மேற்கத்திய கருந்நிலைக் கதிர்க்குருவி

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Curruca|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மேற்கத்திய கருந்நிலைக் கதிர்க்குருவி ( Western Orphean warbler ) என்பது குர்ருகா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கதிர்க்குருவி ஆகும். இந்த இனம் கோடையில் மத்தியதரைக் கடலைச் சுற்றி, மேற்கு ஐரோப்பா வழியாக, வடமேற்கு ஆப்பிரிக்கா வரை பரவுகிறது. இது குளிர்காலத்தில் சகாரா கீழமை ஆபிரிக்காவுக்கு வலசை போகிறது. இது வடக்கு மற்றும் வடமேற்கு ஐரோப்பாவிற்கு ஒரு அரிதாக திசைமாறி அலையும்.

மேற்கத்திய கருந்நிலைக் கதிர்க்குருவி
மொராக்கோவில்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Curruca
இனம்:
இருசொற் பெயரீடு
Curruca hortensis
(Gmelin, 1789)
வேறு பெயர்கள்
  • Motacilla hortensis
  • Sylvia hortensis

வகைபிரித்தலுலம், சொற்பிறப்பியலும் தொகு

இப்பறவையின் ஆங்கிலப் பெயர் கிரேக்கத் தொன்ம இசைக்கலைஞரும் பாடகருமான ஆர்ஃபியசைக் குறிக்கிறது. சிற்றினப் பெயரான ஹார்டென்சிஸ் என்பது இலத்தீன் மொழியில் "தோட்டம்" என்பதைக் குறிக்குப் பெயரிலிருந்து வந்தது. [2]

இதில் இரண்டு துணையினங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, [3] ஆனால் அவை தற்போது தனி இனங்களாகக் கருதப்படுகின்றன. [4] [5]

விளக்கம் தொகு

 
முட்டைகள்

இப்பறவை சிட்டுக்குருவியை விடப் பெரியதாக 15–16 சென்டிமீட்டர்கள் (6–6+14 அங்) நீளம் வரை இருக்கும். முதிர்ந்த ஆண் பறவைகளுக்கு கருஞ்சாம்பல் நிற முதுகும், வெண்மையான அடிப்பகுதியும் இருக்கும். அலகு நீளமாகவும், கூரானதாகவும், கால்கள் கருப்பாகவும் இருக்கும். ஆண் பறவைக்கு அடர் சாம்பல் நிறத் தலையும், கருப்பு கண் பட்டையும், வெள்ளை தொண்டையும் இருக்கும். விழிப்படலம் வெண்மையாக இருக்கும். பெண்பறவைகளும் முதிர்ச்சியடையாத பறவைகளும் வெளிர் தலையும், வெளிர் மஞ்சள் நிற அடிப்பகுதியைக் கொண்டுள்ளன. அவற்றின் சாம்பல் முதுகில் பழுப்பு நிற சாயம் உள்ளது. இளம் பறவைகளில் விழிப்படலம் கருமையாக இருக்கும்.

நடத்தையும் சூழலியலும் தொகு

குருவி வரிசையைச் சேர்ந்த இந்தச் சிறிய பறவை அடர்த்தி குறைந்த இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றது. புதர் அல்லது மரத்தில் கூடுகட்டி அதில் 4-6 முட்டைகள் இடுகின்றன. இது ஒரு பூச்சி உண்ணி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Curruca hortensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/species/22735012/155626439. பார்த்த நாள்: 20 October 2022. 
  2. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 195, 376. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  3. Snow, David W.; Perrins, Christopher M.; Doherty, Paul & Cramp, Stanley (1998).
  4. Helbig, A. J. (2001).
  5. Jønsson, Knud A. & Fjeldså, Jon (2006).

வெளி இணைப்புகள் தொகு