அகல் தாக்ஹ்ட் விரைவுவண்டி

அகல் தாக்ட் விரைவுவண்டி (Akal Takht Express) இந்திய ரயில்சேவைகளில் மிகவும் முக்கியமான தொடருந்து சேவையாகும். இது இந்தியாவின் கிழக்குப் பகுதியான கொல்கத்தாவினை, வடக்குப் பகுதியான அமிர்தசரஸ் உடன் இணைக்கிறது. இது ஒரு அதிவிரைவு ரயில் சேவையாகும். இது 1900 கிலோ மீட்டர் தூரத்தினைச் சராசரியாக மணிக்கு 63 கிலோ மீட்டர் வேகத்தில் அடைகிறது. இதில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் மற்றும் சாய்வு வசதி கொண்ட இருக்கைகள் மற்றும் பொதுவான வகையிலான இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைந்துள்ளன. சரக்கறைக்கான வசதிகள் இந்த ரயில் வசதிகளுடன் வழங்கப்படுவதில்லை.[1][2]

மேற்கு வங்காளத்தின் சந்தன்பூரில், அமிர்தசரஸ் நோக்கிச் செல்லும் அகல் தாக்ட் விரைவுவண்டி- 12317.
அகல் தாக்ஹ்ட் விரைவு ரயில் (கொல்கத்தா - அமிர்தசரஸ்) வழித்தடம்

முக்கிய ரயில் நிறுத்தங்கள்

தொகு

அசன்சோல், ஜஸிடிஹ், ஜாஜ்ஹா, பாட்னா, முகல் சாரை, வாரணாசி, லக்னோ, சஹரன்பூர், அம்பாலா காண், லுதியானா மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களை முக்கிய ரயில் நிறுத்தங்களாகக் கொண்டுள்ளது.[3]

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்

தொகு
எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு

நாள் பாதை
1 சேல்டாஹ்

(SDAH)

தொடக்கம் 07:40 0 0 கி.மீ 1 1
2 அசன்சோல்

சந்திப்பு (ASN)

10:35 10:40 5 நிமி 207 கி.மீ 1 1
3 மதுபூர்

சந்திப்பு (MDP)

11:44 11:46 2 நிமி 288 கி.மீ 1 1
4 ஜஸிடிஹ்

சந்திப்பு (JSME)

12:12 12:14 2 நிமி 317 கி.மீ 1 1
5 ஜாஜ்ஹா

(JAJ)

13:12 13:17 5 நிமி 361 கி.மீ 1 1
6 கியூல்

சந்திப்பு (KIUL)

13:54 13:56 2 நிமி 415 கி.மீ 1 1
7 மோகமேஹ்

சந்திப்பு (MKA)

14:27 14:29 2 நிமி 449 கி.மீ 1 1
8 பாட்னா

சாஹேப் (PNC)

15:21 15:22 1 நிமி 528 கி.மீ 1 1
9 பாட்னா

சந்திப்பு (PNBE)

16:05 16:15 10 நிமி 538 கி.மீ 1 1
10 முகல்

சாரை சந்திப்பு (MGS)

19:27 19:47 20 நிமி 750 கி.மீ 1 1
11 வாரணாசி

சந்திப்பு (BSB)

20:30 20:40 10 நிமி 767 கி.மீ 1 1
12 சுல்தான்பூர்

(SLN)

22:48 22:50 2 நிமி 910 கி.மீ 1 1
13 லக்னோ

(LKO)

02:10 02:25 15 நிமி 1050 கி.மீ 2 1
14 பரெய்லி

(BE)

06:18 06:23 5 நிமி 1285 கி.மீ 2 1
15 மொரதாபாத்

(MB)

07:50 08:00 10 நிமி 1376 கி.மீ 2 1
16 நஜிபாபத்

சந்திப்பு (NBD)

09:32 09:34 2 நிமி 1474 கி.மீ 2 1
17 சஹரன்பூர்

(SRE)

11:20 11:30 10 நிமி 1568 கி.மீ 2 1
18 அம்பாலா

காண்ட் சந்திப்பு (UMB)

12:50 13:00 10 நிமி 1649 கி.மீ 2 1
19 லுதியானா

சந்திப்பு (LDH)

14:32 14:40 8 நிமி 1763 கி.மீ 2 1
20 ஜலந்தர்

நகரம் (JUC)

15:38 15:43 5 நிமி 1820 கி.மீ 2 1
21 பியஸ்

(BEAS)

16:21 16:22 1 நிமி 1856 கி.மீ 2 1
22 அமிர்தசரஸ்

சந்திப்பு (ASR)

17:20 முடிவு 0 1898 கி.மீ 2 1

வண்டி எண் 12317

தொகு

இது சேல்டாஹ் சந்திப்பில் இருந்து, அம்பாலா காண்ட் சந்திப்பு வரை செயல்படுகிறது. 29 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 16 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 56 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 1661 கிலோ மீட்டர் தொலைவினை 29 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்களில் கடக்கிறது. இது சேல்டாஹ் மற்றும் அம்பாலாவிற்கு இடைப்பட்ட 325 ரயில் நிறுத்தங்களில் 16 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 10 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[4]

L – SLR – GS – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S9 – S10 – S11 – B1 – B2 – B3 – B4 – B5 – A1 – HA1 – S12 – S13 – GS – SLR

வண்டி எண் 12318

தொகு

இது அமிர்தசரஸ் சந்திப்பில் இருந்து சேல்டாஹ் சந்திப்பு வரை செயல்படுகிறது. 33 மணி நேரம் 15 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 21 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 57 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 1911 கிலோ மீட்டர் தொலைவினை 33 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது. அமிர்தசரஸ் மற்றும் சேல்டாஹ் சந்திப்புகளுக்கு இடைப்பட்ட 363 ரயில் நிறுத்தங்களில் 21 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக இரு நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக 56 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[5]

L – SLR – GEN – S13 – S12 – S11 – S10 – B5 – B4 – B3 – B2 – B1 – A1 – HA1 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 – GEN – SLR

மேற்கோள்கள்

தொகு
  1. "Akal Takht Express/12317 SuperFast Kolkata Sealdah/SDAH to Ambala Cantt./UMB - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் July 24, 2015.
  2. "Akal Takht Express/12318 SuperFast Amritsar/ASR to Kolkata Sealdah/SDAH - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் July 24, 2012.
  3. "Akal Takht Express Time Table". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் July 4, 2023.
  4. "Stations between Sealdah and Ambala Cantt. Junction". indian rail info. பார்க்கப்பட்ட நாள் July 24, 2015.
  5. "Stations between Amritsar Junction and Sealdah". indian rail info. பார்க்கப்பட்ட நாள் July 24, 2015.