அக்ரா கவுர் அணை

பாக்கித்தான் நாட்டிலுள்ள அணை

அக்ரா கவுர் அணை (Akra Kaur Dam) பாக்கித்தான் நாட்டின் பலுச்சிசுத்தான் மண்டலத்தில் இருக்கும் துறைமுக நகரமான குவாடர் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. சில நேரங்களில் அங்காரா கவுர் அணை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த அணை 1995 [1] ஆம் ஆண்டு 24 மில்லியன் டாலர் செலவில் [2] குவாடர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர் வழங்குவதற்காக கட்டப்பட்டது. குவாடர் மாவட்டப் பகுதி மக்களுக்கு நீர் வழங்குவதற்கான ஒரே ஆதாரம் இந்த அணை மட்டுமேயாகும். அக்ரா கவுர் அணை 17,000 ஏக்கர்கள் (6,900 ha; 27 sq mi) பரப்பளவு கொண்டதாக உள்ளது.

அக்ரா கவுர் அணை
Akra Kaur Dam
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Balochistan Pakistan" does not exist.
நாடுபாக்கித்தான்
அமைவிடம்குவாடர் மாவட்டம், பலுச்சிசுத்தான்
புவியியல் ஆள்கூற்று25°21′29″N 62°16′44″E / 25.35806°N 62.27889°E / 25.35806; 62.27889
நிலைசெயல்பாட்டில்
திறந்தது1995
கட்ட ஆன செலவு$24 மில்லியன்
உரிமையாளர்(கள்)பலுச்சிசுத்தான் அரசாங்கம்

2005 ஆம் ஆண்டில் இப்பகுதியில் பெய்த மழையால் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்பட்டு, பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின மற்றும் குறைந்தது 20 உயிர்கள் கொல்லப்பட்டன. [3] 2012 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான வண்டல் படிவு காரணமாக அணை முற்றிலும் வறண்டுவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது உள்ளூர் மக்களுக்கு கடுமையான குடிநீர் பற்றாக்குறை உட்பட கடுமையான குடிநீர் விநியோக சவால்களை ஏற்படுத்தியது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Water Supply Scheme Gwadar Town". Government of Balochistan. Archived from the original on 21 March 2019. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  2. "Dams & Barrages". NESPAK. Archived from the original on 21 August 2003. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  3. "Flood havoc in Gwadar after dam overflow". Dawn News. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  4. Gwadar risks becoming ghost town due to water shortage

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரா_கவுர்_அணை&oldid=3300926" இலிருந்து மீள்விக்கப்பட்டது