அகோர முனிவர்

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்

அகோர முனிவர் அல்லது அகோரத் தம்பிரான் என்பவர் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞராவார். வடமொழி, தென்மொழி ஆகியவற்றில் வல்லவரான இவர் திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர். இவர் கும்பகோணப் புரணம், திருக்கனப்பேர்ப் புராணம், வேதாரணிய புராணம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மேலும் இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் எனப்படுகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "அகோர முனிவர்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 24. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோர_முனிவர்&oldid=2680985" இலிருந்து மீள்விக்கப்பட்டது