அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை

அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை (Pan-Americanism) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் இராஜதந்திர, அரசியல், பொருளாதாரத் திட்டங்ங்கள் வழியாக தங்கள் வணிக நலன்களை பேண உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகும்.

வரலாறு தொகு

அமெரிக்காக் கண்டமானது, வட பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், நடுப் பகுதியில் மெக்சிகோவும், தெற்குப் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆகப் பல நாடுகள் சேர்ந்த ஒரு பெரு நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. இந் நாடுகளெல்லாம் பலவகைக் கொள்கை வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளவைய. என்றலும் இக்கண்டத்து நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால் அது எல்லா நாடுகளின் நலத்திற்கும் ஏற்றதாக இருக்கும் என கருதின. 1889இல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாடானது தனது வாணிப நலன்களை நோக்கமாகக் கொண்டு இந்த ஐக்கிய முயற்சியில் ஈடுபட்ட்து. ஆயினும் லத்தின் அமெரிக்க நாடுகள் இந்த விசயத்தில் அமரிக்க ஐக்கிய நாடுகளை நம்பாததால் இம் முயற்சி எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. 1823இல் மன்ரோ தோற்றுவித்த கொள்கை அமெரிக்காக் கண்டத்தில் பிறர் தலையீட்டைக் கண்டித்ததாயினும் 1904இல் தியடோர் ரூஸ்வெல்ட் இக்கொள்கையிற் செய்தத் திருத்ததால் கரீபியன் கடல் தகராறில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிட முடிந்தது. இதனால் அமெரிக்க ஐக்கிய நாடுகலிடம் தென் அமெரிக்கப் பகையுணர்ச்சி வளர்ந்தது. 1928லிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற அமெரிக்க நாடுகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ளத் தொடங்கின. அப்போதிலிருந்து அகில அமெரிக்காவும் ஒன்றுபட்டு வெளிநாட்டு விவகாரங்களை நடத்த வேண்டும் என்பது ஒரு கொள்கையாயிற்று. இக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவர வாஷிங்டன், மெக்சிகோ நகரம் ,ரீயோடிஐனெரோ, போனஸ் அயர்ஸ், சான்டியாகோ, ஹவானா, மான்டி, விடியோ முதலிய இடங்களில் பல மாநாடுகள் நடை பெற்றன. இம்மாநாடுகளால் எட்டப்பட்ட கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்த அகில அமெரிக்க ஐக்கியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகமானது வாஷிங்டனில் நிறுவப்பட்டது.

அமெரிக்க நாடுகளிடையே எற்படும் விவகாரங்களைச் அமைதிவழியில் தீர்ப்பதும், பொருளாதார, பண்பாட்டு, சமூக ஒற்றுமையை வளர்ப்பதும் இந்த அமைப்பின் நோக்கங்களாக கூறப்பட்டன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 22. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.