அகணிய உயிரி

அகணிய உயிரி அல்லது உட்பிரதேசத்திற்குரிய உயிரி (endemism) என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும். இத்தகைய உயிரிகள் சூழ்நிலை சீர்கேடால் மிகவும் பாதிப்படையக்கூடியதாகும். ஆதலால் உலகெங்கிலும் உள்ள உட்பிரதேசத்திற்குரிய உயிரிகளை காப்பதற்கு அரசுகளும் நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அகணிய விலங்குகள்

தொகு
 
கேழல்மூக்கன் - மேற்குத் தொடர்ச்சி மலையின் அகணிய விலங்கு
 
கேழல்மூக்கன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இடங்கள்

கேழல்மூக்கன் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. 2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-26. Retrieved 2009-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகணிய_உயிரி&oldid=4159523" இலிருந்து மீள்விக்கப்பட்டது