அகவலோசை

ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவலோசை. அகவல் என்பது ஆசிரியப்பாவின் இன்னொரு பெயராகும்.

அகவலோசை மூன்று வகைப்படும்:

  1. ஏந்திசை அகவலோசை
  2. தூங்கிசை அகவலோசை
  3. ஒழுகிசை அகவலோசை

ஏந்திசை அகவலோசைதொகு

ஏந்திசை அகவலோசை எனப்படுவது நேரொன்று ஆசிரியத்தளைகளை (மா முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.

தூங்கிசை அகவலோசைதொகு

தூங்கிசை அகவலோசை எனப்படுவது நிரையொன்று ஆசிரியத்தளைகளை (விளம் முன் நிரை) மட்டுமே கொண்டிருக்கும்.

ஒழுகிசை அகவலோசைதொகு

ஒழுகிசை அகவலோசை எனப்படுவது இருவகை ஆசிரியத்தளைகளும் சேர்ந்து வரும் (நேரொன்று ஆசிரியத்தளை மற்றும் நிரையொன்று ஆசிரியத்தளை).


"https://ta.wikipedia.org/w/index.php?title=அகவலோசை&oldid=2266476" இருந்து மீள்விக்கப்பட்டது