அகில் பாரத் நேபாள் எக்டா சமாஜ்
அகில் பாரத் நேபாள் எக்டா சமாஜ் (Akhil Bharat Nepali Ekta Samaj (ABNES)) இந்தியாவில் இயங்கும் அமைப்பு ஆகும். இது இந்தியாவில் வசிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது ஒற்றுமையைக் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஆகும்.[1] 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் உள்துறை அமைச்சு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்து அதைத் தடை செய்தது.[1][2] அரசின் இந்த அறிவிப்பிற்குப் பின்னர் இந்த அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டு சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கவனம் செலுத்தப் போவதாக இந்த அமைப்பின் செயல் உறுப்பினரான ஜெனார்த்தன் தாப்பா ( Janardhan Thapa, central committee) அறிவித்தார்..[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Extremist Group - Akhil Bharat Nepali Ekta Samaj (ABNES)". Satp.org. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
- ↑ "::Ministry of Home Affairs::". Mha.gov.in. 2011-12-07. Archived from the original on 2013-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.