அக்ரைலேட்டு

அக்ரைலேட்டுகள் (Acrylates) என்பவை அக்ரைலிக் அமிலத்தினுடைய உப்புகள், எசுத்தர்கள், இணை காரங்கள் மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் ஆகும். அக்ரைலிக் அமிலம் 2-புரோப்பனாயிக் அமிலம் என்றும் அறியப்படுவதால் அக்ரைலேட்டுகள் புரோப்பேனோயேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அக்ரைலெட்டு அயனி CH2=CHCOO−. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. அக்ரைலேட்டுகளில் நேரடியாக கார்பனைல் கார்பனுடன் இரண்டு கார்பன் அணுக்கள் இரட்டைப் பிணைப்புகளால் இணைந்த வினைல் தொகுதிகளைக் கொண்டுள்ளன.

பயன்

தொகு

அக்ரைலேட்டுகளும் மெத்தக்ரைலேட்டுகளும் பலபடிநெகிழிகளில் பொதுவான ஒற்றைப் படிகளாகும். மெத்தக்ரைலிக் அமிலத்தின் உப்புகளும் எசுத்தர்களும் மெத்தக்ரைலேட்டுகள் எனப்படுகின்றன. அக்ரைலேட்டு பலபடிகளை உருவாக்குவதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. இரட்டைப் பிணைப்புகள் உயர் வினைத்திறன் கொண்டவை என்பதால் அக்ரைலேட்டுகள் எளிதில் பலபடியாகின்றன. சமீபத்தில், அக்ரைலேட்டு-சார்பு பன்முக சில்படிம சில்செசுகியுவாக்சைம்களின் கரிம-கனிம கலப்பு மீநுண் கட்டுருப்புத் தொகுதிகள் எஇமையாகத் தயாரிக்கப்பட்டு அவற்ரின் தூய்மையான நிலையில் பிரிக்கப்பட்டன. கலப்பு பலபடி மீநுண் தொகுப்புகள் தயாரிப்பதற்கு இவை மிகப்பயனுள்ள ஒற்றைப் படிகளாகும் [1].

உற்பத்தி

தொகு

அக்ரைலிக் அமிலத்துடன் தொடர்புடைய ஆல்ககாலை ஒரு வினையூக்கியின் முன்னிலையில் வினைபுரியச் செய்து அக்ரைலேட்டு தயாரிக்கப்படுகிறது. மெத்தனால் எத்தனால் போன்ற கீழ்நிலை ஆல்ககால்களுடன் 100-120 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியும் பொழுது பலபடித்தான் வினையூக்கிகள் (நேர் மின்னயனி மாற்றிகள்) பயன்படுத்தப்படுகின்றன. என்– பியூட்டனால்,2-எத்தில்யெக்சனால் போன்ற உயர் ஆல்ககால்கள் வினைபுரியும் பொழுது ஒருபடித்தான நிலையில் கந்தக அமிலம் வினையூக்கியாகச் செயல்படுகிறது. உயர் ஆல்ககால்களின் அக்ரைலேட்டுகளையும், கீழ்நிலை எசுத்தர்களை தைட்டானியம் ஆல்ககாலேட்டுகள் அல்லது கரிம வெள்ளீயச் சேர்மங்கள் (உதாரணம்:டைபியூட்டைல்வெள்ளீயம் டைலாரேட்டு) வினையூக்கியைப் பயன்படுத்தி உருமாற்ற எசுத்தராக்கல் வினை மூலமாக தயாரிக்க முடியும் [2].

இயற்கையில் தோற்றம்

தொகு

முன்னுயிரிகள் போன்ற ஓரணு இரைவிழுங்கிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கடல்மிதவைத் தாவரங்கள் இதைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்கப்படும் பொழுது இவற்றில் டைமெத்தில்சல்போனியோபுரோப்பியோனேட்டு லையேசு உடைந்து டைமெத்தில்சல்போனியோபுரோப்பியோனேட்டு மற்றும் அக்ரைலேட்டு சேர்மங்களாக மாறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ervithayasuporn, Vuthichai; Chimjarn, Supansa (2013). "Synthesis and Isolation of Methacrylate- and Acrylate-Functionalized Polyhedral Oligomeric Silsesquioxanes (T8, T10, and T12) and Characterization of the Relationship between Their Chemical Structures and Physical Properties". Inorg. Chem.. doi:10.1021/ic401994m. 
  2. Arpe, Hans-Jürgen (2007). Industrielle organische Chemie: bedeutende Vor- und Zwischenprodukte (6. ed.). Weinheim: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-31540-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரைலேட்டு&oldid=4030169" இலிருந்து மீள்விக்கப்பட்டது