அகநானூறு பழைய உரை

அகநானூறு பழைய உரை 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 1285 (கொல்லம் 460) ஆண்டில் தோன்றிய உரை இது. இதில் அகநானூறு முதல் 90 பாடல்களுக்குக் குறிப்புரை தரப்பட்டுள்ளது. அருந்தொடர்ப் பொருள், துறை விளக்கம், உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள் ஆகியவற்றைச் சுட்டுவதோடு, பழந்தமிழரின் பழக்க வழக்கங்களையும், இயல்புகளையும் இவ்வுரை எடுத்துக் காட்டுகிறது.

சொல்விளக்கம்
  • பொங்கழி என்பது தூற்றாம்பொலி [1]
  • செண்ணுதல் என்பது கைசெய்தல், செண்ணுதலால் செண் என்று கொண்டைக்குப் பெயராயிற்று.[2]
  • விலங்கமர் கண்ணன் – ஒருக்கடித்துப் பார்க்கும் கண்ணனாய் [3]
  • கோடி – திருவணைக்கரை [4]
வடசொல் விளக்கம்
  • மகனே – ஒரு புருஷன் [5]
  • நீள் எரி – மிக்க உஷ்ணம் [6]
  • ஏமம் – ரக்ஷை [7]
வழக்கம்
  • ஓர்இல் – சதுர்த்தி அறை, நாலாம்நாள் பள்ளியறை [8]

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. அகம் 37
  2. செண்ணியல் சிறுபுறம் நன்னுதல் – அகம் 59
  3. அகம் 54
  4. வென்வேல் கவுணியர் தொன்முது கோடி – அகம் 70
  5. அகம் 48
  6. அகம் 51
  7. அகம் 84
  8. அகம் 86
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகநானூறு_பழைய_உரை&oldid=3176434" இலிருந்து மீள்விக்கப்பட்டது