வலைவாசல் பேச்சு:அறிவியல்

அறிவியல் வலைவாயில் இயற்கை அறிவியலை மட்டும் தந்து சமூக அறிவியலுக்கும், தொழிநுட்பத்துக்கும் வேறு வலைவாயில்கள் அமைப்பது நன்று. --Natkeeran 22:20, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

தற்பொழுது ஆங்கில விக்கியில் உள்ளதை ஒட்டி (ஆனால் ஜெர்மன் விக்கியில் கணிதத்தைச் சேர்த்தியது போல தமிழிலும் அறிவியல் வாயிலில் சேர்த்துள்ளேன்). கருத்து என்னவென்றால், முதற்பக்கத்தில் காட்டும் பொழுது 6-7 பெரும் தலைப்பிரிவுகளுக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாயில்கள் முதற்பக்கத்தில் இணைப்புடன் இருக்கும். ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் முதலான மொழி விக்கிகளின் முதல் பக்கத்தைப் பாருங்கள். நாம் நம் முதற்பக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும். விக்கிப்பீடியாவுக்கு வருக என்று கொட்டையாக எழுதவேண்டும். கீழ்க்காணும் பெட்டியை மாற்றி எழுதவேண்டும் என்பது என் கருத்து. முகப்புப் பக்கத்தை இன்னும் அழகாக அமைக்க வேண்டும் என்பது என் அவா.

விக்கிப்பீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாக கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை திருத்தி எழுதலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும்.

--செல்வா 22:44, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

செல்வா, மாற்றியுள்ளேன் தயவுசெய்து மீண்டும் முதற்பக்கத்தைப் பார்க்கவும்

விக்கிப்பீடியாவிற்கு வருக. இது உங்களைப் போன்ற ஆர்வமுடையவர்களால் தொகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிது புதிதாகக் கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை மேலும் விரிவாக்கலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும்.

தேவையென்றால் மேலும் மாற்றலாம். எவ்வாறு மாற்றவேண்டும் என்றால் அவ்வாறே மாற்றி எழுதலாம். --Umapathy (உமாபதி) 23:11, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

செல்வா, தற்போதைய தாய்ப்பகுப்புகள் சற்று அலசிய பின்னரே தெரியப்பட்டவை. கணிதத்தின் முக்கியத்துவத்தை பற்றி உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. தாய்ப்பகுப்புகள் சமயம், கலைகள் போன்றவையும் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இது எமது உலகப் பார்வையுடன் தொடர்புடையது. பார்க்க Wikipedia:வகைபடுத்துதல். வடிவமைப்பை மாற்றியமைப்பதைப் பற்றி மேலும் பரிசோதிக்கலாம். ஒரு மாதிரிப் பக்கத்தை இதற்கு பயன்படுத்தலாம். சில வித்தியாசமான முதற்பக்க மாதிரிகளை கீழே தொகுக்கலாம். நன்றி.
--Natkeeran 23:00, 6 அக்டோபர் 2007 (UTC)Reply
உமாபதி, மாற்றி ஒரு இணக்கம் கண்டு பின்னர் முதற்பக்கத்தில் மாற்றுவது நன்று. அடிக்கடி மாற்றுவது அவ்வளவு நல்ல முன்மாதிரி அல்ல. --Natkeeran 23:13, 6 அக்டோபர் 2007 (UTC)Reply
நற்கீரன், ஆம் அப்படியே செய்வோம். புதியது நன்றாக இல்லாவிட்டால் தயவுசெய்து மீள்வித்து விடுங்கள். --Umapathy (உமாபதி) 23:30, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

"கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி" அப்பிடிச் சொல்ல இயலாது. http://www.gnu.org/copyleft/fdl.html சில எல்லைகள் உண்டு. அதாவது ஒருவர் இங்கே இருக்கும் ஆக்கங்களை பயன்படுத்தி பின்னர் ஆக்கும் ஆக்களையும் அதே உரிமையுடன் தரவேண்டும் போன்ற சில எல்லைகள்... அவை திட்ட நோக்கில் முக்கியம். எனினும் உடனே மாத்தாதீர்கள், பிற பயனர்களின் கருத்துக்களையும் அறியலாம். --Natkeeran 23:18, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

அறிவியல் வாயில்கள் பிற விக்கிகளில் எப்படி உள்ளன என்பதற்கு சில பொறுக்குகள் கீழே பார்க்கலாம்:

--செல்வா 23:21, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

சில கருத்துக்கள்

தொகு

கணிதம் தனித்துவமான ஒரு உலகப் பார்வையை தருகின்றது. அது முற்றிலும் scientific method பின்பற்றி ஆயப்படும் ஒரு இயல் இல்லை. எண்ணையும் எழுத்தையும் தமிழர்களும் முக்கியப்படுத்தி பகுத்து பார்த்துள்ளார்கள். கணிதம் அறிவியலுக்கு முக்கியம், ஆனால் கணிதத்தை அறிவியலுக்குள் வகுப்பது அவ்வளவு பொருத்தமல்ல. ஆங்கில விக்கியிலும் அப்படி செய்யப்படவில்லை. அறிவியலுக்குள் இயற்கை அறிவியல் துறைகளைத் தருவதே பொருத்தம் என்று படுகின்றது. --Natkeeran 23:32, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

Return to "அறிவியல்" page.