லாங்வர்தி பேராசிரியர்

லாங்வர்தி பேராசிரியர் (Langworthy Professor) என்பது இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் பள்ளியில் உள்ள உயர்ந்த இருக்கை ஆகும்.

1874 ஆம் ஆண்டில் எட்வர்டு ரைலி லாங்வர்தி செய்முறை இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்ததன் மூலம் கிடைத்த £ 10,000 சொத்தின் மூலம் இந்த இருக்கை நிறுவப்பட்டது.[1] இது முதலில் ஓவென்ஸ் கல்லூரியில் துவங்கப்பட்டு, 1903/04 முதல் 2004 வரை மான்செஸ்டர் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இருந்து, தற்போது மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயங்கிவருகிறது.

இந்த இருக்கையை வைத்திருந்தவர்களில் நோபல் பரிசு பெற்றவர்களான, எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (1907-19), வில்லியம் லாரன்ஸ் பிராக் (1919-37), பேட்ரிக் பிளாக்கெட் (1937-1953), ஆந்தரே கெய்ம் (2007-2013), கான்ஸ்டன்டின் நொவசியேலொவ் (2013-) ஆகியோரும் அடங்குவர். ஏனையோர் ஆண்ட்ரூ லைன் (? -2007), பிரையன் ப்ளவர்ஸ், ஆர்தர் சூஸ்டர் (1888-1907), சாமுவேல் டெவன்சு. தற்போது வைத்திருப்பவர் கான்ஸ்டன்டின் நொவசியேலொவ் (2013-) ஆவார்.

மேற்கோள்கள் தொகு

  1. Charlton, H. B. (1951) Portrait of a University, 1851–1951. Manchester: Manchester University Press; p. 143, 176
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்வர்தி_பேராசிரியர்&oldid=2468702" இலிருந்து மீள்விக்கப்பட்டது