பாலோ (மலாய்: Paloh; ஆங்கிலம்: Paloh; சீனம்:巴罗); என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். குளுவாங் நகரில் இருந்து 35 கி.மீ.; யோங் பெங் (Yong Peng) நகரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

பாலோ
Paloh
 ஜொகூர்
Map
பாலோ is located in மலேசியா
பாலோ
பாலோ
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°12′7″N 103°11′33″E / 2.20194°N 103.19250°E / 2.20194; 103.19250
நாடு Malaysia
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் குளுவாங்
அரசு
 • வகைமலேசிய உள்ளாட்சி மன்றங்கள்
 • நிர்வாகம்குளுவாங் நகராட்சி மன்றம்
(Kluang Municipal Council)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்14,320
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசிய அஞ்சல் குறியீடு86000
மலேசியத் தொலைபேசி எண்+6-07
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்J
இணையதளம்www.mpkluang.gov.my

பாலோ ஒரு முக்கிம் பகுதியாகும். அந்த வகையில் 429 கி.மீ km2 பரப்பளவைக் கொண்டுள்ளது. பாலோ நகரத்தில் சீனர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள்; மூவினத்தவரும் ஒரு சீரான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.

2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 16,420. ஆண்கள்: 9083; பெண்கள்: 7337.[2]

பொது தொகு

மலாயா அவசரகாலகாலத்தில், இந்த நகரம், மலாயா தேசிய விடுதலை படையினருக்கு (Malayan National Liberation Army (MNLA) அனுதாபிகளைக் கொண்ட ஒரு "கருப்புப் பகுதி" என அறியப்படுகிறது.[3][4]

குளுவாங் நகராட்சி மன்றம் தொகு

குளுவாங் நகராட்சி மன்றத்தில் உள்ள இடங்கள்:

வீட்டுமனை குடியிருப்பு பகுதிகள் தொகு

 
குளுவாங் மாவட்டத்தில் பாலோ
  1. தாமான் ஸ்ரீ கோத்தா பாலோ - (Taman Sri Kota Paloh)
  2. தாமான் விஜயா - (Taman Wijaya)
  3. தாமான் பாலோ - (Taman Paloh)
  4. தாமான் மெலாத்தி - (Taman Melati)
  5. தாமான் முர்னி - (Taman Murni)
  6. கம்போங் முகிபா - (Kampung Muhibbah)
  7. கம்போங் இந்தியா - (Kampung India)
  8. தாமான் கியாரா - (Taman Kiara)
  9. தாமான் ஸ்ரீ பால்மா - (Taman Seri Palma)
  10. கம்போங் மெர்டேகா - (Kampung Merdeka)
  11. தாமான் இண்டா - (Taman Indah)

போக்குவரத்து தொகு

இந்த நகரத்தில் கே.டி.எம். (KTM) மலாயா தொடருந்து நிறுவனத்தின் நகரிடை இயங்கும் ஊர்தி நிலையம் (KTM Intercity) உள்ளது. இந்த நிலையம் கோலாலம்பூர்; ஜொகூர் பாரு நகரங்களின் தொடருந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

பாலோ தமிழ்ப்பள்ளி தொகு

ஜொகூர், குளுவாங் மாவட்டம், பாலோ நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 145 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD2053 பாலோ SJK(T) Jalan Setesyen Paloh[6] ஜாலான் ஸ்டேசன் பாலோ தமிழ்ப்பள்ளி குளுவாங் 145 14

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Located 35 kilometers away from Kluang and about 32 kilometers from Yong Peng. Paloh town is a balanced population of Chinese, Malays and Indians". JOHOR NOW. 27 October 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
  2. "Paloh, Johor - Population - CityFacts". Archived from the original on 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
  3. Deery, Phillip. "Malaya, 1948: Britain's Asian Cold War?" Journal of Cold War Studies 9, no. 1 (2007): 29–54.
  4. Siver, Christi L. "The other forgotten war: understanding atrocities during the Malayan Emergency." In APSA 2009 Toronto Meeting Paper. 2009., p.36
  5. "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in ஆங்கிலம்). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  6. "SJK(T) JALAN STESEN PALOH, KLUANG, JOHOR". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோ&oldid=3924281" இலிருந்து மீள்விக்கப்பட்டது