ஆக்கினேய புராணம்

(அக்னி புராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆக்கினேய புராணம் அல்லது அக்கினி புராணம் (சமஸ்கிருதம்:अग्नि पुराण, அக்னி புராணா) என்பது பதினெண் புராணங்களில் எட்டாவது புராணமாகும். இப்புராணம் பதினைந்தாயிரம் (15,000) புராணங்களை உள்ளடக்கியது. அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் என்பதால் அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது.

இப்புராணம் வியாசரால் தொகுக்கப்பட்டது[1] இதில் 8000 கிரந்தங்கள் உள்ளன. இப் புராணத்தில் சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விளக்கம், மருந்தியல், சோதிடம் போன்றவை சொல்லப்பட்டு உள்ளன.

திருமாலின் தசாவதாரங்கள், புத்தர், பிரத்யும்னன் அநிருத்தன், பிரம்மன், பரந்தாமன், ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், விஷ்வக்சேனர், சண்டிகை, துர்க்கை, சரசுவதி, கங்கை, யமுனை, பிராம்மி, சங்கரி, கவுமாரி, வராகி, இந்திராணி, விநாயகர், முருகன் என பல தெய்வங்களின் திருமேனிகளை அமைக்கும் விதம் பற்றி இந்நூலில் குறிப்புள்ளது. தீர்த்த குளங்களில் நீராடுதல், தெய்வ ஆராதனை வழிமுறைகள் பற்றி குறிப்படப்பட்டுள்ளது.[2]


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கினேய_புராணம்&oldid=3436410" இலிருந்து மீள்விக்கப்பட்டது