அகில இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கம்
அகில இந்திய கவின் கலை மற்றும் கைவினைச் சங்கம் (All India Fine Arts and Crafts Society ) என்பது இந்தியாவின் பண்டைய அழகுக்கலைகளையும் பிற்கால அழகுக்கலைகளையும் பற்றி ஆய்வு செய்வதையும் மதிப்பிடுவதையும், வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பானது தில்லியில் 1928ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பின் பல தசாப்தங்களுக்குப் பிறகு இதன் செயல்பாடுகளானது லலித் கலா அகாதமி, சங்கீத நாடக அகாதமி, சாகித்திய அகாதமி ஆகிய மூன்று நடுவண் அமைப்புகளுக்கு மாற்றப்பட்டன. இது ஆண்டுதோறும் தில்லியில் அழகுக்கலைப் பொருட்காட்சியை நடத்துகிறது. மேலும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குகிறது. நடமாடும் அழகுக்கலைப் பொருட்காட்சி என்று ஒன்று அமைக்கப் பெற்று முக்கிய நகரங்களில் நடைபெற்று வந்துள்ளது. இது இந்திய கவின்கலைப் பொருள்களை அயல்நாடுகளிலும் அயல் நாட்டு கவின்கலைப் பொருள்களை இந்தியாவிலும் பொருட்காட்சியாகக் காட்டி வருகிறது. ரூபலேகை என்ற அரையாண்டு இதழையும், கலைச் செய்திகள் (Art News) என்ற காலாண்டு இதழையும் பல ஆண்டுகள் நடத்திவருகிறது. இதன் பழைய இதழ்களை 2010இல் சங்கத்தின் இணையதளத்தில் வெளியிட்டது.
மேற்கோள்கள்
தொகு- "Platinum jubilee of a golden era...". தி இந்து. 12 August 2002. https://www.thehindu.com/thehindu/mp/2002/08/12/stories/2002081200600200.htm. பார்த்த நாள்: 13 July 2018.