அகவூர் நாராயணன்

மலையாள எழுத்தாளர்

அகவூர் நாராயணன் (Akavoor Narayanan) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான மலையாள எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஆலுவ யுசி கல்லூரியிலும், பின்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் வேதியியலும் பயின்றார். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அகவூர் மனாவில் 1929 ஆம் ஆண்டு பிறந்த நாராயணன் இளமைக் காலத்தில் வேதமும், சமசுகிருதமும் கற்றார். ஆலுவ யுசி கல்லூரியிலும், பின்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் வேதியியலும் பயின்றார். நம்புதிரிபாத் திருச்சூர் சிறீ கேரள வர்மா கல்லூரியில் மலையாள விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] பின்னர், மலையாள எழுத்துலகில் பிரபலமாகினார்.

ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு, அவர் வேலையை விட்டுவிட்டு, 1961-ல் புதுதில்லிக்கு இடம்பெயர்ந்து ஒலி-ஒளிசார் விளம்பர இயக்குநரகத்தில் பணிபுரிந்தார்.

பின்னர், தில்லி பல்கலைக்கழகத்தில் 1968ஆம் ஆண்டு மலையாள விரிவுரையாளராக சேர்ந்தார், 1994-ல் ஓய்வு பெறும் வரை அங்கேயே இருந்தார்.

மலையாள இலக்கியத்தின் பிரபல அறிஞரும் விமர்சகருமான அகவூர் நாராயணன் தனது 80 ஆவது வயதில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "അകവൂര്‍ നാരായണന്‍". Keralaliterature.com. 14 October 2017.
  2. "Akavoor Narayanan is no more". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகவூர்_நாராயணன்&oldid=3596982" இலிருந்து மீள்விக்கப்பட்டது