வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/8

மங்கையர்க்கரசியார் என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவராவர். சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். திருஞான சம்மந்தரை திருமறைக்காட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வரவைத்தார். அந்நேரத்தில் பாண்டிய மன்னனை வெப்புநோய் தாக்க, கூன்பாண்டியனானர். அந்நோயை சமணர்களால் குணப்படுத்த இயலாமல் போக, சம்மந்தரிடம் தன் கணவரை பற்றியிருந்த வெப்புநோயை குணமாக்க வேண்டினார் மங்கையர்கரசியார்.. ஞானசம்மந்தர் திருநீர் அளித்து அந்நோயிலிருந்து பாண்டியனை விடுவித்தார். அதனால் பாண்டிய நாட்டில் சமணம் மறைந்து சைவம் தளைத்தது. இதனால் சம்மந்தர் மானி என்ற இயற்பெயர் கொண்டவரை மங்கையற்கரசியார் என்று அழைக்க அப்பெயரே நிலைத்தது.