புரோப்பைல் புரோபனோயேட்டு

(புரோபைல் புரோபனோயேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புரோபைல் புரோபனோயேட்டு (Propyl propanoate) என்பது C6H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இச்சேர்மம் புரோபைல் புரோப்பியோனேட்டு (propyl propionate) என்றும் அழைக்கப்படுகிறது. புரோபனால் மற்றும் புரோபனாயிக் அமிலம் ஆகியவை எசுத்தராக்கல் வினை மூலம் புரோபைல் புரோபனோயேட்டை உருவாக்குகின்றன. பல எசுத்தர்களைப் போல புரோபைல் புரோபனோயேட்டும் பழத்தின் நறுமணம் கொண்டதாக இருக்கிறது. அன்னாசிப்பழத்தின் வாசனை கொண்ட வேதிப்பொருள் எனவும் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. நறுமணமூட்டியாகவும் ஒரு கரைப்பானாகவும் இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[2]. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதனுடைய ஒளிவிலகல் எண் 1.393 ஆகும்.

புரோப்பைல் புரோபனோயேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோபைல் புரோபனோயேட்டு
வேறு பெயர்கள்
புரோபைல் புரோபியோனேட்டு
இனங்காட்டிகள்
106-36-5 Y
ChemSpider 7515 N
EC number 203-389-7
InChI
  • InChI=1S/C6H12O2/c1-3-5-8-6(7)4-2/h3-5H2,1-2H3 N
    Key: MCSINKKTEDDPNK-UHFFFAOYSA-N N
  • InChI=1/C6H12O2/c1-3-5-8-6(7)4-2/h3-5H2,1-2H3
    Key: MCSINKKTEDDPNK-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7803
  • CCCOC(=O)CC
பண்புகள்
C6H12O2
வாய்ப்பாட்டு எடை 116.16 g·mol−1
அடர்த்தி 0.833 கி/செ.மீ3 at 20 °C
உருகுநிலை −76 °C (−105 °F; 197 K)
கொதிநிலை 122 முதல் 124 °C (252 முதல் 255 °F; 395 முதல் 397 K)
200 க்கு 1 பகுதி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Eastman MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள் தொகு

  1. Merck Index, 11th Edition, 7880
  2. "Eastman MSDS". Archived from the original on 2020-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-05-06.