அக்கறை (அமைப்பு)

(அக்கறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அக்கறை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஓர் அமைப்பு. இது பத்திரிகையாளர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், சமூக சேவகர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் கூடிக் கருத்துப் பறிமாற்றம் செய்யும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை ஐந்து மணித்துளிகளுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான "அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்" வடிவமைத்தவரும், குமுதம் "அரசு" பதில்கள் தருபவரில் ஒருவருமான ஜ. ரா. சுந்தரேசன் என்ற பாக்கியம் ராமசுவாமி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை அக்கறை கூட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்.

உறுப்பினர்கள் தொகு

எழுத்தாளர்கள் ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், அறந்தை மணியன், நகுபோலியன், இனியவன், லேனா தமிழ்வாணன், பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு-அகஸ்தியன்), திருப்பூர் கிருஷ்ணன், வாதூலன், தூர்தர்ஷன் நடராஜன், மானஸா (எஸ்.சந்திரமௌலி), விஸ்வபாலா (பாலா விஸ்வநாதன்), காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, சியாமளா சுவாமிநாதன், மெலட்டூர் நடராஜன், இசைக்கலைஞர்கள் கௌசல்யா சிவக்குமார், நகைச்சுவை நடிகர் எஸ். வி. சேகர், நாடக நடிகர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி, பம்பாய் கண்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம்.உமர், மக்கள் தொடர்பு ஈ.வெ.ரா.மோகன் ஆகியோர் அக்கறை குழுவின் உறுப்பினர்களில் ஒரு சிலர் ஆவர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கறை_(அமைப்பு)&oldid=2266514" இலிருந்து மீள்விக்கப்பட்டது