அகத்திணை வாயில்கள்

தலைவன்-தலைவி மாட்டு நல்லுறவு அமையத் தூது செல்வோரை அகத்திணை வாயில்கள் என்பர்.

அகவொழுக்கம் உள்ளத்தில் பதிந்து கிடக்கும் ஒழுக்கம். பிறருக்குப் புலப்படுத்த முடியாத உடலுறவு பற்றியது. இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும் திருமணத்துக்கு முன் அமையின் தூற்றப்படும். தூற்றுதலை அலர் என்பர். தலைவன்-பரத்தை உறவு பழிக்கப்படும்.

இந்த வாயில்கள் யார் யார் எனத் தொல்காப்பியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். (கற்பியல் 52)

 1. தோழி,
 2. தாய்,
 3. பார்ப்பான்,
 4. பாங்கன்,
 5. பாணன்,
 6. பாடினி,
 7. இளையர்,
 8. விருந்தினர்,
 9. கூத்தர்,
 10. விறலியர்,
 11. அறிவர்,
 12. கண்டோர்

என்னும் 12 பேர் வாயில்கள். இவர்களை வீட்டுக்குள் நுழைய இடம் தரும் வாயிலோடு ஒப்பிடலாம்.

காண்கEdit