அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து

அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து (October 1926 Air Union Blériot 155 crash) என்பது ஏர் யூனியன் பிலெரியெட் 155(Air Union Blériot 155) வகை வானூர்தி 1926 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 2 ஆம் நாள் நடுவானில் தீப்பிடித்து, அவசரகால தரையிறக்க முயற்சியின்போது லே, கென்ட் (Leigh, Kent) என்னுமிடத்தில் மோதியதால் நிகழ்ந்த விபத்து. இந்த விபத்தில் வானூர்தி குழுவினர் இருவர், ஐந்து பயணிகள் உட்பட, மொத்தம் 7 பேர்,[1](அனைவரும்) கொல்லப்பட்டனர். சம்பவகாலத்தில் பிலெரியெட் 155 F-AICQ வானூர்தி, பறந்தநிலையில் தீப்பிடித்ததால் விமானிகள் அவசர தரையிறக்கம் செய்ய விழைந்த அதேநேரம் பலத்த காற்று வீசி வானூர்தி கட்டுபாடற்ற நிலையில் தளத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இது, வானூர்தியினுள் நிகழ்ந்த முதல் தீவிபத்து.

ஒக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து
Blériot 155 F-AICQ Clement Ader.
Blériot 155 F-AICQ Clement Ader, the accident aircraft.
விபத்து சுருக்கம்
நாள்2 ஒக்டோபர் 1926
சுருக்கம்வானூர்தி தீ
இடம்லே, கென்ட்  இங்கிலாந்து
51°13′02″N 0°11′49″E / 51.21722°N 0.19694°E / 51.21722; 0.19694
TQ 535 487
பயணிகள்5
ஊழியர்2
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்7
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபிலெரியெட் 155
வானூர்தி பெயர்கிளமெண்ட் அதர் (Clement Ader)
இயக்கம்ஏர் யூனியன்
வானூர்தி பதிவுF-AICQ
பறப்பு புறப்பாடுபாரிசு – லே, பௌர்கெட் வானூர்தி தளம்
சேருமிடம்கிரொய்டன் வானூர்தி தளம், கிரொய்டன், ஐக்கிய இராச்சியம்

இழப்பு விவரம்

தொகு
தேசியம் வானூர்திக் குழு பயணியர் மொத்தம்
  இங்கிலாந்தியர் 5 5[2]
  பிரான்சு நாட்டினர் 2 2[2]
மொத்தம் 2 5 7[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1926 - planecrashinfo
  2. 2.0 2.1 2.2 "Appalling Air Liner Disaster". Tonbridge Free Press (10 October 1926): p. p10. 

புற இணைப்புகள்

தொகு