விசு

இந்திய எழுத்தாளர்

விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

விசு
பிறப்புமீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன்[1]
(1945-07-01)1 சூலை 1945 [2]
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு22 மார்ச்சு 2020(2020-03-22) (அகவை 74)
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981-2016
வாழ்க்கைத்
துணை
சுந்தரி
(திருமணம்.1975-2020)
பிள்ளைகள்லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3][4]

திரை வாழ்க்கை தொகு

இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

திரைத்துறையில் தொகு

ஆண்டு திரைப்படம் திரைத்துறை கதாப்பாத்திரம் குறிப்புகள்
இயக்குனர் எழுத்தாளர் நடிகர்
1977 பட்டினப்பிரவேசம்  N  Y  N
1978 சதுரங்கம்  N  Y  N
1980 அவன் அவள் அது  N  Y  N
1980 மழலைப் பட்டாளம்  N  Y  N
1981 தில்லு முல்லு  N  Y  Y
1981 நெற்றிக்கண்  N  Y  N
1981 கீழ்வானம் சிவக்கும்  N  Y  N
1981 குடும்பம் ஒரு கதம்பம்  N  Y  Y சிறீனிவாச ராகவன்
1982 கண்மணி பூங்கா  Y  Y  Y ராம்குமார்
1982 சிம்லா ஸ்பெஷல்  N  Y  N
1982 மணல் கயிறு  Y  Y  Y உத்திரமேரூர் நாரதர் நாயுடு
1982 புதுக்கவிதை  N  Y  N
1983 டௌரி கல்யாணம்  Y  Y  Y கணேஷ்
1984 நல்லவனுக்கு நல்லவன்  N  Y  Y ஓனர் கங்காதரன்
1984 புயல் கடந்த பூமி  Y  Y  Y நமச்சிவாயன்
1984 ராஜதந்திரம்  Y  Y  Y பைரவன்
1984 வாய்ச்சொல்லில் வீரனடி  Y  Y  Y வேங்கைபுலி வரதாச்சாரி
1984 நாணயம் இல்லாத நாணயம்'  Y  Y  Y வீரபாண்டி
1984 ஊருக்கு உபதேசம்  N  N  Y சங்கரன்
1985 புதிய சகாப்தம்  Y  Y  Y ராமதசரதன்
1985 அவள் சுமங்கலிதான்  Y  Y  Y வாட்ச்மேன் ஆறுமுகம்
1985 கெட்டிமேளம்  Y  Y  Y
1985 சிதம்பர ரகசியம்  Y  Y  Y பீமராவ்
1986 மிஸ்டர். பாரத்  N  Y  Y குமரேச கவுண்டர்
1986 சம்சாரம் அது மின்சாரம்  Y  Y  Y அம்மையப்ப முதலியார் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
1986 ஊமை விழிகள்  N  N  Y ரத்னசபாபதி
1986 மெல்லத் திறந்தது கதவு  N  N  Y துளசியின் தந்தை
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு  N  N  Y
1986 ஆனந்தக்கண்ணீர்  N  N  Y
1987 அடடே ஆதாரம்  Y  Y  Y தெலுங்கு திரைப்படம்
1987 திருமதி ஒரு வெகுமதி  Y  Y  Y நாகர்கோவில் நாதமுனி
1987 காவலன் அவன் கோவலன்  Y  Y  Y பிரபுவின் மாமனார்
1988 பெண்மணி அவள் கண்மணி  Y  Y  Y ரேடியோ மாமா
1988 வீடு மனைவி மக்கள்  N  N  Y சுப்பையா பிள்ளை
1988 மாப்பிள்ளை சார்  N  N  Y
1988 சகலகலா சம்மந்தி  Y  Y  Y மாயவரம் சம்மந்தி
1990 வரவு நல்ல உறவு  Y  Y  Y அப்பா அம்பலவானர் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
1990 வேடிக்கை என் வாடிக்கை  Y  Y  Y காவிசட்டை கந்தசாமி
1992 மன்னன்  N  N  Y விசுவநாதன்
1992 உரிமை ஊஞ்சலாடுகிறது  Y  Y  Y கஸ்தூரியின் தந்தை
1992 நீங்க நல்லா இருக்கணும்  Y  Y  Y சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது
1993 உழைப்பாளி  N  N  Y வழக்குரைஞர்
1993 சின்ன மாப்ளே  N  N  Y கல்யாண புரோக்கர்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா  Y  Y  Y பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வா மகளே வா  Y  Y  Y விசுவநாதன்
1994 வனஜா கிரிஜா  N  N  Y தொழிலதிபர் ராமநாதன்
1994 வாங்க பார்ட்னர் வாங்க  N  N  Y கணபதி
1995 மாயாபசார்  N  N  Y
1995 காட் பாதர்  N  N  Y தெலுங்கு திரைப்படம்
1996 இரட்டை ரோஜா  N  N  Y சிறப்புத் தோற்றம்
1996 மீண்டும் சாவித்திரி  Y  Y  Y நாராயண மூர்த்தி
1997 நேசம்  N  N  Y
1997 அரவிந்தன்  N  N  Y
1997 அடிமைச் சங்கிலி  N  N  Y
1997 வாசுகி  N  N  Y ராமசாமி
1997 அருணாச்சலம்  N  N  Y வழக்கறிஞர். ரங்காச்சாரி
1997 சிஷ்யா  N  N  Y
1997 வாய்மையே வெல்லும்  N  N  Y
1998 பகவத் சிங்  N  N  Y
1999 அன்புள்ள காதலுக்கு  N  N  Y
1999 மன்னவரு சின்னவரு  N  N  Y
2000 காக்கைச் சிறகினிலே  N  N  Y
2000 வானவில்  N  N  Y
2001 சிகாமணி ரமாமணி  Y  Y  Y சுந்தரமூர்த்தி
2001 கிருஷ்ணா கிருஷ்ணா  N  N  Y வழக்கறிஞர் விசுவநாதன் சிறப்புத் தோற்றம்
2001 மிடில் கிளாஸ் மாதவன்  N  N  Y வழக்கறிஞர்
2001 வடகுபட்டி மாப்பிள்ளை  N  N  Y கோமதி சங்கர்
2001 லூட்டி  N  N  Y
2003 தித்திக்குதே  N  N  Y
2004 மகா நடிகன்  N  N  Y
2005 ஜி  N  N  Y ராகவன்
2007 சீனாதானா 001  N  N  Y கவர்னர் சிறப்புக் கதாப்பாத்திரம்
2007 நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்  N  N  Y சிறப்புக் கதாப்பாத்திரம்
2008 எல்லாம் அவன் செயல்  N  N  Y
2009 இன்னொருவன்  N  N  Y நீதிபதி
2013 அலெக்ஸ் பாண்டியன்  N  N  Y முதல்வர்
2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து  N  N  Y நீதிபதி
2016 மணல் கயிறு 2  N  Y  Y உத்திரமேரூர் நாரதர் நாயுடு

சின்னத்திரை/தொலைக்காட்சியில் தொகு

சன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "CHATTING for a cause". The Hindu. 19 August 2004 இம் மூலத்தில் இருந்து 11 Sep 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041019131223/http://www.hindu.com/mp/2004/08/19/stories/2004081900020100.htm. 
  2. "TANTIS". tamilfilmdirectorsassociation.com. Archived from the original on 11 Sep 2019. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. "உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்..!". Dinamalar. 22 March 2020. Archived from the original on 22 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/mar/22/veteran-kollywood-director-visu-passes-away-at-74-2120181.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசு&oldid=3748364" இலிருந்து மீள்விக்கப்பட்டது