அக்ரிப்பா, ஐயுறவுவாதி

ஐயுறவுவாத மெய்யியலாளர்

அக்ரிப்பா (Agrippa, கிரேக்க மொழி: Ἀγρίππας) என்பவர் ஓர் ஐயுறவுவாத மெய்யியலாளர் ஆவார். இவர் கிபி முதல் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்திருக்கலாம்.[1] இவர் "ஐந்து ஐய அடிப்படைகள்" அல்லது பூடகங்கள் (tropes) என்ற கருத்தின் ஆசிரியர் ஆவார். இவை உறுதிவாய்ந்த அறிவின் இயலாமையை நிறுவ உருவாக்கப்பட்டன.

ஐந்து பூடகங்கள் தொகு

செக்டசு எம்பிரிக்கசு, தனது பிர்ரோனிய உருவரைகள் என்ற நூலில் இந்த ஐந்து பூடகங்களைக் குறிப்பிடுகிறார். செக்டசு கூற்றின்படி, இவை ’’மிக அண்மைய ஐயுறவுவாதிகளின்’’ பங்களிப்பாகும். டயோஜினசு லேர்ட்டியசு என்பவரின் பரிந்துரைப்படி இவை அக்ரிப்பாவின் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.[2] அவை கீழே தரப்படுகின்றன.

  • "எதிருரை" (dissent) – பொது வாழ்வின் விதிகளிலும் மெய்யியலாரின் தற்கருத்துகளிலும் நிலவும் உறுதியின்மை,
  • "ஈறிலி வரை தொடரும் நிறுவல்" – அனைத்து மெய்ப்புகளுக்குமே மேலும் ஒரு நிறுவல் தேவையென ஈறிலி வரை முடிவே இல்லாமல் தொடருதல்,
  • "சார்புநிலை" – அனைத்துப் பொருள்களுமே அவற்றிடையே உள்ள உறவுகள் மாறும்போதும் அல்லது வேறுபட்ட கண்ணோட்ட்த்தில் பார்க்கும்போதும் தாமும் மாறுகின்றன.
  • "கற்பிதம்" – உறுதிப்படுத்தும் உண்மை வெறும் கருதுகோளே
  • "சுழல்வட்டம்" –– உறுதிப்படுத்தும் உண்மையில் முடிவிலாத சுழல்வட்டம் நிலவுதல்.

[165] விவாதம் தரும் முறைமைப்படி, இயல்பு வாழ்க்கையிலும் மெய்யியலார் மொழிவிலும் முன்மொழியப்படும் பொருண்மை பற்றிய தீர்மானிக்கவியலாத எதிருரை/மறுப்பு முன்னுக்கு வருவதைக் காண்கிறோம். இதனால் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவோ எதையாவது தள்ளிவிடவோ முடிவதில்லை. எனவே நாம் தீர்ப்பை நிறுத்திவைத்தல் தான் செய்ய நேர்கிறது.. [166] ஈறிலிவரை தொடரும் முறைமைப்படி, முன்மொழியப்படும் பொருண்மையை நிறுவ முன்வைக்கும் நம்பக வாயிலுக்கே மேலுமொரு அதைப்போன்ற மெய்ப்பிக்கும் வாயில் தேவையென நாம் முடிவில்லாமல் தொடர்ந்து சொல்லலாம். எனவே எதையும் நிறுவ எங்கிருந்து தொடங்குவது. எனவே தீர்ப்பை நிறுத்திவைத்தல் இதிலும் தொடர்கிறது. [167] சார்புடைமை தரும் முறைமைப்படி, மேலே கூறியபடி,நிலவும் பொருள் அறிபவர் கருத்துப்படியும் அத்துடன் அறியப்படும் பொருளின்படியும் சார்ந்தே குறிப்பிடும் தன்மை உடையதாகிறது. ஆனால் உண்மையில் அது, அதன் தன்மையில் எப்படி இருக்கிறது என இதிலும் தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டி நேர்கிறது. [168] கருதுகோள் சார்ந்த முறைமைப்படி, ஈறிலிவரைத் தள்ளிச் செல்லும் வறட்டுவாதிகள் நிறுவப்படாத்தில் இருந்து தொடங்கினாலும் சலுகையாக மெய்ப்பு ஏதும் இன்றியே எளிதாக கற்பிதம் செய்தவொன்றை உண்மையாக கூறுவர். [169] எதிர்மாறு முறைமை, ஆய்வுக்குட்படும் பொருள் பற்றி உறுதியாக இருக்கவேண்டும்போது, ஆய்வில் உள்ள பொருளால் அது உறுதிபடுத்தப்படவேண்டும் என்ற நிலையில் நேர்கிறது எனலாம். இங்கு மற்றதை நிறுவ இரண்டில் எதையுமே தேர்ந்தெடுக்கமுடிவதில்லை. மாறாக இரண்டின் தீர்ப்பையும் நிறுத்தி வைக்கிறோம்.[3]

இந்த ஐந்து பூடகங்களைப் பொறுத்தவரையில் முதலாவதும் மூன்றாவதும் முந்தைய ஐயுறவுவாதத்தின் பத்து அடிப்படைகளைச் சார்ந்தவை.[2] கூடுதலான மூன்று பூடகங்கள் பொதுவான மறுப்புகளில் இருந்து மாறிய ஐயுறவு வாத அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.இவை புலன் உணர்வையும் தற்கருத்தையும் மறுக்கும் உயர்நுட்பம் வாய்ந்த இருப்பியல்/அப்பாலையியல் சார்ந்த ஐயவகையின் அடிப்படைகள் ஆகும்.

விக்டர் புரோசார்டு கூறுகிறபடி, “இந்த ஐந்து பூடகங்கள், வேறு யாருமே இதுவரை முன்வைக்காதவை மட்டுமல்ல, மிகவும் முனைப்பானவையும் துல்லியமானவையும் ஆகிய ஐயுறவுவாத வடிவங்கள் ஆகும். ஒருவகையில் அவை இன்றும் எதிர்க்க முடியாதனவாகவே உள்ளன.”[4]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Jowett, Benjamin (1867), "Agrippa (1)", in Smith, William (ed.), Dictionary of Greek and Roman Biography and Mythology, vol. 1, Boston: Little, Brown and Company, p. 77, archived from the original on 2006-05-22, பார்க்கப்பட்ட நாள் 2015-06-02
  2. 2.0 2.1 Diogenes Laërtius, ix.
  3. Sextus Empiricus, Pyrrhōneioi hypotypōseis i., from Annas, J., Outlines of Scepticism கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். (2000).
  4. Brochard, V., கிரேக்க ஐயுறவுவாதிகள்.

நூல்தொகை தொகு

  • Sextus Empiricus, Outlines of Pyrrhonism
  • Diogenes Laertius, Lives of the Philosophers.
  • Victor Brochard, The Greek Skeptics
  • L. E. Goodman, "Skepticism", Review of Metaphysics 36: 819-848, 1983.
  • Jonathan Barnes, The Toils of Scepticism, Cambridge 1990.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரிப்பா,_ஐயுறவுவாதி&oldid=3373124" இலிருந்து மீள்விக்கப்பட்டது