அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ்

கி.பி. 40-93 காலத்திய உரோமானிய தளபதி

அக்ரிகோலா, நீயசு சூலியசு (Gnaeus Julius Agricola) என்பவர் உரோமைப் பேரரசின் தளபதியாவார். இவர் பிரிட்டனில் உரோமானியர்களின் ஆளுயராக இருந்தவர். இவர் வடவேல்சிலிருந்த ஆதிக் குடிமக்களையும், கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கே இருந்த காலிடோனியர்களையும் வென்றார். வடபிரிட்டனில் கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களை பலப்படுத்தினார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை இவரின் மருமகனான டாசிட்டசு என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Tacitus, Agricola; Dio Cassius (Roman History 66.20) and three inscriptions found in Britain (including the Verulamium Forum inscription) also make reference to Agricola.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரிகோலா,_நீயஸ்_ஜூலியஸ்&oldid=3525598" இலிருந்து மீள்விக்கப்பட்டது