அக்கில் தீவு
அக்கில் தீவு (Achill island, /ˈækəl/) என்பது அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையோரம் 54° 00” வடக்கு 10° 00” மேற்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான தீவு ஆகும். அயர்லாந்தின் நிலப்பரப்பிலிருந்து அச்சில் தீவு ஆழ்கடலினால் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பு 145 சதுர கி.மீ. சிலீன் குரோக்கான், சிலிவ் மோர் என்ற இரு உயரமான மலைமுகடுகள் இத்தீவிலுள்ள பகுதிகளாகும். இவை முறையே 668 மீட்டர், 672 மீட்டர் உயரமுடையவை. அதிக அளவு சதுப்பு நிலப்பரப்பையும் அழகிய கடலோரப் பகுதிகளையும் இத்தீவு கொண்டுள்ளது. மீன் பிடித்தலும் விவசாயமும் இத்தீவின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலாத் துறையின் மூலமும் கோடைக் காலத்தில் இங்கிருந்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளுக்கு சென்று உழைக்கும் விவசாயிகள் மூலமும் இத்தீவிற்கு ஓரளவு வருவாய் கிடைக்கிறது.
உள்ளூர் பெயர்: அக்கைல், ஒய்லியான் அக்லா | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 53°57′50″N 10°00′11″W / 53.96391°N 10.00303°W |
தீவுக்கூட்டம் | அக்கில் |
மொத்தத் தீவுகள் | 3 (அக்கில், இனிசுபிகில், அக்கில்பெக் தீவுகள்) |
முக்கிய தீவுகள் | அக்கில் |
பரப்பளவு | 36,572 ஏக்கர்கள் (14,800 ha) |
கரையோரம் | 128 km (79.5 mi) |
உயர்ந்த ஏற்றம் | 688 m (2,257 ft) |
உயர்ந்த புள்ளி | குரோகன் |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 2,569 |
அடர்த்தி | 17.3 /km2 (44.8 /sq mi) |
மேற்காேள்கள்
தொகு- அறிவியல் களஞ்சியம் தொகுதி - 1, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- ↑ "Island Change in Population, 1841 - 2011". 28 January 2013.